திண்டுக்கல்லில் அருட்பெருஞ்ஜோதி ஆன்மீக அறக்கட்டளை. மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு வள்ளலார் நெறியில் 30.11.2008 அன்று ஞாயிற்றுக் கிழமை, பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி நடைபெற்ற விபரம்.
திரு அருட்பிரகாச வள்ளலார் ஜோதியில் கலந்த தினமான தைப்பூசத் திருநாளை முன்னிட்டு மாணவ, மாணவியருக்கு திரு அருட்பா ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி 30.11.2008 ஞாயிற்றுக் கிழமை திண்டுக்கல் நேருஜி நினைவு மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இது குறித்து வெளியான அழைப்பிதழில் கண்ட விவரங்கள்.
தலைமை
தயவுத்திரு முனைவர் இராம. பாண்டுரங்கன், M.A., M.Ed., Ph.D.,
முதன்மைக் கல்வி அலுவலர், மதுரை.
வரவேற்புரை - தயவுத்திரு ஓ.சந்திரன், M.A., M.Ed.,
தலைமை ஆசிரியர், நேருஜி நினைவு மேல்நிலைப் பள்ளி.
வாழ்த்துரையும் பரிசுகள் வழங்குதலும்
தயவுத்திரு G. சுந்தரராஜன், திண்டுக்கல் மாவட்டக் கல்வி புரவலர்.
வாழ்த்துரை
தயவுத் திரு அருட்பெருஞ்ஜோதி S.S. கிருஷ்ணமூர்த்தி
தயவுத்திரு மேடா B. நித்தியானந்தம்.
தயவுத்திரு N.V.G.B. ராஜாராம்.
தயவுத்திரு S.S. சிவராம்.
தயவுத்திரு M. ராமலிங்கம்.
தயவுத்திரு து. செளந்தர ராஜன்/
நன்றியுரை - தயவுத்திரு S.S. மோகன் ராம்,
தலைவர், அருட்பெருஞ்ஜோதி ஆன்மீக அறக்கட்டளை.
இங்ஙனம்
அருட்பெருஞ்ஜோதி ஆன்மீக அறக்கட்டளை, திண்டுக்கல்.
நிகழ்ச்சி நடந்த விவரம், தினத் தந்தி நாளிதழில் 1.12.2008 அன்று வெளிவந்தது.
பத்திரிகைச் செய்தி, கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி.
திண்டுக்கல் டிச.1 -
திண்டுக்கல்லில் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி நேற்று நடந்தது,
கட்டுரைப்போட்டி
வள்ளலார் ஜோதியில் கலந்த தினமான தைப் பூசத் திருநாளையொட்டி, திண்டுக்கல் அருட்பெருஞ்ஜோதி ஆன்மீக அறக்கட்டளை சார்பில் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கு, கட்டுரை பேச்சுப் போட்டி, வினாடி வினா மற்றும் திருஅருட்பா பாடல் ஒப்புவித்தல் போட்டி திண்டுக்கல் நேருஜிநினைவு நகரவை மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
6 முதல் 8ஆம் வகுப்புவரை, 9 மற்றும் 10-ம் வகுப்பு 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப் பட்டன. இதில் திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கூடங்களளச் சேர்ந்த மாணவ, மாணவியகள் 604 பேர் கலந்து கொண்டனர்.
போட்டிகள் திண்டுக்கல் நேருஜி நினைவு நகரவை மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஓ.சந்திரன், M.A., M. Ed, அருட்பெருஞ் ஜோதி ஆன்மிக அறக்கட்டளை தலைவர் எஸ்.எஸ்.மோகன் ராம், எஸ்.எஸ்.சிவராம், அருள் ஜோதி வள்ளலார் மேல் நிலலப்பள்ளி தலலவர் எஸ்.எஸ்.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முன்னிலலயில் நடந்தது. போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.
நாகர் கோவில் மாவட்டத்தில் சமீபத்தில் வள்ளல் பெருமானைப் பற்றி, பள்ளிக் குழந்தைகளிடையே, இதுபோன்றதொரு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்திலும் சன்மார்க்கச் சான்றோர், சன்மார்க்க முதன்மைக் கல்வி அலுவலர் திரு பாண்டு ரெங்கன் ஆகியோரின் பெரிய முயற்சியால், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரிடையே, வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி பரப்பப் படுவது மிகவும் பாராட்டுதற்குரிய விஷயம் ஆகும்.