DAEIOU - தயவு
ராமநாதபுரம் Dt.ஆன்மீகத் தலங்கள் - திரு உத்திரகோச மங்கை ஆருத்ரா தரிசனம்.

ராமநாதபுரம் மாவட்டம் ஒரு கண்ணோட்டம்
திருஉத்திரகோசமங்கைஸ்தலத்தில்ஆருத்ராதரிசனம்
9.1.2009 (வெள்ளி) மற்றும் 10.1.2009 (சனி)
ஆகியநாட்களில்நடைபெறும்விசேடம்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இராமநாதபுரம்மாவட்டம்ஆன்மீகஸ்தலங்களுக்குமிகவும்பெயர்பெற்றது.
ராமநாதபுரம்
இதுசேதுபதி மன்னர் பரம்பரையினைச் சேர்ந்த ராஜாக்களால்ஆளப்பட்டஒருநகராகும். மாவட்டதலைநகர்அந்தஸ்துஇந்தஊருக்கு 1984ஆம்ஆண்டுஅரசாங்கத்தால்வழங்கப்பட்டது. புதியகலெக்டர்ஆபீஸ்கட்டி, 1988ஆம்ஆண்டில்தனதுபணியினைத்துவங்கியது. (அதற்குமுன்னர்ராமநாதபுரத்தின்கலெக்டர்அலுவலகம், மதுரையில்உள்ளமதுரைகலெக்டர்அலுவலகத்திற்குஅருகில்இயங்கிவந்தது. )
ராமநாதபுரம்ஊரின்மேற்குப்பகுதியில், இன்றளவும்மன்னர்காலத்தியகோட்டைஒன்றுஉள்ளது. அதன்பெயர்மூலைக்கொத்தளம்என்பதாகும். சுதந்திரப்போரில்வீரத்திற்கு வித்திட்ட வீர பாண்டியகட்டபொம்மன்இங்கு சில காலம் இருந்துள்ளார். இந்தக்கோட்டையின்உயரமானஇடத்தில் இருந்து கொண்டு, எதிரிகளைத்தாக்குவதற்குவசதியாகஇடம்உள்ளது. தற்போதுஇதுமிகவும்சிதிலமடைந்துஉள்ளது. நகரில்பலஇடங்களில்ஊரணிகள், உள்ளன. மக்கள்தண்ணீர்இன்றிசிரமப்படக்கூடாதுஎன்றநோக்கில்மன்னர்கள், நகரின்பலபகுதிகளில்ஊரணிகளைஉருவாக்கிநீர்வினியோகம்செய்துள்ளனர்.
அரண்மனை-
ராமநாதபுரம்நகரின்மையப்பகுதியில்சேதுபதிமன்னர்பரம்பரையினரால்கட்டப்பட்டகம்பீரமான, மிகவும்தொன்மையானஅரண்மனைஉள்ளது. பழையகாலப்பாரம்பரியத்தினைஇன்றளவும்பறைசாற்றும்விதத்தில்இதுஅமைந்துள்ளது. விடுதலைப்போரில்வீரபாண்டியகட்டபொம்மன், இந்தஅரண்மனையில்தான்ஆங்கிலஏகாதிபத்தியத்தின்ஜாக்ஸன்துரையினைசந்தித்தார். இந்தஅரண்மனையில்தொல்பொருள்துறையின்அருங்காட்சியகம்இயங்கிவருகின்றது.
மன்னர்பரம்பரையினர், அம்பாள்ராஜராஜேஸ்வரியினைவழிபட்டுவந்தனர். ஆண்டுதோறும்நவராத்திரிவைபவத்தின்போது, 10 நாட்கள்இங்கேவிழாஎடுக்கப்படுகின்றது. பல்வேறுஇடங்களிலிருந்துஅன்பர்களைவரவழைத்துபட்டிமன்றங்களும், அருமையானஇசைக்கச்சேரிகளும்இங்கேநடத்தப்படுவதுஇன்றளவும்தொடர்கின்றது.
பட்டணங்காத்தான்என்றஊரில் (நகரின்ஒருபகுதி) தாயுமானசுவாமிகள்ஆலயம்உள்ளது. அமைதிக்குமிகவும்பெயர்பெற்றஒருஇடம்இது.
வள்ளலார்இயக்கங்கள்
கேணிக்கரையில்முதியோர்இல்லம்
முகவைஊரணிமேல்கரையில்வள்ளலார்யுனிவெர்சல்ட்ரஸ்ட்
நயினார்கோவில்
இந்தஊரில்வழிபடுகடவுளாகநாகநாதர்எழுந்தருளிஉள்ளார். கண்ணுக்குஏற்படும்புரைநோய்தீர்க்கும்கடவுளாகஇங்குஆண்டவர்அருள்பாலிக்கின்றார். கிராமத்துமக்கள்அதிகமாகக்கூடும்ஒருகிராமம். பரமக்குடிதாலுகாவில்உள்ளது. இராமநாதபுரத்திலிருந்துசுமார் 20 கி.மீ.தூரத்தில்இதுஅமைந்துள்ளது.
பிரப்பன்வலசை
மிகவும்பிரசித்திபெற்றமுருகன்ஆலயம்அமைந்துள்ளகிராமம்இது.
திருவாடானை.
ஆதிரெத்தினேஸ்வரர்சினேகவல்லித்தாயார்அருள்பாலிக்கும்அருமையானஆலயம்இங்குஉள்ளது. மாணிக்கவாசகப்பெருமானால்பாடல்பெற்றஸ்தலம்இது.
ராமநாதபுரத்திலிருந்துதேவகோட்டைசெல்லும்வழியில் 56 கி.மீதூரத்தில்இந்த்ஊர்உள்ளது. ஒருசிறியகிராமப்பஞ்சாயத்து. ஆனால்இங்கும்ஒருதாசில்தார்அலுவலகம்யூனியன்ஆபீஸ் ஆகியவை இயங்கிவருகின்றன. அதிகமானகிராமப்பகுதிகளைஉள்ளடக்கியஒருதாலுகாதலைநகர்இதுஆகும். ராமநாதபுரத்தின்நெற்களஞ்சியம்இந்ததாலுகாஆகும்.
மாணிக்க வாசகர், மதுரையில்அரிமர்த்தனபாண்டியனின்அரசவையில்மந்திரியாகபணிபுரிந்தவர். அவரதுஇயற்பெயர்தென்னவன்பிரமராயன்என்பதாகும். கடல் வாணிபம் செழித்திருந்தஅந்தகாலத்தில், அரசரால்பணிக்கப்பட்டு, தொண்டிசென்றுஅயல்நாட்டுக்குதிரைகளை வாங்கி வரச் சென்றவர்.
செல்லும்வழியில் (புதுக்கோட்டைமாவட்டத்தில்உள்ள) ஆவுடையார்கோவில்என்றஇடத்தைச்சென்றடைந்ததும், அங்குகுருந்தமரத்தடியில், எம்பெருமான்சீடர்களுக்குஅனுக்ரகம்பண்ணியகாட்சியினைக்கண்டக்ஷணத்திலேயேஅவரதுஅடியாராகி, சிவபெருமானால்ஆட்கொள்ளப்பட்டு,. பரிவாங்கக்கொண்டுவந்ததிரவியத்தைஎல்லாம், இறைவனுக்குஆலயம்எழுப்பும்பணியில்செலவிட்டவர்.
அந்தஆலயத்தின்சிற்பவேலைப்பாடு, மிகவும்போற்றுதற்குரியது. முன்புறமண்டபத்தில்கொடுங்கைகளேஇதற்குச்சாட்சி. ஆலயத்தின் உள்ளேஉள்ளசிற்பங்கள் .. அப்பப்பா .. .. சிற்பங்களாஅவை .. நேரில்ராஜாநிற்பதுபோன்றகாட்சிகள். இறைவியர் (நார்க்) கொட்டான்கொண்டுசெல்லும்காட்சி ..
ஆவியுடையார்என்றும்ஆத்மநாதசுவாமிஎன்றும்பெயர்வழங்கப்படும்இறைவனின்ஆலயம்சிற்பகலைக்கேஒருசான்று. அடுத்தடுத்ததூண்களில்மாணிக்கவாசகர்மந்திரிகோலத்தில்ஒருகாட்சி .. துறவிக்கோலத்தில் .. அடியாராகஒருகாட்சி .. இந்தஆலயத்தில்ஆவிடைமட்டுமேஉண்டு. லிங்கஅமைப்புகிடையாது.
வழிபாடுசெய்யும்போது .. இறைவனின்திருவடிக்குஒருபக்கமும்அதற்குஎதிரில்உள்ளமாணிக்கவாசகப்பெருமானின்திருக்கோலத்திற்குஒருபக்கமுமாக .. ஒரேநேரத்தில், தீபஆராதனைநடைபெறுகின்றது. சாதம்மட்டுமேஇறைவனுக்குப்படைக்கப்படுகிறது.
திருவெற்றியூர்.
இங்குஅம்பாள்ஆலயம்அமைந்துள்ளது. அம்பாளின்திருப்பெயர்பாகம்பிரியாள்என்பதாகும். (உமையொருபாகன் - பாகம் + பிரியாள்) தொண்டிசெல்லும்பாதையில் - தனியேபிரிந்துஇந்தஆலயத்திற்குச்செல்லலாம். ஆலயத்தின்முன்புறம்உள்ளவிசேஷமானஊரணியில்உள்ளஜலம்நோய்நீக்கும்நிவாரணியாகபக்தகோடிகளால்கருதப்படுகின்றது. பாம்புகடிபோன்றவிஷங்களைஇறக்குவதற்கும்இங்குபக்தர்கள்வருகைபுரிகின்றனர்.
தேவிப்பட்டினம்
இந்த ஊரில், நவக்கிரகங்கள் கடலினுள்அமைந்துள்ளன. கடலடைத்தபெருமாள்ஆலயம்கடலைநோக்கியவண்ணம்அமைக்கப்பட்டுள்ளது. இந்தஆலயத்தில் கடலடைத்த பெருமாள் பள்ளிகொண்டுபக்தர்களுக்குஅருள்பாலிக்கின்றார். இராமநாதபுரம்நகரிலிருந்துதேவகோட்டைசெல்லும்வழியில் 16 கி.மீதூரத்தில்அமைந்துள்ளஒருகடற்கரைகிராமம்இதுவாகும். ரூட்பஸ்களும், டவுன்பஸ்களும்அடிக்கடிஉண்டு.
கீழக்கரை
வள்ளல்சீதக்காதிஅவர்களைத்தெரியாதவர்களேஇருக்கமுடியாது. வாரிவழங்கும்வள்ளன்மையால்அவர்கள்பிரக்யாதிபெற்றவர்கள். அவர்கள்தமதுவாழ்நாளில்வந்தசெந்நாப்புலவர்களைஎல்லாம்கெளரவித்துஅவர்களுக்குஉதவிசெய்துவந்தார். அவர்இறந்தபின்னர்அவரைநாடிவந்தபுலவர்ஒருவர்இவர்இறந்ததகவலைக்கேள்விப்பட்டுஅவரைப்புதைத்தஇடம்சென்றவுடன், அவரைஅடக்கம்செய்தஇடத்திலிருந்து, வள்ளல்சீதக்காதிஅவர்க்ளின்கைநீண்டுவெளியேவந்தது. அந்தக்கையிலிருந்துமோதிரம்அவரைநாடிவந்தபுலவருக்குபரிசாகநீட்டிக்கொண்டிருந்தது. செத்தும்கொடுத்தான்சீதக்காதிஎன்றபெயர்இன்றளவும்விளங்குகின்றது.
வள்ளல்சீதக்காதிஅவர்கள்பெயரால்சீதக்காதிஇன்ஜினியரிங்கல்லூரி 20 ஆண்டுகளுக்கும்மேலாகஇயங்கிவருகின்றது. முஸ்லிம்சமுதாயமக்கள்பெருவாரியாகஇந்தநகரில்வசித்துவருகின்றனர். இந்துக்களும், முஸ்லிம்சகோதரர்களும்இணைந்துவாழும்ஒருஅருமையானநகர்இது. கடற்கரைஅருகேஅமைந்தநகரமாகும்.
திருப்புல்லாணி (திருபுல்அணை)
புல்லைத்தலைக்குஅணையாகவைத்துஅனந்தசயனத்தில்பெருமாள்பள்ளிகொண்டுள்ளஸ்தலம்இதுவாகும். மிகவும்பெரியஆலயம்இங்குஉள்ளது. இராமநாதபுரம்நகரிலிருந்துகீழக்கரைசெல்லும்வழியில்சுமார் 8 கி.மீ.தூரத்தில்இந்தஊர்அமைந்துள்ளது. கீழக்கரைவழியாகதூத்துக்குடி ,,மற்றும் திருச்செந்தூர் செல்லும்பஸ்களும், டவுன்பஸ்களும்இந்தவழியாகச்செல்கின்றன.
சேதுக்கரை
இங்கிருந்துசுமார் 5 கி.மீதூரத்தில், சேதுக்கரைஎன்றகடற்கரைஸ்தலம்அமைந்துள்ளது. மொத்ராமநாதபுரத்திலிருந்துசுமார் 13 கி.மீ. தூரத்தில்இதுஅமைந்துள்ளது. சீதாதேவியைமீட்பதற்குஇலங்கைக்கு, ராமபிரான்இந்தஇடத்திலிருந்துவானரப்படைகளுடன்சென்றதாகசொல்லப்படுகின்றது. எனவேஇந்தப்பெயர்இந்தஊருக்குவழங்கப்பட்டுள்ளது. ராமபிரான்சேதுவில்கரைஎழுப்பியதால்இந்தபெயர். ஒருநாளில்ஓரிருமுறைமட்டுமேஇந்தஊருக்குடவுன்பஸ்கள்இயக்கப்படுகின்றன.
திருஉத்திரகோசமங்கை
இந்த ஸ்தலம்ராமநாதபுரத்திலிருந்துகடலாடிசெல்லும்வழியில் 16 கி.மீதூரத்தில்அமைந்துள்ளது. கடலாடிசாயல்குடி, திருச்செந்தூர்செல்லும்பஸ்கள், இந்தஊரின்வழியாகச்செல்கின்றன. ராமநாதபுரத்திலிருந்துடவுன்பஸ்களும்இந்தஊருக்குஅதிகஅளவில்இயக்கப்படுகின்றன.
இந்தஆலயம்மிகவும்தொன்மைவாய்ந்தது. மங்களநாதஸ்வாமிஇங்குஅருள்பாலிக்கின்றார். மாணிக்கவாசகப்பெருமானால்பாடல்பெற்றமிகத்தொன்மையானஸ்தலம்மண்முந்தியோ ..? மங்கைமுந்தியோ .. ? (அதாவதுஇந்தபூமிமுதலில்தோன்றியதா .. திருஉத்திரகோசமங்கைமுதலில்முதலில்தோன்றியதா..? } எனவிசேஷித்துக்கூறப்படும்ஸ்தலம்இது. . ராஜகோபுரம்உண்டு. ஆலயத்தின்உள்ளும்எதிரிலும்அன்பர்கள்நீராட, தீர்த்தம்உண்டு, ஸ்தலவிருக்ஷம்உண்டு.
இந்தஆலயத்தின்மிகச்சிறப்புஇங்குஎழுந்தருளியுள்ளநடராஜப்பெருமான்சிலைஆகும். பச்சைமரகதச்சிலையால்இந்தஆலயத்தில்நடராஜப்பெருமான்சிலைவடிவமைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம்சமஸ்தானம்தேவஸ்தானத்தின்மூலம்இங்குபணிகள்சிறப்புறநடைபெற்றுவருகின்றன. பண்டையகாலத்தில்ராமநாதபுரத்தினைஆண்டராஜாக்கள்காலத்தில்இந்தவிலைமதிக்கமுடியாதபச்சைமரகதச்சிலைதயார்செய்யப்பட்டுள்ளது.
ஒருஆண்டில் ஆருத்ரா தரிசனத்தன்று இந்தபச்சைமரகதச்சிலையில்பூசப்படும்சந்தனக்காப்பு, அடுத்தஆண்டு, ஆருத்ராதரிசனத்திற்குத்தான்களையப்படும். பின்னர்ஒருநாள்பூராவும்அன்பர்களின்தரிசனத்திற்காகவைக்கப்பட்டபின், மீண்டும்சந்தனக்காப்புபூசப்படும். இந்தஆருத்ராதரிசனத்தினைக்காண, சுற்றுவட்டாரத்திலிருந்தும், மதுரைபோன்றநகரங்களிலிருந்தும்அன்பர்கள்லட்சக்கணக்கில்கூடுவர். மாவட்டநிர்வாகம்இந்தஆண்டு, 9.1.2009 அன்றுஉள்ளூர்விடுமுறையினைஅறிவித்துள்ளது.
வழக்கமாக, திருஜோதிமுருகன்அய்யாஅவர்கள், நிறுவனர், வள்ளலார்யுனிவர்சல்மிஷன்ட்ர்ஸ்ட்நிறுவனர் (Vallalar Universal Mission Trust, Ramanathapuram) இந்தகோவிலில்ஆருத்ராதரிசனம்நடைபெறும்முன்னரேகோவிலின்சுற்றுப்பிரகாரங்களில்வளர்ந்துள்ளமுட்செடி, கொடிகளைஎல்லாம்வெட்டி, அப்புறப்படுத்தும்பணியில்தனதுநிறுவனத்தில்பயிலும்மாணவர்களைக்கொண்டுசுத்தம்படுத்தும்வழக்கத்தினைக்கடைப்பிடித்துவந்தார். அவ்விதம்செய்வதன்மூலம், இந்தஆலயத்திற்குவருடந்தோறும்வரும்பக்தர்கள், சிரமமின்றி, ஆலயத்தின்சுற்றுப்பிரகாரங்களைச்சுற்றிவரஅவர், நல்லவாய்ப்பினைஏற்படுத்தினார்.
இந்தஆண்டும், வள்ளலார்யுனிவர்சல்ட்ரஸ்டின்ட்ரஸ்டிதிருராஜவீர் @ பழனியும், அவரதுமனைவியார்திருமதிஹரிலக்ஷ்மியும்தமதுநிறுவனத்தில்பயிலும்மாணவ, மாணவியரைக்கொண்டு, கடந்த 25.12.2008, 26.12.2008, 27.12.2008 ஆகியதேதிகளில்திருஉத்திரகோசமங்கைஆலயத்தின்உட்புறம்வளர்ந்திருந்தமுட்புதர்கள், செடிகள்முதலானவற்றைஅகற்றினர்.வரும் 9.1.2009 (வெள்ளிக்கிழமை) நடராஜர்மரகதச்சிலைஅபிஷேகவிசேஷம்நடைபெறுகின்றது. மறுநாள்மீண்டும்சந்தனக்காப்புசாத்தப்படும்.
இந்தவிசேடத்திற்குமதுரையிலிருந்துவருடந்தோறும்அன்பர்கள், மங்களநாதஸ்வாமிதிருக்கோவிலில்திருவாசகம்முற்றோதல்செய்வதற்குவருகைதருகின்றனர்.
வள்ளலார்யுனிவெர்சல்மிஷன்ட்ரஸ்ட்,வழக்கமாக, இந்தவிசேஷத்திற்குவரும்அன்பர்களும்அன்னதானம்அளிக்கும்பணியினையும், திருஅருட்பிரகாசவள்ளலார்கற்பித்துச்சென்றசுத்தசன்மார்க்கநெறிகுறித்து, தக்கஅன்பர்களைக்கொண்டு, பாராயணம், மற்றும்சொற்பொழிவினையும்இங்குவருடந்தோறும்நிகழ்த்திவருகின்றது. கோவிலுக்குவடபுறம்அமைந்துள்ளராஜாசத்திரத்தில்இந்தநிறுவனம்தனதுபணியினைவெகுசிறப்பாகச்செய்துவருகின்றது.
வள்ளலார்மாணிக்கவாசகர்பாடியபாடல்களையும்திருவாசகத்தையும்திருஅருட்பாக்களிலேபாடிவைத்துள்ளார். திருவாசகத்திற்குஉருகாதோர்ஒருவாசகத்திற்கும்உருகார்என்பதுஅனைவரும்அறிந்தபழமொழிஆகும்.
வள்ளல்பெருமான்திருஅருட்பாவில்
வான்கலந்தமாணிக்கவாசகநின்வாசகத்தை
நான்கலந்துபாடுங்கால்நற்கருப்பஞ்சாற்றினிலே
தேன்கலந்துபால்கலந்துசெழுங்கனித்தீஞ்சுவைகலந்து
என்ஊன்கலந்துஉயிர்கலந்துஉவட்டாமல்இனிப்பதுவே- எனக்குறிப்பிடுகின்றார்.
ஏர்வாடி.
இந்தஊரில் ஊரில்உள்ள தர்ஹா மிகவும்விசேஷமானது. அதில்வருடந்தோறும்நடைபெறும்சந்தனக்கூடு வைபவம்மிகவும்பிரபல்யமானது. இராமநாதபுரத்திலிருந்துசுமார் 26 கி.மீதூரத்தில்அமைந்துள்ளதுஇந்தகடற்கரைகிராமம். அவுலியாக்கள்அடங்கியுள்ளஅடக்கஸ்தலம்இங்குஉள்ளதால், அவர்களின்தீர்க்கதரிசனத்தால், மனநோயாளிகளாகஇங்குவந்துதங்குவோருக்கு. மனநோய்நீங்குகின்றது. இந்தஅடிப்படையில், தமிழ்நாடுமாநிலம்மட்டுமின்றி, கேரளமாநிலத்திலிருந்தும்அன்பர்கள்நோயாளிகளைஅழைத்துவந்து, அவுலியாக்களின்தீர்க்கதரிசனத்தால், நலம்பெற்றுச்செல்கின்றனர். முஸ்லிம்சமுதாயத்தினர்அதிகம்வாழும்ஒருசிறந்தஆன்மீகஸ்தலமாகும்.
இருப்பினும்ஜாதி, மதம்பாராமல்அனைத்துத்தரப்பினரும், இங்குநடைபெறும்சந்தனக்கூடுவைபவத்தில்கலந்துகொள்கின்றனர். பெரும்பாலானமுஸ்லிம்சகோதரர்கள்வெளிநாடுகளில்வேலைதேடிச்சென்றுபொருளீட்டிவருகின்றனர்.ராமநாதபுரத்திலிருந்துடவுன்பஸ்கள்அடிக்கடிஉண்டு. கடலாடி, சாயல்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர்செல்லும்பஸ்கள்அனைத்தும்இந்தஊரின்வழியேசெல்லும்.
முத்துப்பேட்டை
இந்தஊர்கடற்கரையிலேயேஅமைந்துள்ளது. இராமநாதபுரத்திலிருந்து 20 கி.மீதூரத்தில்அமைந்துள்ளது. கிறிஸ்துவப்பெருமக்கள்பெருவாரியாகவாழும்இந்தஊரில்பெரும்பாலும்மீன்பிடிதொழில்செய்வோரேஅதிகம். மிகவும்பெரியசர்ச்இங்குஉள்ளது.
ராமேஸ்வரம்
இந்தியாவில்இந்தஊரைப்பற்றித்தெரியாதோரேஇருக்கமுடியாது. ராமநாதபுரத்திலிருந்து 65 கி.மீதூரத்தில்அமைந்துள்ளஒருதீபகற்பம். இங்குஅருள்பாலிப்பவர்அருள்மிகுராமநாதசுவாமி.
இங்குகோவிலைக்வழிபடுவதற்கு, இலங்கையிலிருந்துஅந்தக்காலத்தில்மன்னர்கள்தரைவழியாகவந்தனர்எனச்சொல்கின்றனர். ஒருகாலகட்டத்தில்தரைப்பகுதியைகடல்கொண்டதால், இலங்கையும்இந்தப்பகுதியும்பிரிந்துவிட்டனஎன்றசெய்திஉள்ளது.
வடமாநிலத்தவர்களும்இந்தியாவின்பலபகுதிகளிலும்இருந்துஇங்குதினந்தோறும்வருவோர்பல்லாயிரக்கணக்கானோர். முன்பெல்லாம், இந்தஊருக்குச்செல்வதென்றால்ரயில்வேமட்டும்தான்உண்டு.
1988ஆம்ஆண்டிற்குப்பின்னர், மண்டபத்திற்கும் (Main Land) பாம்பனுக்கும் (Rameswaram Island) இடையே 144 தூண்கள்கொண்டகடலுக்குமேல்செல்லும்ரோடுபாலம்அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பாலத்திற்குஅன்னைஇந்திராகாந்திபாலம்என்றபெயரிடப்பட்டுள்ளது. அதன்பின்னர், ரயில், பஸ்போன்றஇருவழியாலும்இங்குசெல்லும்வாய்ப்புபக்தர்களுக்குவசதியாகஏற்படுத்தப்பட்டது.
மேற்குக்கோபுரவாசலில்வள்ளலார்சன்மார்க்க சங்கம்இயங்கிவருகின்றது. திருஜோதிமுருகன்அய்யாவின்அண்ணன்திருசோமசுந்தரம்அவர்கள்இதன்நிர்வாகப்பொறுப்பைஏற்றுத்திறம்படச்செயல்படுத்திவருகின்றார். இங்குமாணவர்கள்தங்கிப்பயின்றுவருகின்றனர்.
ராமநாதசுவாமிகோவில்மூன்றாம்பிரகாரம்உலகப்புகழ்பெற்றது.மிகநீண்டபிரகாரம்ஆகும். இந்த ஊரில், தங்கும்விடுதிகள்மற்றும்வடமாநிலத்தவர் - பல்வேறுமாநிலத்தவர்கள்உண்ணும்வகையில்தயார்செய்யப்படும்உணவுவிடுதிகளும்உண்டு. Tamil Nadu Tourist Development Corporation நடத்திவரும்விடுதிமற்றும்ஹோட்டல்கடற்கரையினைஒட்டியேஅமைந்துள்ளது. காலையில்சூரியதரிசனம்இங்கிருந்தேகாணலாம். கடலிலிருந்துசூரியபகவான்தன்பொற்கிரணங்களைகடற்பகுதியிலும், நிலப்பகுதியில்பரப்புவதுகண்கொள்ளாக்காட்சியாகும்.
ராமர்பாதம்
ராமேஸ்வரத்தின்வடக்குப்பகுதியில்இதுஅமைந்துள்ளது. மண்குன்றினால் (Sand Dune) ஏற்படுத்தப்பட்டஒருஉயரமானஇடம்இது. இங்கேராமபிரானின்கால்தடங்கள்பதிக்கப்பட்டுள்ளன. இங்கிருந்துதான்ராவணனால்கடத்திச்செல்லப்பட்டசீதாதேவியார்இலங்கையில்எங்குஉள்ளார்என்றவிவரம்தெரிவிக்கப்பட்டதாம்.
ராமபிரானிடம்விபீஷணன்சரணாகதிஅடைந்தஇடம்தனுஷ்கோடி செல்லும் கடற்கரையிலேயேஉள்ளது. . ஒருஆலயம்இங்குஉள்ளது. குறிப்பிட்டநேரத்தில்மட்டுமேஇங்குசென்றுவரும்வண்ணம்டவுன்பஸ்கள்இயக்கப்படுகின்றன.
தனுஷ்கோடி
1964ஆம்ஆண்டுவந்தஇயற்கைச்சீற்றத்தின்காரணமாககடலால்அடித்துச்செல்லப்பட்டஒருஅழகானஊர்இதுவாகும். மிகச்சிறியகிராமம். 1964க்குமுன்பாகஇலங்கையிலிருந்துகப்பல்போக்குவரத்துஇங்குவரைஇருந்தது. அதுபோல்ரயில்வண்டிகளும்தனுஷ்கோடிவரை 1964ஆம்ஆண்டுவரைஇயக்கப்பட்டுவந்தன. 1964 புயலில்பாம்பன்பாலத்தில்வந்துகொண்டிருந்தரயில்பாதிக்கப்பட்டது. குறிப்பிட்டநேரங்களில்டவுன்பஸ்கள்இங்குசென்றுவருகின்றன. மீன்பிடிதொழில்செய்வோர்மட்டுமேஆங்காங்கேகுடிசைகள்போட்டுதற்காலிகமாகவசித்துவருகின்றனர்.
ஓலைக்குடா
இந்தஊரில்தான்ராமகிருஷ்ணபரமஹம்ஸரின்பிரதமசீடரான சுவாமிவிவேகானந்தர்அவர்கள்அமெரிக்காவிலிருந்துவந்துஇறங்கியஇடம்உள்ளது.. ராமேஸ்வரம்வட்டத்தில்உள்ளஒரு கடற்கரைகிராமம். தமிழுக்கும்ஆன்மீகத்திற்கும்ராமநாதபுரம்ராஜாவம்சத்தினர்மிகவும்முக்கியம்அளித்தனர். சுவாமி விவேகானந்தர்அவர்கள், ராமநாதபுரம்ராஜாஅவ்ர்களால்தான்அமெரிக்காவிற்குஅனுப்பிவைக்கப்பட்டார். அங்குசுவாமிவிவேகானந்தர்அவர்கள்பரப்பியஆன்மீகமணத்தால், இந்தியாவின்புகழ், அமெரிக்காவிலும் மற்றும்உலகெங்கிலும் பரவியது.
அவ்ர், அமெரிக்காவிலிருந்துதிரும்பும்போது, அவரதுகால்களை, ராமநாதபுரம்ராஜாஅவர்கள், தமதுதலையில்முதலில்தாங்கி, பின்னர், (இந்தியநிலப்பகுதியில்) ஓலை குடா கிராமத்தில் கால்பதிக்கவேண்டும்எனவேண்டிக்கொண்டார்என்றசெய்தியும்இங்குஉண்டு. அவ்வளவுசிறப்பினைராமநாதபுரத்தினைஆண்டசேதுபதிமன்னர்பரம்பரையினர் ஆன்மீகத்திற்காகச் செய்துவந்தனர்.
மண்டபம்முகாம்
ராமநாதபுரத்திலிருந்துராமேஸ்வரம்செல்லும்வழியில்அமைந்துள்ளதுஇந்த - இலங்கைஅகதிகள்தங்கவைப்பதற்கானஒருமுகாம். நூற்றுக்குமேற்பட்டசிறுசிறுவீடுகளில், இலங்கையிலிருந்துவரும்தமிழ்அகதிகள்இங்குதங்கவைக்கப்படுகின்றனர். அவர்களதுநலத்தைப்பேணுவதற்கென்றேடிப்டிகலெக்டர்அந்தஸ்தில்ஒருஅலுவலர்மண்டபம்கேம்பில்நியமனம்செய்யப்பட்டுவட்டாட்சியர், மற்றும்அலுவலகப்பணிகள் பார்ப்பதற்கென்றேஅலுவலர்கள்ஆகியோர்இங்குசெயல்படுகின்றனர்.
காளையார்கோவில்
மருதுசகோதரர்கள்ஆண்டஒருஅருமையானஊர்இதுஆகும். பெரியசிவஆலயம்ஒன்றுஇங்குஉள்ளது. காளைவடிவில்வந்துமுன்சென்றுகொண்டிருந்த (ஆண்டவர்) மறைந்ததால்அந்த்இடத்தில் (காளை + யார் = காளையார்கோவில்) அடையாளம்வைத்துஆலயம்எழுப்பியுள்ளனர்.
இந்தியவிடுதலைப்போரில்இந்தப்பகுதிவாழ்மக்களைக்காப்பதற்காகதம்இன்னுயிரைஈந்தனர். மருதுசகோதரர்கள்ஆங்கிலேயர்களால்கொல்லப்பட்டபின்னர், அவர்களாஇன்விருப்பத்தின்படி, அவர்களதுதலையினைஇந்தஆலயத்தின்முன்புறம்வைத்ததாகச்சொல்லப்படுகின்றது. அங்குஒருமண்டபம்உள்ளது.
திருவரங்கம்.
கிறிஸ்துவப்பெருமக்களுக்கானபெரியதேவாலயம்இங்குஉள்ளது. ஆங்கிலேயச்சிற்பக்கலையின்அடிப்படையில்இந்ததேவாலயம்உள்ளது. பரமக்குடிதாலுகாவில்உள்ளது. பரமக்குடியிலிருந்து 13 கி.மீதூரத்தில்இதுஅமைந்துள்ளது.
ஓரியூர்
இந்தகிராமத்தில்கிறிஸ்துவப்பாதிரியர்அடங்கியஒருஅடக்கஸ்தலம்பெரியதேவாலயமாகக்கட்டப்பட்டுஉள்ளது. கிறிஸ்துவமதபோதகராகவந்தஅவர்இங்கு வந்துள்ளார். இங்குஒரு நல்ல பள்ளிக் கூடம்இயங்கி வருகின்றது.
(ஏன்இந்தவிவரங்கள்எல்லாம்இங்கேதரப்பட்டனஎனஅன்பர்கள்மத்தியில்கேள்விஎழலாம். திருஉத்திரகோசமங்கைஆருத்ராதரிசனவிசேஷத்திற்குராமநாதபுரம்மாவட்டத்திற்குச்செல்லும்அன்பர்கள், அதனைஒட்டிஅமைந்துள்ளபல்வேறுஆலயங்களையும்தரிசித்துவரலாமேஎன்றஎண்ணஓட்டம்தான் .. இந்தவிளைவு).