DAEIOU - தயவு
வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 1.2.2009 அன்று வள்ளலார் கோயில் திறப்பு.

வேலூர் மாவட்டம் சோளிங்கர் நகரில் வள்ளற்பெருமானின் திருக் கோயில் திறப்பு விழாநடந்தேறியது.
கடந்த 1.2.2009 ஞாயிற்றுக்கிழமைஅன்று,
வேலூர்மாவட்டம்சோளிங்கர்டவுன்பஞ்சாயத்திற்குட்பட்ட சாய்பாபாநகரில்
பத்மாபுரம் என்ற இடத்தில், மலை அடிவாரத்தில், வள்ளலாரின் சுத்த
சன்மார்க்க நெறிபரப்புவதற்கென்றுசன்மார்க்கஅன்பர்திரு P. விஜயன்
(59 வயது) என்பவரின்பெருமுயற்சியால், உள்ளூர்அன்பர்களின்
பேராதரவாலும், வள்ளலார்திருக்கோவில்திறப்புவிழாகண்டது.
திரு விஜயனின் மனைவியார் திருமதி கஸ்தூரி அம்மாளும்
இப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
வள்ளலாரின்திருஉருவச்சிலைராஜஸ்தானில்செய்து வந்து
பிரதிஷ்டைசெய்யப்பட்டு, அன்றையதேதியில் திறப்பு விழா கண்டது.
காலை முதலே அருட்பாக்கள் பாராயணம் செய்யப்பட்டன.
திரு விஜயனுக்கு உதவியாக, உள்ளூர் அன்பர் திரு ஏகாம்பரம்
மற்றும் காஞ்சீபுரம் தெய்வ நிலைய செயலாளர் திரு வெங்கடேசன்
ஆகியோர் இந் நிகழ்ச்சி சிறப்புற நடைபெறுவதில் உறுதுணையாக
இருந்தனர்.
வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க செயலாளர், (முன்னாள் தஞ்சை
மருத்துவப் பல்கலைக் கழக முதல்வர்) திரு B.K. சிவராமன்,
உள்ளூர்அன்பர்கள்திருவாசுதேவன், நிறுவனர்,. சாயிராம் கோவில்,
திரு A.M. வேலு Ex.M.P மற்றும் ஷ்ரீ பாரதி வேலு பஸ் சர்வீஸ்,
சரஸ்வதி வேலு இஞ்சினியரிங் கல்லூரி, திரு B. கண்பத் ராஜ்,
சாந்தி எலக்ட்ரிகல்ஸ், சோளிங்கர், திரு R.பாலகிருஷ்ணன்,
திரு தீனன், சென்னன அருகே உள்ள படப்பை சன்மார்க்க சங்கம்,
மற்றும் அனைவரது உதவியாலும் இத் திருப்பணி நிறைவேறியது.
தமிழ்நாடு மாநிலத்திற்கு நெற்றித் திலகம் இட்டது போல,
வேலூர் மாவட்டத்தில், உள்ள இந்த சோளிங்கர் என்ற ஊரில்
வள்ளல் பெருமானின் நெறி பரப்பும் திருக்கோவில் எழுப்பியது,
அந்தப் பகுதி மக்கள் மத்தியில் ஒரு உத்வேகத்தையும் எழுச்சியையும்
கண்டுள்ளது.
காலையிலும் மதியத்திலும் ஏழை எளிய மக்களுக்கும், விழாவில்
பங்கேற்றவர்களுக்கும், அன்னதானப் பணி மிகச் சிறப்புற நடந்தது.
இந் நிகழ்ச்சி உள்ளூர் Jack T.V.மூலம் அந்த ஏரியா முழுவதும்
ஒளிபரப்பப் பட்டது.
இந்த சிறப்பு மிக்க வைபவத்தில் சுமார் 300 நபர்கள்
சோளிங்கரிலும், சுற்று வட்டாரத்தில் பல்வேறு இடங்களிலுமிருந்து
கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தொடர்ந்து இந்த வள்ளலார் திருக் கோயிலில் தினசரி காலை,
மாலை திறந்து வைக்கப்பட்டு, சன்மார்க்க நெறியினை அந்தப் பகுதியில்
பரப்புவதற்கும், தினசரி ஏழை எளிய மக்களுக்குக் கஞ்சி வார்க்கும்
பணியும் தடைபெறாது நடைபெறத் தக்க முயற்சியினை திரு பி.விஜயன்
மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து திரு பி. விஜயன் பேசும்போது, இந்த திருக் கோவிலை
எழுப்பியது போல், அருகே தருமச் சாலையினையும் கட்டுவதற்கு
திரு A.M. வேலு Ex.M.P. அவர்கள் இசைந்துள்ளார் என்ற சிறப்பான செய்தியையும்
தெரிவித்துள்ளார்.
அந்த நல்ல உள்ளங்களுக்கு சன்மார்க்க உலகம் தனது நன்றியைத் தெரிவித்துக்
கொள்கின்றது.