DAEIOU - தயவு
மதுரை நாராயணபுரத்தில் திரு அருட்பா புத்தகங்கள், தயவு வெளியீடுகள், Audio C.D.கள் கிடைக்கின்றன.

மதுரை நாராயணபுரத்தில் திரு அருட்பா புத்தகங்கள்,
தயவு வெளியீடுகள் திரு அருட்பா ஆடியோ சி.டி.கள்
கிடைக்கின்றன.
வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் நிறுவனம் ஏற்பாடு
வள்ளலார்ஆர்க் பெளண்டேஷன் நிறுவனம் தற்போது மதுரை நாராயணபுரத்தில் இயங்கி வருகின்றது. மதுரையிலிருந்து நத்தம் செல்லும் ரோட்டில், ரிசர்வ் லயனுக்கு அடுத்த நாராயணபுரத்தில் ஸ்டேட் பேங்க் எதிர் புறம் உள்ள தண்டல் முத்துக்கோனார் தெருவில் இந் நிறுவனம் இயங்கி வருகின்றது.
திரு அருட்பா சம்பந்தப்பட்ட புத்தகங்கள், விளக்க உரைகள் முதலானவை, திண்டுக்கல் தயாநிதி சரவணானந்த சுவாமிகளின் விளக்க உரை நூல்கள், தயவுப் பாக்கள் .. தற்போது கீழ்க்காணும் விலாசத்தில் விற்பனைக்கு கிடைப்பதற்கு வள்ளலார்ஆர்க் பெளண்டேஷன் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து தயவு விளக்க நூல்களை தயவு நூல் அறக்கட்டளை அன்பர் திரு ராமலிங்கம், 31.12.2008 அன்று அனுப்பி வைத்துள்ளார். அருட்பா விளக்க உரைகள் அடங்கிய நூல்கள் அவற்றில் இடம் பெற்றுள்ளன.
திரு அருட்பா ஆடியோ சி.டி.கள் சிங்கப்பூரில் திரு அருட்பா தெய்வ இசை அமுதம் ப்ரொஜெக்ட் மூலம் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இது வரையிலும் 11 வகையான ஆடியோ சி.டி.கள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.
அந்த ஆடியோ சி.டி.களும் இங்கு விற்பனைக்கு கிடைப்பதற்கு வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
ஆடியோ சி.டி.கள் தற்போது விலை குறைக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
தென் மாவட்ட அன்பர்கள் மற்றும் மதுரையைச் சுற்றியிலும் உள்ள சன்மார்க்க அன்பர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.
தென் மாவட்டங்கள் மட்டும் என்றில்லை. ஏனையோரும் இந்த வாய்ப்பினைப் பயன் படுத்திக் கொள்ளலாம் என அன்புடன் மேற்படி நிறுவனம் கேட்டுக் கொள்கின்றது.
எல்லா மாவட்ட சன்மார்க்க சங்க நிர்வாகிகள், தாங்களே இவற்றை நேரிலோ அன்றி அன்பர்களை அனுப்பியோ பெற்றுச் செல்லலாம்.
கீழ்க்காணும் விலாசத்தில் வாரந்தோறும் சன்மார்க்க சொற்பொழிவுகளை நிகழ்த்துவதற்கும் அந் நிறுவனத்தினர் முனைப்புடன் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இனி நடைபெறும் நாள் நேரம் இந்த இணைய தளத்தில் அறிவிக்கப்படும்.
கடந்த 31.12.2008 அன்று இங்கு சன்மார்க்க கூட்டம், மற்றும் சொற்பொழிவு நடத்தப்பட்டது. வருகை புரிந்த அன்பர்கள் திரு அருட்பா ஆடியோ சி.டி.கள் வாங்கிச் சென்றனர்.
கிடைக்குமிடம்.
வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன்.,
நிர்.2/244-1, தண்டல் முத்துக் கோனார் தெரு,
நாராயணபுரம் (கிழக்கு)
புது நத்தம் ரோடு, ரிசர்வ் லயன் போஸ்ட்,.
மதுரை .. பின் கோடு எண் 625 014.
தமிழ் நாடு.
VallalarOrg Foundation
Dr.2/244-1, Thandal Muthu Konar St.,
Narayanapuram (East), New Natham Road,
Reserve Lines (P.O)
Madurai . Pin Code No. 625 014.
Tamil Nadu.
Contact Number : (91) 97898 72120.
Daeiou New Year Greetings: From
VallalarOrg Foundation,.
Narayanapuram, Madurai.14.