வடலூர் தைப்பூச விழா-தின மலர் நாளிதழ் செய்தி.
Ramanujam
posted 35 months ago
11 Feb 2009 00:57:42 GMT 12:57:42 AM
1787 views
(News appeared in Dinamalar,Tamil Daily, Madurai Edition dt.9.2.2009.)
வடலூரில் தைப்பூச விழா ஜோதி தரிசனம்.
லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கடலூர் பிப்.9
வடலூரில் தைப்பூச விழாவையொட்டி, வள்ளலார் சத்திய ஞான சபையில் நடந்த ஜோதி தரிசன விழாவில், பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் 138-வது தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று முந்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 6 மணிக்கு பக்தர்களுக்கு ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதனை அடுத்து, காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மற்றும் 10 மணி, இன்று (9ம் தேதி) காலை 6 மணி என ஆறு கால ஜோதி தரிசனத்தை பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த, பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் ‘அருட்பெருஞோதி தனிப்பெருங்கருணை’ என பக்தியுடன் வணங்கினர்.
விழாவையொட்டி, திருவருட்பா கருத்தரங்கம், இன்னிசை, சன்மார்க்க கருத்தரங்கம், ச்ப்ற்பொழிவு, மகாமந்திரம் ஓதுதல் ஆகியவை நடந்தது. 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வடலூர் முழுவதும் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், தமிழ சுகாதாரத்துறை அமைச்சர் எம். ஆர். கே.பன்னீர் செல்வம், கலெக்டர், ராஜேந்திர ரத்னு, எஸ்.பி, பிரதீப் குமார், டி.ஆர்.ஓ. நடராஜன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் திருமகள், நிர்வாக அலுவலர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாளை பகல் 12 மணிக்கு வள்ளலார் பயன்படுத்திய பொருள், சத்திய ஞான சபையிலிருந்து பல்லக்க்கில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மேட்டுக் குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் திரு அறை தரிசனம் காண்பிக்கப்படுகிறது.
நன்றி – தினமலர் நாளிதழ் – மதுரை பதிப்பு – நாள் 9.2.2009.
http://www.vallalarfiles.com/image/BI46YDlNHAFn,$,2bXWH0gijTw,$,3d,$,3d/sz-tn650/Thaipoosam28880000.jpg