DAEIOU - தயவு
18.12.2008 - திரு அருட்பா இசைவிழாவினை காண வள்ளல் பெருமானும் தில்லை நடராஜரும் எழுந்தருளினர். சென்னை - T. நகரில் ...

19.12.2008 ஒரு நாள் போதுமா ... திரு அருட்பா இசை விழாவினை சென்னை 'T. நகரில் கேட்பதற்கு ஒரு நாள் போதுமா ?

==================================================================================================================

வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள் பரவும் இந்தக் காலம் ஒரு பொற்காலம் ஆகும்.

வருடந்தோறும் இன்னிசைக் கச்சேரி தமிழ் நாட்டின் தலைநகரமாம் சென்னையில் ந்டைபெற்று வருகின்றது.

நான்காவது ஆண்டாக, திரு அருட்பா இசைவிழாவினை, திருபுவனம் திரு ஆத்மநாதன் அவர்கள் செய்து

வருகின்றார்.

17.12.2008 முதல் நாள் நிகழ்ச்சிகள் மிகச் சிறப்புற நடந்தேறின.

18.12.2008 இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் அதை விடச் சிறப்பாக நடந்தேறின.

என்னவென்று கேட்கிறீர்களா ?

சீர்காழி சிவ சிதம்பரம் 18.12.2008ந் தேதி திரு அருட்பா இசை மழையினை, அவ்ரது தந்தையார்

திரு சீர்காழி கோவிந்தராஜனைக் காட்டிலும், மிகவும் அற்புதமாக தமக்கே உரிய பாணியில்

பாடினார். கேட்பதற்கு கூடுதலாக காதுகள் இல்லையே என்று வந்த அன்பர்கள் வருத்தப் பட்டனர்

என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அதற்கு மேல், மேற்கு மாம்பலத்திலிருந்து ஜெய சாத்விகா நாட்டியாலயாவிலிருந்து வந்த

மாணவச் செல்வங்கள் திரு அருட்பா பாடல்களுக்கு அபிநயம் பிடித்து ஆடிய காட்சியினைக்

காண வள்ளலாரும் தில்லைச் சிதம்பரம் நடராஜரருமே இசை விழா மேடைக்கு வந்து

தாமும் குழந்தைகளுடன் குழந்தைகளாக ஆடினர் .. காணக் கண் கோடி வேண்டும் ..

என்ன .. இது சாத்தியமா என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது அல்லவா ?

குழந்தைகள் வள்ளல் பெருமானைப் போலவும் தில்லை நடராஜப் பெருமானைப் போலவும்

ஆடிய் காட்சி, கண்கொள்ளாத ஒன்றாகும்.

இன்னும் ஒரு நாள் 19.12.2008 மட்டும் எஞ்சியுள்ளது. பல வேறு நிகழ்ச்சிகள் உள்ளன.

எனவே, சென்னையிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் உள்ள சன்மர்க்க அன்பர்கள்

உஸ்மான் ரோடில் அமைந்துள்ள பசும்பொன் தேவர் மண்டபத்தில் நிகழ்ச்சிகளைக்

கண்டு களியுங்கள். அரங்கத்தை நிரப்புங்கள்.