24.1.2009 (சனி) மற்றும் 25.1.2009 (ஞாயிறு) ஆகிய நாட்களில் மதுரை ரயில்வே காலனியில்
பெண்களுக்கென நடைபெற்ற சத் சங்க நிகழ்ச்சி.
======================================================================================
மதுரை ரயில்வே காலனியில் வசிக்கும் சன்மார்க்க அன்பர் செல்வி லலிதா மணி அவர்களின்
வீட்டில், 24.1.2009 (சனிக்கிழமை) மற்றும் 25.1.2009 (ஞாயிற்றுக் கிழமை) ஆகிய நாட்களில், பெண்
களுக்கென்று, தனியே ஒரு சிறப்புச் சத் சங்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த உலகம் தோன்றியவிதம், பிரபஞ்சம், கோள்களின் அமைப்பு, சூரியனைச் சுற்றி வரும்
கிரகங்கள் அதில் நிலவுலம், அதில் எவ்வாறு பிண்டப் படைப்பு, இறைவனின் சிருஷ்டி முதலான
வற்றைப் பற்றி, எல்லா அன்பர்களுக்கும், மதுரை அருள் ட்ரஸ்ட் நிறுவனர் திரு முரளீதரன்
விளக்கமாக எடுத்துரைத்தார்.
ஓரறிவுத் தாவரங்கள், முதல் ஆறறிவு படைத்த மனித குலப் படைப்பு, ஆறாவதாக
மனிதனுக்கென சூக்குமமாக படைக்கப்பட்ட மனம் எனும் புலன், அதனைக் கொண்டு,
இறைவனை எவ்வாறு அறிவது, அவரது அருளினை அடைவதற்கு என்னென்ன முயற்சிகள்
மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
மூலிகைகளில், வள்ளற் பெருமான் குறிப்பிட்ட (1) கரிசலாங்கண்ணி, (2) வல்லாரை (3)
முசுமுசுக்கை, (4) தூதுவளை (5) புளியாரை முதலானவற்றை ஏன் தவறாமல்
உட் கொள்ள வேண்டும் என்பது குறித்துபெருமானார் சொன்ன குறிப்புரைகள்,
உடலை எவ்வாறு பேண வேண்டும் .. ஏன் இந்த மனிதஉடல் கிடைத்ததை
நோயின்றிப் பாதுகாக்க வேண்டும் என்பன போன்ற வள்ளற் பெருமானின்
கருத்துக்களை, சன்மார்க்க அன்பர் திரு முரளீதரன் கூட்டத்தில் கலந்து
கொண்ட அன்பர்களுக்கு விரிவாகவிளக்கிக் கூறினார்.
அடுத்ததாக, செல்வி லலிதா மணி அவர்கள், இந்த உடம்பை பாதுகாக்கத்
தவறினால் அதனால்ஏற்படும் வியாதிகள் அதனை எவ்வாறு நீக்குவது
போன்ற உபாயங்களை அனைவருக்கும்விளக்கிக் கூறினார்.
அதற்கு அன்பர்கள் கேட்ட கேள்விக்கும் திரு முரளீதரனும் செல்வி லலிதா மணியும்
விளக்கம் அளித்தனர்.
கலந்து கொண்ட அன்பர்கள் விவரம்.
திருமதி புவனேஸ்வரி, திருமதி வெங்கட லக்ஷ்மி, திருமதி மீனாம்பிகை, திருமதி மீனாக்ஷி
திருமதி பூர்ணிமா, சென்னை திருமதி சரஸ்வதி, மன்னார்குடி மற்றும் ரயில்வே காலனியில்
இருந்து வந்த அன்பர்கள்.
சத் விசார நிகழ்ச்சிகளுக்குப் பின்னர். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
அடுத்த கூட்டத்தில் மேலும் அன்பர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என
இக் கூட்டத்தில் கலந்து கொண்ட அன்பர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
அடுத்த கூட்டம் பற்றிய தேதி மற்றும் கிழமை விவரம் பின்னர் அறிவிக்கப்படும்
எனத் தெரிவிக்கப்பட்டது.