DAEIOU - தயவு
சுங்கப்பட்டானி அருட்ஜோதி நிலைய அன்பர்களின் கருணைச் செயல்.

வடலூருக்கும் மலேசியாவுக்கும் தொடர்பு முத்திரை பதிப்பு.

கடந்த 8.2.2009 அன்று வடலூரில் தைப் பூச விழா மிகச் சிறப்பாக

கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் மலேசியாவிலிருந்து அருட்ஜோதி நிலைய

நிர்வாகிகள், தலைவி, டாக்டர் P. விநாயக மூர்த்தி குடும்பம்

வந்து கலந்து கொண்டனர்.

கலந்து கொண்டனர் என்பது மட்டும் சாதாரணமாகச் சொல்லி

விட முடியாது.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்ற விதத்தில்,.

அவர்கள், இங்கு வந்து ஜோதி தரிசனம் பார்த்து விட்டு, தம்மைப்

போல், உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள; மக்கள் தெரிந்து

கொள்ள வேண்டும் என்ற விதத்திலே ஜோதி தரிசனத்தை, சத்திய

ஞான சபையில் வீடியோ மற்றும், போட்டோ காட்சியாகப் பதிவு

செய்து கொண்டு, உடனே மலேசியா சென்று, அதனை இந்த இணைய

தளத்திலும் சேர்ப்பித்து, அனைவரும் காண்பதற்கு வழி வகை

செய்துள்ளனர்.

2. அவர்கள், திரு அருட்பா தெய்வ இசை அமுதம் ப்ரொஜெக்ட்

செலவிற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன் வடலூருக்கு

வந்து ரூ.50.000/- கொடுத்து விட்டுச் சென்றனர். அதைப் பற்றிய

செய்தியை அன்பர்கள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள்.

சிறப்பான - பாராட்டுவதற்குரிய தயவுப் பணிகளை அந்த அன்பர்கள்

அங்கிருந்து, இந்தியாவிற்கு வந்து செய்துவருகின்றனர். வள்ளல்

பெருமானின் பேரருட் பெருங்கருணை அவர்களுக்கு விரைவில்

கிடைக்கும் என்பது உறுதி..

அடுத்து, ஒரு மாதத்திற்கு முன்பாக மலேசியாவிலிருந்து ஸ்டீமர்

அடுப்பினை, தர்மசாலை நிர்வாகத்திற்கு தந்துள்ளனர், சில மலேசியா

அன்பர்கள். வெகு விரைவில் உணவு தயாரிக்க இது மிகவும் வசதியாக

உள்ளது.

அடுத்தபடியாக, மலேசியாவைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர் திரு தருமலிங்கம்

இங்கு வருகை தந்து, சொற்பொழிவு ஆற்றும் பணியினை மேற்கொண்டார்.

அவர், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில்

அன்னதானப் பணி செய்து கொண்டிருந்தார்.

நேரில் சந்தித்த போது சொன்னார் ... ஐயா மலேசியாவிற்கு, வள்ளலார்

மாநாடு நடத்துவதற்கு, தமிழ்நாட்டிலிருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பாக சன்மார்க்க

சான்றோர்கள் வந்திருந்தனர். எனக்கு ஏற்பட்ட ஐயத்தினை அவர்களிடம்

கேட்டேன். ஆனால் அவர்கள் எல்லோரும் மற்ற ஞானிகளும், வள்ளற் பெருமானும்

அடைந்த நிலை ஒன்றுதான் என்று சொல்லிவிட்டு வந்து விட்டனர்.

நான் திரு அருட்பாவினை அடிக்கடி படித்து, பெருமானிடம் வேண்டி நின்றதால்,

வள்ளலார் மற்ற ஞானிகளிடமிருந்து எவ்விதத்தில் உயர்ந்து நிற்கின்றார்

என்பதனையும், அவர்கள் காண்பித்துச் சென்ற சுத்த சன்மார்க்க நெறிதான்

மற்றெல்லா நெறிகளை விட உயர்ந்தது என்பதனைக் கண்டு கண்டேன். என்றார்.

அத்தகைய ஒரு அன்பர் தமது கவனத்தை எல்லாம், திரு அருட்பாவிலும்

ஜீவகாருண்யச் செயல்களிலும் ஈடுபடுத்தி, தற்போது, இந்த வருட தைப்பூச

விழாவில், வடலூர் தருமச்சாலை மேடையில், 9.2.2009 அன்று இரவு 7.45 மணிக்கு மேல்

சொற்பொழிவு நிகழ்த்தும் வாய்ப்பினைப் பெற்றார்.

திரு அருட்பாவினைப் பற்றி ஒன்றுமே தெரியாத ஒரு நிலை அவருக்கு ஒரு காலத்தில்

இருந்தது போக, தற்போது, வள்ளற் பெருமானின் தனிப் பெருங்கருணையினால்,

வடலூரில் சொற்பொழிவு செய்யும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.

அடுத்து கெமயான் என்ற ஒரு சன்மார்க்க சங்கம், மலேயாவில்

செரெம்பான் என்ற இடத்தில் இயங்கி வருகிறது., அந்த சங்கத்திலிருந்து,

சன்மார்க்க அன்பர் திரு சந்தர் வடலூருக்கு வருகை புரிந்தார். அவர்,

மலேசியாவில்கோலாலம்பூர் கல்வி அமைச்சகத்தில் தாம், உதவியாளராகப்

பணி புரிந்து வருவதாகத் தெரிவித்தார்.

இந்த நபர்களைத் தவிர, எத்தனையோ மலேசிய அன்பர்கள், வடலூருக்கு

வந்து சென்றிருக்கலாம். அவர்கள் பற்றிய சரியான விவரங்கள் இல்லை.

அதே தைப்பூச நாளில், பத்து கேவ்ஸ் என்ற மலையில் எழுந்தருளி இருக்கும்

முருகன் ஆலயத்தில், வருடந்தோறும் தைப்பூச விழா மிகச் சிறப்பாகக்

கொண்டாடப்படும். இவ் விழா நடைபெறும் நாளில், அரசு விடுமுறையும்

அங்கு உண்டு.

அந்த விசேஷத்தில் கூட கலந்து கொள்ளாமல், சுத்த சன்மார்க்க நெறியின்

பால் ஈர்ப்பு ஏற்பட்டு, இந்த அன்பர்கள் வடலூருக்கு வந்து ஜோதி தரிசனம்

செய்கின்றனர். அருள் விழைவு இவர்களிடம் எவ்வளவு உள்ளது .. என்பது,

இவர்கள், இந்தியாவில், வடலூரில் ஜோதி தரிசனம் காண்க வந்ததிலிருந்தே

தெரிந்து கொள்ளலாம்.

மலேசியாவிற்கும், வடலூருக்கும் ஒரு நெருங்கியதொடர்பினை அன்பர்கள்

ஏற்படுத்தி வருகின்றனர் என்பது மறுக்க முடியாத செய்தியே ஆகும்.