DAEIOU - தயவு
138வது தைப்பூச ஜோதி தரிசனம் பெருவிழா தெய்வ நிலைய அழைப்பிதழ்.

.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், வடலூர்
138-வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா அழைப்பிதழ்
தை 25 (7.2.2009) சனிக்கிழமை – கொடியேற்றம்
தை 26 (8.2.2009) ஞாயிற்றுக்கிழமை – தைப்பூச ஜோதி தரிசனம்
தை 28 (10.2.2009) செவ்வாய் -சித்திவளாகத் திரு அறை தரிசனம்.
அன்புடையீர், ஆன்மநேய இனிய வந்தனம் வந்தனம்
அருட்பெருஞ்ஜோதி திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானாரின் தனிப் பெருங்கருணையால் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.
அன்பர்கள் அனைவரும் வருகை தந்து அருட்பெருஞ்ஜோதியைத் தரிசித்து, அருளாசி பெற்று, பேரின்பப் பெருவாழ்வில் வாழ அன்போடு அழைக்கின்றோம்.
“வருவார் அழைத்துவாடி வ்டலூர் வடதிசைக்கே
வந்தாற் பெறலால் நல்ல வரமே” -- திரு அருட்பா
அனைவரும் வருக .. அருள் அமுதம் பெறுக ..
மு. இராமலிங்கம். க.நாகராஜன். M.A., B.Ed.,
தலைவர், அறங்காவலர் குழு நிர்வாக அதிகாரி.
அறங்காவலர்கள்
மு. விஜயகுமார்
து. இராமகிருஷ்ணன்
சி. கனகலட்சுமி
ம.வே. வேல்ராமலிங்கம். M.A., B.L.,
நிகழ்ச்சி நிரல்
31.1.2009 முதல் 2.2.2009 வரை-தருமச்சாலையில் மகாமந்திரம் ஓதுதல்
3.2.2009 முதல் 6.2.2009 வரை-ஞானசபையில் திருஅருட்பா முற்றோதல்
7.2.2009 சனிக்கிழமை-கொடியேற்று விழா.
காலை 5.00 மணி-அகவல் பாராயணம்
காலை 7.30 மணி-சன்மார்க்கக் கொடியேற்றுதல்-தருமச்சாலை
மருதூர் அவதார சன்னதியில் கொடியேற்றுதல் உபயம்-கிராமவாசிகள
கருங்குழி சன்னிதியில் கொடியேற்றம்-உபயம் கிராமவாசிகள்
காலை 10.00-மணி-ஞானசபையில் கொடியேற்றம்-உபயம் பார்வதிபுரம் கிராமவாசிகள்
இரவு 7.00 மணி-திருவருட்பா கருத்தரங்கம்
இடம்-தருமச்சாலை பிரசங்க மேடை
தலைமை-அருட்பா மா.கோவிந்தசாமி, விழுப்புரம்
சிறப்புரை-பேராசிரியர் வை.நமசிவாயம் M.Com.,சிதம்பரம்
தவத்திரு தருமலிங்கசுவாமிகள், மலேசியா
திரு எஸ்.நடராஜன் மாவட்ட வருவாய் அதிகாரி, கடலூர்.
திருமதி ஆர்.சிலம்புச் செல்வி, மாவட்ட ஊராட்சி தலைவர், கடலூர்
டாக்டர் ரா.பிருந்தாதேவி, கோட்டாட்சியர், கடலூர்
எம்.ஆர்.லிங்கம், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி, கடலூர்
மு.அய்யர்சாமி, கோட்டத் தீ அணைப்பு அலுவலர், கடலூர்
சொற்பொழிவாளர்கள் தலைப்பு
வி. சாலம்மா, எம்.ஏ.பி.எட். முதல் திருமுறை
வே.சுந்தரி முருகன் பி.எஸ்.ஸி. இரண்டாம் திருமுறை
செல்வி.அருட்செல்வி. எம்,ஏ.Ph.D சென்னை மூன்றாம் திருமுறை
வாசுகிசாமிக்கண்ணு,எம்.ஏ.,கடலூர் நான்காம் திருமுறை
மு.பாலு, பி.காம், சென்னை ஐந்தாம் திருமுறை
அருட்பா முரசு ரா.ராஜவேல்,சென்னை ஆறாம் திருமுறை
8.2.2009 ஞாயிற்றுக்கிழமை-தைப்பூச ஜோதி தரிசன நேரங்கள்
காலை 6.00, 10.00, மதியம் 1.00, இரவு 7.00, 10.00
மறுநாள் காலை 6.00
ஆக 6 காலங்கள் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம்
வள்ளற் பெருமானார் அருட்பெருஞ்ஜோதி ஆகிய மேட்டுக் குப்பம் சித்தி வளாகத் திருமாளிகைத் திரு அறை தரிசனம்
10.2.2009 செவ்வாய்க்கிழமை பகல் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை
1. வள்ளலார் அவதரித்த மருதூர் சன்னிதியில் ஏ.ராமலிங்கம், Ex.M.L.A. மற்றும் கிராம வாசிகள் முன்னிலையில் அன்னதானம் சிறப்பாக நடைபெறும்.
2. வள்ளலார் தண்ணீரால் விளக்கெரித்த கருங்குழி சன்னிதியில் கிராம வாசிகள் முன்னிலையில் அன்னதானம் சிறப்பாக நடைபெறும்.
8.2.2009 (ஞாயிறு) தைப்பூசப் பெருவிழா
நேரம் காலை 11.00 மணி இடம்- தருமச்சாலை பிரசங்க மேடை
மதிப்பீடு
திரு அருட்பா 6-ஆம் திருமுறை மலிவு வெளியீட்டு விழா 1 லட்சம்
சித்திவளாகத் திருப்பணி விழா 2.லட்சம்
மருதூர் திருப்பணி அடிக்கல் நாட்டு விழா 22 லட்சம்
வணிக வளாகம் அடிக்கட்டு விழா 36 லட்சம்
சன்மார்க்கத் திருமண நிலையம் அடிக்கல் நாட்டு விழா 50 லட்சம்
வரவேற்புரை. திருமிகு மு.ராமலிங்கம் அவர்கள், தலைவர், அறங்காவலர் குழு
முன்னிலை:
திருமிகு த.பிச்சாண்டி, இ.ஆ.ப அவ்ர்கள்
முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர்
இந்து சமய அறநிலையத் துறை, சென்னை
திருமிகு க.முத்துசாமி, இ.ஆ.ப அவர்கள்,
அரசுச் செயலர், தமிழ்வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை, சென்னை.
திருமதி ந.திருமகள் B.Sc.,M.L அவர்கள்
இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, விழுப்புரம்.
தலைமை திருமிகு ராஜேந்திர ரத்னு, இ.ஆ.ப.அவர்கள்,.கடலூர்மாவட்ட ஆட்சித் தலைவர்
அடிக்கல் நாட்டுபவர் மற்றும் விழாப்பேருரை
மாண்புமிகு M.R.K. பன்னீர்செல்வம், B.Sc., B.L., அவர்கள்,
தமிழக அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
திரு அருட்பா வெளியீடு மற்றும் விழாப்பேருரை
மாண்புமிகு K.R. பெரிய கருப்பன் அவர்கள்
தமிழக அரசு அறநிலையத்துறை அமைச்சர்.
சிறப்புரை
திருமிகு A.R. அன்சாரி, தலைவர், N.L.C. நெய்வேலி.
திருமிகு A. பொன்னுசாமி, M.A., அவர்கள், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர்.
திருமிகு பிரதீப் குமார், I.P.S. மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர், கடலூர்
அருட்செல்வர் Dr. நா.மகாலிங்கம், B.Sc. F.I.E. சென்னை.
திருமிகு T.ஜெயராமன், B.A,. B.L, அவர்கள், இணை ஆணையர், அறநிலையத்துறை, சென்னை
வாழ்த்துரை
சன்மார்க்க அறிஞர் ஊரன் அடிகளார், அவர்கள், வடலூர்.
தவத்திரு பத்மேந்திரா சுவாமிகள், வடசேரி, நாகர்கோவில்
திருமிகு R. ஜெகநாதன், M.A., B.L., உதவி ஆணையர், அறநிலையத்துறை, கடலூர்
திருமிகுE r. V. சிவக்குமார் அவர்கள், கல்விக்குழுத் தலைவர், குறிஞ்சிப்பாடி.
திருமிகு N. அர்ச்சுனன் அவர்கள், தலைவர், பேரூராட்சி, வடலூர்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் திரு வே. இராமானுஜம், ஆசிரியர், வடலூர்
நன்றியுரை திரு க. நாகராஜன், M.A. B.Ed.,நிர்வாக அதிகாரி, வள்ளலார் தெய்வ நிலையம், வடலூர்.
வாழ்த்துரை வழங்கும் திருவாளர்கள்
8.2.2009 தைப்பூசம் மாலை நிகழ்ச்சி
தருமச்சாலை மேடை
இரவு 7..00 முதல் 12 மணி வரை சன்மார்க்கக் கருத்தரங்கம்.
தலைமை –சன்மார்க்க அறிஞர் ஊரன் அடிகளார் அவர்கள், வடலூர்.
மேன்மைமிகு இ.மு.க.ச.சித்தார்த்தர், கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, புதுச்சேரி
திருமிகு செ. ராஜேந்திரன். இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர், வேலூர் மாவட்டம்.
மற்றும் பலர்.
முக்கிய அறிவிப்பு
திரு அருட்பா 6ஆம் திருமுறை இவ் அறநிலையத்தால் வெளியிடப்பட்டு, ரூ.100/-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாகப்பட்டினம் சிவசக்தி குழுமம் நிதி நிறுவனத்தாரின் நிதி உதவியால் 8.2.2009 தைப் பூசம் ஒரு நாள் 1,000 பிரதிகள் மட்டும் பிரதி 1 ரூ.50/-க்கு விற்பனை செய்யப்படும்.
மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகை தைபூசம் நிகழ்ச்சிகள்
7.2.2009 (சனிக்கிழமை) கொடியேற்றம்.
காலை 8.00 மணி சன்மார்க்கக் கொடியேற்றம்
மாலை 5.00 மணி மகா மந்திரம் ஓதுதல்,, சுத்த சன்மார்க்க வழிபாடு
6.00 மணி திரு அருட்பா இன்னிசை
8.2.2009 (ஞாயிறு) தைப்பூசம்
மாலை 5.00 மணி மகா மந்திரம் ஓதுதல், சுத்த சன்மார்க்க வழிபாடு
இரவு 6.00 மணி திரு அருட்பா இன்னிசை
இன்னிசை மாமணி S. சதாசிவம்.
10.2.2009 செவ்வாய் சித்திவளாகத் திரு அறை தரிசனம்
பகல் 12.00 மணி முதல் மாலை 6 மணி வரை
மாலை 3.00 மணி மகாமந்திரம் ஓதுதல்-சுத்த சன்மார்க்க வழிபாடு
தலைமை திரு இராம பாண்டுரங்கன், M.A. M.Phil,. Ph,D. மதுரை
மாலை 4.00 மணி முதல் திரு அருட்பா இன்னிசை
இரவு 8.00 மணி வள்ளலார் வாழ்வியல் இசைச் சொற்பொழிவு
திரு அருட்பா இசை நிகழ்ச்சிகள்
7.2.2009 (சனிக்கிழமை) கொடியேற்றம். தருமச்சாலை மேடை
பகல் 1.00 மணி மகாமந்திரம் ஓதுதல்
1.30 மணி முதல் இரவு 12.00 மணி வரை (பல்வேறு பாடகர்கள்)
ஞானசபை மேடை
பகல் 3.00 6.00 வரை மகாமந்திரம் ஓதுதல்
இரவு 7.00 மணி இசைசொற்பொழிவு
9.00 மணி வள்ளலார் வாழ்வியல் நாடகம்.
8.2.2009 தைப்பூசம் தருமச் சாலை மேடை
காலை 8.30 மணி இன்னிசை மழையூர் S. சதாசிவம்.
பகல் 1.00 மணி முதல் 6.00 மணி வரை பல்வேறு நபர்கள் இன்னிசை நிகழ்ச்சி
இரவு 11.00 மணி முதல் 12.00 மணி வரை இன்னிசை நிகழ்ச்சி.
ஞானசபை மேடை
காலை 11.00 மணி கிசோர் குமார் குழுவினர் வில்லுப்பாட்டு.
பகல் 1.00 முதல் 6.00 மணி வரை பல்வேறு நபர்களின் இன்னிசை நிகழ்ச்சி
இரவு 8.00 மணி மனுமுறை கண்ட வாசகம்-நாடகம்
இரவு 10.00 மணி அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் நாடகம்
சத்திய ஞான சபை முன் மண்டபம் திருப்பணி
சத்திய ஞான சபை முன்மண்டபம் 47 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு 6,12,2007 முதல் திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
திருப்பணிக்கு ரூ.5,000க்கு மேல் நன்கொடை வழங்குபவர் பெயர் கல்வெட்டில் பதித்து வைக்கப்படும். நன்கொடை தொகையினை நேரடியாக வள்ளலார் தெய்வ நிலைய அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற வேண்டுகின்றோம். D.D./cheque/M.O. அனுப்ப வேண்டிய முகவரி
நிர்வாக அதிகாரி
வள்ளலார் தெய்வ நிலையம், வடலூர்
பின் கோடு 607 303.

http://www.vallalarfiles.com/image/JKDfu3xxUIS7EB1I8KuDog,$,3d,$,3d/sz-tn650/InviteP1.jpg27860000.jpg

http://www.vallalarfiles.com/image/UQOvjO6cGZleizdpUiHQCw,$,3d,$,3d/sz-tn650/InviteP2.jpg27880000.jpg

http://www.vallalarfiles.com/image/rf27,$,2b60dt,$,2fZnhMlpmplk2A,$,3d,$,3d/sz-tn650/InviteP3.jpg27900000.jpg

http://www.vallalarfiles.com/image/6oRBuGCu1tKjgb5HJ3hGvw,$,3d,$,3d/sz-tn650/InviteP4.jpg27920000.jpg

http://www.vallalarfiles.com/image/46W0RXVc2tfVt3chEHiPnQ,$,3d,$,3d/sz-tn650/InviteP5.jpg27940000.jpg

http://www.vallalarfiles.com/image/w3Qlzl82XHIeeaBrWxVC0Q,$,3d,$,3d/sz-tn650/InviteP6.jpg27960000.jpg

http://www.vallalarfiles.com/image/FvaUpyvCfvroGLWeGjMJ7A,$,3d,$,3d/sz-tn650/InviteP7.jpg27980000.jpg

http://www.vallalarfiles.com/image/VsGKxeXnPeditCYrTpSXFQ,$,3d,$,3d/sz-tn650/InviteP8.jpg28000000.jpg