வள்ளற் பெருமானின் கருணையால் திறப்பு விழா கண்ட ஞான சபைகள்.
வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி பரப்பும் மையங்கள், கீழ்க்கண்ட ஊர்களில், நடப்பு 2009 தைப் பூச பெருவிழாவிற்கு முன்பே திறப்பு விழா கண்டுள்ளன.
(1) தஞ்சாவூர் டவுன் மாதாக்கோட்டை பகுதி. முயற்சி மேற்கொண்ட அன்பர் - ஓய்வு பெற்ற வட்டாட்சியர், தஞ்சாவூர் மாவட்டம்.
(2) திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை-முயற்சி மேற்கொண்ட அன்பர் திரு கலை நம்பி, திருவண்ணாமலை.
(3) வேலூர் மாவட்டம் சோளிங்கர்.-முயற்சி மேற்கொண்டவர் திரு P. விஜயன். சோளிங்கர்.
(4) மதுரை மாவட்டம் பூம்புகார் நகர்.திருமதி (APJ Arul) ராமலக்ஷ்மி.
வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி பரப்புவதற்கு, சபையாகவும், கோயிலாகவும் மேற்காணும் ஊர்களில், சுத்தசன்மார்க்க அன்பர்கள் விடா முயற்சி கொண்டு முயன்றதால், வள்ளல் பெருமானே உடன் நின்று, வெகு விரைவில் திறப்பு விழா நடைபெறுவதற்கு உறுதுணை புரிந்துள்ளார்.
(1) இவற்றிற்கெல்லாம் முன்பாக ஷ்ரீலங்கா சாவகச்சேரியில் (North west area - Jaffna) அன்ப்ர் திரு கேத்தீஸ்வரந்விஜயலக்ஷ்மி தம்பதியர் ஆகியோரின் பெருமுயற்சியால், சத்திய ஞானக் கோட்டம் கட்டியும் திறக்கப்படாத நிலை நீடித்து வருகின்றது. அந்த நாட்டில் விரைவில் நல்ல சுமுகமான சூழ் நிலை நிலவுவதற்கும், அதன் பேரில், சசவகச்சேரியில் கட்டப்பட்டுள்ள சத்திய ஞானக் கோட்டம் விரைவில் திறப்பு விழா காண்பதற்குஅருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் வேண்டி நிற்போம்.
(2) மலேசியா நாட்டில் சுங்கப்பட்டானியில் அருட்ஜோதி நிலையத்தின் மூலம் டாக்டர் திரு D.P. விநாயக மூர்த்தி அவர்கள் சத்திய ஞான சபை கட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளார். அம்முயற்சி விரைவில் நிறைவேறுவதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளை வேண்டி நிற்போம்.
(3) கோயம்புத்தூர் மாவட்டம், விளாங்குறிச்சி கிரரமத்தில் - வள்ளற் பெருமான் காலத்தில் வாழ்ந்த சமகாலத்தில், அவர்களின் நெறியின் தாக்கத்தினால், ஞான சபை கட்டப்பட்டு, அந்த சபை சிதிலமாகிக் கிடந்தது. அதனை எடுத்துக் கட்டு, மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என அன்பர்கள் முயற்சித்து வருகின்றனர். அம் முயற்சியும் விரைவில் ஈடேறுவதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளை வேண்டி நிற்போம்.
(4) மானாமதுரை வட்டத்தின் அருகில் மூங்கில் ஊரணி என்ற ஊரில் திருமதி ஜெயவள்ளி நாயகம் (க/பெ) ஜெயராம் என்பவர், சத்திய ஞான சபையினைக் கட்டி வருகின்றார். பொருளாதார உதவி பற்றாமையினால் தாமதப் பட்டு வரும் அக் காரியத்தை விரைந்து முடித்துக் கொடுப்பதற்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளை வேண்டி நிற்போம்.
இது போன்று கவனத்திற்கு வராத எண்ணற்ற சத்திய ஞான சபைகள், நாடு முழுவதிலும், பிற நாடுகளிலும், கட்டப்பட்டு வரலாம். அவை எல்லாம் விரைவில் திறப்பு விழா காண்பதற்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளை வேண்டி நிற்போம்.