சென்னை புத்தக கண்காட்சியில் வள்ளலாரின் திரு அருட்பா
மற்றும் திண்டுக்கல் தயவு நூல்கள் விற்பனை ஸ்டால்.
வரும் 8.1.2009 முதல் 18.1.2009 வரையிலான 11 நாட்களில் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதிய திரு அருட்பா விரிவுரை நூல்கள், தயவு நூல்களும், வள்ளல் பெருமானின் திரு அருட்பா, உபதேசப் பகுதி மற்றும் திரு அருட்பா ஆடியோ சி.டி ஆகியவையும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
சென்னையில் பூந்தமல்லி ஹைரோடில் உள்ள பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ பள்ளியில் இந்த புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.
பல புத்தக நூல் நிலையங்கள், ஆங்காங்கே திரு அருட்பா முதலான புத்தகங்களை வெளியிடுகின்றன. ஆனால், புத்தகக் கண்காட்சியில் வள்ளலார் மற்றும் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா ஆகியோரின் நூல்களுக்கெனவே தனியே விற்பனைக்கென, எந்த ஏற்பாடும் இதுவரை செய்யப்பட்டதில்லை,
அதனால், தூத்துக்குடி மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு கலியுக வரதன் அவர்களுடைய பெரு முயற்சியினால், இந்த ஏற்பாடு நடைபெறுகின்றது. புக் ஸ்டாலுக்குரிய டிபாசிட் தொகையினை கட்டி, ஒரு ஸ்டால் வைப்பதற்கு அவர் அனுமதி பெற்றுள்ளார்.
அந்தப் புத்தகக் கண்காட்சியில் சன்மார்க்க அன்பர்கள் பலரும் கலந்து கொண்டு சுத்த சன்மார்க்க நெறி பரவுவதற்கென்றே இந்தப் புத்தக விற்பனையில்,. தம்மை ஈடுபடுத்திக் கொள்ள உள்ளனர்.
அவர்களில் முன்னோடியாக, மதுரை அருள் ட்ரஸ்ட் நிறுவனர் திரு முரளீதரன் செல்கின்றார். அவருடன் இணைந்து புக் ஸ்டாலில் பணி புரிய சென்னை அன்பர் திரு கோசல ராமன் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மதுரையிலிருந்து நாராயணபுரம் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டியும் அங்கு வந்து பணிபுரிய ஒப்புதல் தந்துள்ளார்.
இந்த விளம்பரத்தைக் கண்ணுறும் சென்னையிலும், அதன் அருகிலும் வசிக்கும் சன்மார்க்க அன்பர்கள், தமது அன்பர்களை அந்த புத்தகக் கண்காட்சிக்கு தங்களது அன்பர்களையும் அனுப்பி, புத்தக விற்பனையில் தம்மையும் ஈடுபடுத்தி, திரு முரளீதரனுக்கு உதவி புரியும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
மேலும் திரு அருட்பா நூல்களையும் சுத்த சன்மார்க்க விரிவுரை நூல்களையும், தயவு உரைகளையும், திரு அருட்பா ஆடியோ சி.டி.களையும் (Produced by Thiru Arutpa Amutham Deiva Isai Amutham Project) அங்கு பெறலாம் என்ற தகவலை, அனைவருக்கும் - குறிப்பாக மாவட்ட சன்மார்க்க சங்கங்கள் தோறும் கிளைச் சங்கங்கள் தோறும் தகவல் சொல்லி அனைவரும் தத்தமக்கு வேண்டிய புத்தகங்களையும், ஆடியோ சி.டி.களையும் பெற்றுச் செல்லும்படி கேட்டுக் கொள்ள வேண்டுகின்றோம்.
இதுவரையில் இல்லாத வகையில் முதல் முயற்சியாக இந்தத் திரு அருட்பா விற்பனை தயவு நூல்கள் விற்பனை ஆடியோ சி.டி விற்பனை துவக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து சன்மார்க்க சங்க அன்பர்களும், இணைய தளத்தில் இந்தச் செய்தியை பார்க்கும் சன்மார்க்க உள்ளங்களும், மற்றையோருக்கும் பரப்பி, விற்பனையை நல்ல முறையில் செய்வதற்குத் தமது ஒத்துழைப்பினை நல்கும்படி வேண்டுகின்றோம்.
பாண்டிச்சேரி மாநிலம் கர்நாடகா மாநிலத்தில் உள்ளோரும் சன்மார்க்க சங்கங்கள் நடத்துவோரும், வடலூருக்குச் சென்று திரு அருட்பா புத்தகங்கள் பெற முடியாதோரும், இந்த அருமையான வாய்ப்பினைப் பயன்படுத்தி, சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை வாங்கி, தமது உற்றார், உறவினர் ஆகியோருக்கும் வாங்கிக் கொடுத்து, சுத்த சன்மார்க்க நெறி இந்த உலகில் விரைவில் பரவுவதற்கு தம்முடைய ஆதரவினை நல்கும்படி வேண்டுகின்றோம்.
முரளீதரன் தொடர்பு எண் 98655 02500
தயவுக் குழு, மதுரை.