DAEIOU - தயவு
15.3.09 சென்னை படப்பை சன்மார்க்க சங்கத்தில் கலந்தாலோசனைக் கூட்டம்.

15/3/2009 ஞாயிறு அன்று காலை 10.00 மணி-சென்னை படப்பை சன்மார்க்க சங்கம் கலந்தாலோசனைக் கூட்டம்.
வரும் 15.3.2009 ஞாயிற்றுக் கிழமை 10.00 மணி அளவில் சென்னை அருகே உள்ள படப்பை அருட் ஜோதிபுரம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் கீழ்க்காணும் பொருள் பற்றி கலந்து பேசி ஒரு முடிவு எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில், சன்மார்க்கச் சான்றோர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஆய்வுக்குரிய பொருட்கள்
  1. வள்ளலார் வரலாறு
  2. சன்மார்க்கக் கொடி
  3. ஜீவகாருண்யம் & தவம்
  4. ஒளி வழிபாடு + வள்ளலார் உருவ வழிபாடு
  5. மரணமிலாப் பெருவாழ்வு
  6. சன்மார்க்கிகளின் உடை, தலைக் கவசம் அணிதல்.
  7. பழகும் முறை
  8. ஆற்ற வேண்டிய பணிகள்
  9. மற்றும் பல.
இந்த இணைய தளத்தில் இந்தச் செய்தியினைக் காணும் அன்பர்கள், தாங்கள் சார்ந்துள்ள சன்மார்க்க சங்கங்களுக்கு, இது குறித்து தெரிவித்தும், தாங்கள் தமது கருத்துக்களை அந்தக் கலந்தாலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, மென்மையான முறையில் எடுத்துக் கூறி நல்லதொரு முடிவெடுக்க வாருங்கள் என அன்புடன் அழைக்கின்றோம்.
அன்புடன்.
பாலகிருஷ்ணன், படப்பை – செல். 99625 69966
ஜோதி கோட்டீஸ்வரன். காஞ்சீபுரம் செல். 99521 84212
சந்தானம், கொளப்பாக்கம். செல். 9962887068
மு. பாலு, ஆழ்வார் திருநகர். செல். 9444450601