திருவண்ணாமலையில் தர்மசாலை திறப்பு விழா காண வாருங்கள் ….
வரும் 7.12.2008 மற்றும் 8.12.2008 ஆகிய தேதிகளில், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில்
வருண லிங்கம் அருகில் (Giri valam path – Aisle of Sri Varunalingam) மேற்படி ஊரைச் சேர்ந்த
அன்பர் திரு கலை நம்பி அவர்களின் பெருமுயற்சியால், திரு அருட்பா பீடம் - வள்ளல் பெருமானின்
திருச் சன்னிதானம் – சன்மார்க்க துவஜஸ்தம்பம் – தர்மசாலை முதலானவை திறப்பு விழாக் காண இருக்கின்றன.
என்ன திருவண்ணாமலையில் இந்த மாதம், கார்த்திகை தீபத் திருவிழா உள்ளதே .. அதற்கு முன்
அருட்பெருஞ்ஜோதி தீபத் திருவிழாவா என .. எண்ணுவது புரிகிறது.
சுத்த சன்மார்க்கம் கண்ட வள்ளல் பெருமானின் அருட்கொடைகளைப் பறை சாற்றும் அன்பர்கள் பலர்
திருவண்ணாமலையில் உள்ளனர். அவரவர் எடுத்துக் கொண்ட பணியினை அவரவர் திறம்பட ஆற்றியும்
வருகின்றனர். இதனை சன்மார்க்க உலகம் நன்கு அறியும்.
தற்போது மூத்த சன்மார்க்க அன்பர் திரு கலைநம்பி அவர்கள், கிரிவலப் பாதையிலேயே .. வருண லிங்கம்
அருகில் .. சன்மார்க்க அன்பர்களின் நீண்ட நாள் வேண்டுகோளினை நிறைவேற்றி வைக்கும் விதத்தில், இந்தக்
கட்டிடங்களை எழுப்பி, திறப்பு விழா விசேடத்தை நடத்த உள்ளார்.
திருவண்ணாமலைக்கு வரும் அன்பர்கள் அனைவருக்கும் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் அருளிய
சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்ற அந்த அன்பரின் ஆழ்மனத்தில் ஊன்றிய
வேரின் விளைவுதான் இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வித்திட்டது.
அதற்கு அவருக்கு சன்மார்க்க உலகம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
மதுரையில் இருந்து திருவாளர்கள் சுந்தரக் கண்ணன், தருமலிங்கம், சந்திர மோஹன், தயவு அன்பர்
சென்னையில் இருந்து திரு சதீஷ் குமார் .. முதலானோர் தாங்கள் இவ் விசேடத்திற்கு வருகக தர உள்ளனர்.
இவ்வளவு அருமையானதொரு விசேடத்தினை நீங்களும் உங்கள் குடும்பத்தாருடன். சார்ந்துள்ள சன்மார்க்க
சங்க அங்கத்தினர்கள் சகிதம் வந்து காண வேண்டாமா ? …. இன்னும் ஓரிரு நாட்கள்தான் உள்ளன...
வாருங்கள் ,. வந்து தரிசியுங்கள் ..
அண்ணாமலையில் அருட்பெருஞ்ஜோதி தீபத்தை ..
Write a comment