DAEIOU - தயவு
திண்டுக்கல் பொன்னகரத்தில் தயவு S.L.V. சீதாமணி அய்யா மகா சமாதி மண்டல பூஜை ஆன்ம அஞசலி வழிபாட்டு விழா.

சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம், பொன்னகரம், திண்டுக்கல்
தயவு S.L.V. சீதாமணி அய்யா மகா சமாதி மண்டல பூஜை ஆன்ம அஞசலி வழிபாட்டு விழா.
நாள் 30.11.2008 சர்வதாரி ஆண்டு கார்த்திகைத் திங்கள் 15ந் தேதி.
அருட்பெருஞ்ஜோதி தயவுப் பெரு நெறியில் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களோடு சுமார் 45 ஆண்டுகளாக தயவுத் தொண்டாற்றி அனைவரும் தயவுப் பெரியவர் எனப் போற்றும்படி வாழ்ந்த திண்டுக்கல் நாகல் நகர் தயவுத் திரு S.L.V. சீதாமணி அய்யா அவர்கள் கடந்த 13.10.2008 திங்கட்கிழமை உயிரடக்கம் ஆகி அன்னாரினி உடல் அடக்கம் 14.10.2008 செவ்வாய்க் கிழமை மாலை 4 மணி அளவில் மகா சமாதி செய்யப்பட்டதை நினைவு கூர்ந்து 30.11.2008 ஞாயிறு அன்று சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்ல தியான மண்டபத்தில் அன்னாரின் மகா சமாதி மண்டல பூஜை ஆன்ம அஞ்சலி வழிபாடு விழா காலை 10.30 மணி அளவில் தொடங்கப் பெற்றது.
வந்திருந்த சன்மார்க்க தயவு அன்பர்கள் அனைவரும் அருட்பெருஞ்ஜோதி தயவு சத்திய ஞான தீபத்தின் முன் அமர்ந்து திருவடிப்புகழ்ச்சி அருட்பெருஞ்ஜோதி அகவல், அட்டகம், சுவாமி சரவணானந்தா அவர்களின் வாழ்த்துப்பாவினையும் பாடினர். பின்னர் 12.35 மணி அளவில் 5 நிமிட நேரம் ஆன்ம அஞ்சலி மெளனப் பிரார்த்தனை நிகழ்த்தப் பட்டது. தயவுத்திரு எஸ்.ஆர். ராமலிங்கம் அவர்கள் மதியம் 12.40 மணி அளவில் சென்னை டாக்டர் சுரேஷ் பாபு எம்.எஸ்.மதுரை டாக்டர் கே.வி. ராதாகிருஷ்ணன் உறவினர்கள் மதுரை கணபதி ராம் பாளையங்கோட்டை லக்ஷ்மையா நாகல் நகர் S.L.V. சீதாமணி அய்யாவின் மனைவி, மகன்கள், மகள்கள் மருமக்கள் மார்கள் பேரன்கள் மற்றும் உறவினர்கள், மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத்தலைவர் T.R. ஜவஹர்லால், அவருடன் வந்த சன்மார்க்க அன்பர்கள் சின்னாளப்பட்டி அன்பர்கள் திண்டுக்கல் நாகல் நகர் தயவு தொண்டர்கள் மகளிர், சன்மார்க்க சகோதர, சகோதரிகள், மாணவ, மாணவியர் அனைவரையும் வரவேற்றார்.
பின்னர் 12.50 மணீ அளவில், தயவுத்திரு S.L.V.S. குமாரசிவம் அவர்களால் சுவாமி சரவணானந்தா அருளிய பேருபதேசப் பிழிவு வாசிக்கப்பட்டது. பின்னர் 1.00 மணீ அளவில், சுவாமிகளின் அணுக்கத் தொண்டர் சொற்பெருக்கு ஆற்றினார்.
அவர் பிரபஞ்ச நடனம் என்ற தலைப்பில் பேசியதாவது
உலகுயிர்த் திரள் எலாம் ஒளி நெறி பெற்றிட
இலகும் ஐந்தொழிலையும் யான் செயத் தந்தனை (அருட்பெருஞ்ஜோதி அகவல்)
என்றபடி அருட்பெருஞ் ஜோதி தயவுக் கடவுள் வள்ளலாருக்கு தமது ஐந்தொழிற் காரியப் பாடுகளை, பிரபஞ்ச நடனத்தை நடத்தும் பேராற்றல்களை எல்லாம் வழங்கி விட்டார். 1.8.1943 சுபானு ஆண்டு ஆடி 17 அமாவாசை குரு சூரிய, சந்திரன் ஆகிய் மூன்றும் ஒரு பாதத்தில் வந்து கலியுகம் முடியும் தருணத்தில் அருட்பெருஞ்ஜோதியும், அருட்பிரகாச வள்ளலாரும் இரண்டற்ற ஒன்றாக இருந்து சுவாமிகளின் ஆன்ம அகத்தில் அனகமாக, எல்லாம் வல்ல பிரபஞ்ச நடனம் முதல் அருள் தயவு அனுபவங்களி எல்லாம் வழங்கப்பட்ட நிலையில் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஐந்தொழில் காரியப் பாடுகளை அனைத்து ஆன்மாக்களிலும் இருந்து செயல்படுத்திக் கொண்டிருக்கும் உண்மைகளை வெளிப்படுத்து முகத்தான் சுவாமிகள் ஒரு குறிப்பிட்ட ஆன்மாவாம் தயவு S.L.V. சீதாமணி அய்யா அவர்களின் குழந்தைகளுக்கு, பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்ற முறையில் இறைவனின் பிரபஞ்ச நடன உண்மைகளை பொருத்தி சிவராமன்,. தயாமணி, ஜோதி, ஞானம், குமாரசிவம் எனப் பெயர் சூட்டி இருக்கின்றார் என்பது வெள்ளிடை மலையாகும். இந்தப் பெயர் உண்மை இயற்கை விளக்கங்களைப் பற்றி சுவாமிகள் எல்லோருக்கும் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.
தயவு SLV சீதாமணி அய்யா அவர்கள் தயா பிரகாச சுவாமிகளோடு சத்திய ஞான சபாபதி அவர்களின் காலத்திலேயெ சார்ந்தார். சுமார் 45 ஆண்டுகளாக “தயவுப் பெரியவர்” என அனைவராலும் போற்றப்பட்டு, தயவு வாழ்வில் தன்னை முழுவதுமாக அற்பணித்துக் கொண்டார். எல்லோரும் தயவைக் கடைப் பிடித்து வாழ தானே முன் உதாரணாமாக எடுத்துக் காட்டாக வழி காட்டியாக தயவு வாழ்வில் வாழ்ந்தார். இவரது தயவு வாழ்வு அனுபவங்களை நம் ஆன்மாவில் கொண்டு தயவு வாழ்வு வாழ்வோம். இந்த ஆன்ம அஞ்சலி விழாவில் நாம் மேலும் இருவரைப் பற்றி நினைவிற் கொள்ளக் கடமைப் பட்டுள்ளோம். 1. தயவு கிருஷ்ணமாச்சாரியார் D.C.T.O அவர்கள். இவர், தயாப் பிரகாச சுவாமிகளுக்கும் அணுக்கத் தொண்டர் உடனிருந்து சகல உதவிகளையும் செய்து தந்தவர்,
2. மதுரை டாக்டர் K.V. ராதாகிருஷ்ணன். இவர். சுவாமிகளை, வெளிஉலகத்துக்கு அறிமுகப் படுத்தியவர். சுவாமிகள் எழுதிய தியானமும் தியாகமும் நூல் முதற் பதிப்பினை வெளியிட்டவர்.
இப்படிப் பட்ட ஆன்ம அனுபவங்களை, வள்ளலாரின் சுத்த சன்மார்க்கக் கொடி விளக்கத்தின்படி ஒரு பங்கு பொன்மை, 3 பங்கு வெண்மை என்ற முறையில் ஒரு பங்கு தயாபிரகாச சரவணானந்த பர்மான்மபதி சுவாமிகள், - பொன் வண்ணத்திலும் 3 பங்கு வெண்மை என்பதற்கு பொருத்தமாக 1. தயவு கிருஷ்ணமாச்சாரியார் ஆன்மா 2, டாக்டர் K.V. ராதாகிருஷ்ணன் ஆன்மா, 3. தயவு S.L.V. சீதாமணி அய்யா ஆன்மா இப்படிப்பட்ட உண்மமகளிஎல்லாம் அருள் நிலை நின்று தயவு நிலை நின்றுஅகமிருந்து அனகமாக உணர்ந்தால்தான் தெரியவ்ரும். இவைகள் எல்லாம் எல்லாம் வல்ல ஒன்றான தனிமைத் தலைமை பெருங்கடவுளின் பிரபஞ்ச நடனமே. ஐந்தொழிற் காரியப்பாடுகளே ஆகும் என தமது உரையை நிறைவுசெய்தார்.
பின்னர் 1.30 மணீ அளவில் தயவுத் திரு S.L.V.S. சிவராமன் அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார். குறிப்பாக எனது தந்தையார் சமாதி நல்லடக்கம் சன்மார்க்க முறையில் நடைபெற்றதற்கு உடனிருந்து உதவியவர்களான தயவுத்திரு S.R. ராமலிங்கம் அவர்களுக்கும் தயவு விசுவநாதன் அவர்களுக்கும் நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பின்னர் ஜோதி வழிபாடு விழா நிறைவாக சிறப்பாக அன்ன விருந்து பரிமாறப்பட்டது.