DAEIOU - தயவு
தைப்பூசம் ஏற்படுத்திய மாற்றம்-தினத்தந்தி 7.2.09 சென்னை பதிப்பில் அரசு செய்திகள்.

7.2.2009 தினத்தந்தி சென்னை பதிப்பில் வடலூர் ராமலிங்கரின் நினைவு நாளான (8.2.2009) தைப்பூச நாள் குறித்த சில அறிவிப்புக்கள்.
வடலூர் ராமலிங்கர் நினைவு நாள்
இறைச்சி கடைகள் நாளை (8.2.2009) மூடப்படும்.
சென்னை மாநகராட்சி அறிவிப்பு.
சென்னை, பிப்.7.
நாளை 8-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) வடலூர் ராமலிங்கர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள ஆடு, மாடு மற்றும் இதர இறைச்சிகளை விற்பவர்கள் தங்களது கடைகளை மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. வியாபாரிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவல் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடலூர் ராமலிங்கர் நினைவு நாள்:
நாளை மதுபான கடைகள் மூடப்படும்.
சென்னை மாவட்ட கலெக்டர் உத்தரவு.
சென்னை, பிப்.7,
சென்னை மாவட்ட கலெக்டர் மைதிலி ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது –
தமிழ்நாடு மதுபானம் (சில்லறை விற்பனை விதிகள், 2008 விதி 12-ன் படி 8-ந் தேதி (நாளை) வடலூர் ராமலிங்கர் நினைவு நாளினை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும் எனவும், அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால், மதுபான விதி முறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் மைதிலி ராஜேந்திரன் கூறியிருக்கிறார்.
நன்றி – தினத்தந்தி நாளிதழ் – சென்னை பதிப்பு நாள் 7.2.2009
4 Comments
P Sujatha
KarunaiMughu Ramanujam Avl,
Thank you for information.I have appreciate to Chennai municipality JeevaKaruniya action.Every Person Must Following to Jeevakaruniya principle in Every day. Jeevakaruniyam is Very Importance. With Valalar Loving,
AruljothiSujatha
Monday, February 9, 2009 at 06:06 am by P Sujatha
ramesh_div66
Ivvallavu maatram vandhum vallal avadaritha marudhuril sanmrkkam nadakkavillai dhunmaarkkam ondrae nadakkirathu. Naan maruthur chendru vanthen antha ooril ottrumai illamal adi thadi mattrum polish case endru nadanthathu. ithu manathirkku migavum kastamaga irundathu.Endownment kovillai eduthum giramavaasigal kovillukkul amarnthu bill book vaithu vazul seithu varugirargal. ithanalthan intha pirachinai endru theriyavandathu. enn endownment itharkku anumathi allithathu endru theriyavillai. vallalar avatharitha ooril ithu inimellum thodaramal irunthal sanmarkkam thazikkum. thunmaarkkam oziyum.vanthanam
Thursday, February 12, 2009 at 02:55 am by ramesh_div66
Ramanujam jam
அன்பரே,
உங்களது ஆதங்கம் புரிகின்றது. இது போன்ற பல
செயல்கள் அங்கு நடைபெறுகின்றன. அனைவரும்
அறிந்த செய்திகள்தான் இது போன்றவை. வேறு
வழியில்லை. அங்கு சென்று வழிபட வேண்டியுள்ளதே.
வள்ளல் பெருமான் தான் இத்தகைய செயல்கள்
நடைபெறா வண்ணம் காக்க வேண்டும். அதற்கு
அனைவரின் சார்பில் வேண்டிக் கொள்வோமாக.
தயவுக் குழு.
Thursday, February 12, 2009 at 09:06 am by Ramanujam jam
ksvasan54
It is something revelutionery changing. Everything in the hands of
Great Saint Sri Sri Vallalar Swamigal Grace. HIS SOUL WILL GUIDE OUR WORLD EVER
K. SRINIVASAN , THIRUNINRAVUR
Saturday, February 14, 2009 at 10:24 am by ksvasan54