புதுக்கோட்டை மாவட்ட தலைமை சங்கம். ...
Ramanujam
posted 38 months ago
04 Dec 2008 08:44:54 GMT 8:44:54 AM
1458 views
புதுக் கோட்டை மாவட்ட தலைமைச் சங்கம்.
http://www.vallalarfiles.com/image/CIq2I8e1evjAlV8JUKj4pA,$,3d,$,3d/sz-tn650/041220081926120000.jpg
புதுக்கோட்டை மாவட்ட தலைமைச் சன்மார்க்க சங்கம், அந்த ஊரில், பல்லவன் குளம் என்ற குளக் கரையின் மேற்கில் கம்பீரமாக அமைந்துள்ளது. அந்த சங்கத்தில் கீழ்க்கண்ட சன்மார்க்கிகள் அலுவலர்களாக இருந்து இச் சங்கத்தினைத் திறம்பட நடத்தி வருகின்றனர்.
- திரு கோவிந்தராஜு, தலைவர்.(ஆசிரியர்-ஓய்வு)
- திரு சுப. சின்னப்பா, பொருளாளர்.(ஆசிரியர்-ஓய்வு)
- திரு முத்தையா, செயலாளர். (ஆசிரியர்-ஓய்வு)
- திரு ஏ.ஆறுமுகம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) துணைத் தலைவர்
- திரு பிச்சையப்பா, சங்கத்தில் உள்ள நிரந்தரப் பணியாளர்.
- திருமதி பெரிய நாயகி அம்மாள், உணவு சமைப்பவர்.
http://www.vallalarfiles.com/image/hPpqJff9l1A7lLqF1ko9Jg,$,3d,$,3d/sz-tn650/041220081926080000.jpg
அங்கு விஜயம் செய்த (4.12.2008) சமயம் காலை 11.20 மணி. மதிய உணவு தயார் செய்யப்பட்டிருந்தது. வினியோகம் செய்வதற்கு தயார் நிலையில் அது வைக்கப்பட்டிருந்தது., திருஞானம் என்ற (ஆசிரியர்-ஓய்வு) அங்கு இருந்தார். இந்தச் சங்கம் 50 ஆண்டுகளுக்கு மேற்பட்டது என்றார். தாம் அருகில் ஒரு கோவிலில் இருப்பதாகவும், அடிக்கொரு தடவை, இந்த சங்கத்தில் வந்து இருப்பதும், மற்றும் சங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுவும் உண்டு என்றார்.
சற்று நேரம் கழித்து, துணைத் தலைவர் திரு ஏ.ஆறுமுகம் வந்தார்.
தினசரி காலை கஞ்சி வார்க்கப்படுகிறது. மதியம், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்யப்படுகின்றது என்றார். வார வழிபாடு குரு வார சொற்பொழிவு, முக்கிய நாட்களில் சன்மார்க்கச் சான்றோர்களைக் கொண்டு சொற்பொழிவு, அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்று வருகின்றன என துணைத் தலைவர் திரு ஏ.ஆறுமுகம் தெரிவித்தார்.
அவர் வந்த பின்னர், பள்ளியிலிருந்து சுமார் 40 மாணவர்கள், மதிய உணவுண்ண வருகை புரிந்தனர். நேரத்தினைக் கருதி, அவர்களுக்கு, உடனே அவரது மேற்பார்வையில், உணவு பரிமாறச் சொன்னார். எல்லா மாணவர்களும் வயிறார உண்டனர். அவ்விதம் உணவுண்ணும் போதே மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்வியினை திரு ஏ.ஆறுமுகம் போதித்தார்.
இந்த சன்மார்க்க சங்கத்தில், சன்மார்க்கிகளில் பெரும்பாலானோர் தேடும் ஒளவை துரைசாமி பிள்ளை எழுதி வெளியிட்ட திரு அருட்பா அனைத்துப் பாடல்களுக்கும் உரை விளக்கம் (10 வால்யூம்கள்) உள்ளன. சங்க அன்பர்கள் படிப்பதற்காக அது பார்வைக்கு வைக்கப் பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த உரை விளக்க நூல் வர்த்தமானன் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 10 வால்யூமின் விலை ரூ.3,000/- ஆனால் தற்போது எங்கிலும் இந்த உரை விளக்க நூல் கிடைக்கப்பெறவில்லை. நேரடியாக சென்னையில் உள்ள வர்த்தமானன் பதிப்பகத்திற்கே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விற்பனைப் பிரதிகள் ஏதேனும் உள்ளனவா எனக் கேட்கப்பட்டது. விற்றுத் தீர்ந்து விட்டது என பதிப்பாளர்கள் தெரிவித்தனர்.
அவ்விதம் பேசிக்கொண்டிருக்கும்போது திரு நாராயணசாமி என்;பவர் வந்தார். (வயது 68 இருக்கும்) அவர், அருகிலுள்ள புத்தாம்பூர் என்ற கிராமத்தினைச் சேர்ந்தவர். அடிக்கடி இந்த சன்மார்க்க சங்கத்தில் இவர் சொற்பொழிவு நிகழ்த்தி வருகின்றார். (திண்ணைப் பள்ளிக் கூடத்தில்தான் படித்தேன் என்றார் நேரில்) 19ஆம் வயது முதலே சன்மார்க்கத்தில் பற்றுக் கொண்டு, அக் கல்வி பயின்று, சொற்பொழிவு நடத்தும் அளவிற்கு உயர்ந்துள்ளார். திரு அருட்பா பாடல்கள், பல, இவருக்கு மனப்பாடம்.
http://www.vallalarfiles.com/image/9bzBj1EgeqzAo0bkYlx9jg,$,3d,$,3d/sz-tn650/041220081926060000.jpg
அவரிடம் உரையாடிக்கொண்டிருக்கும்போது, திரு பழனிவேலு என்ற வயோதிகமான சன்மார்க்கி வந்தார். (வயது 70 இருக்கும்). அவர் புதுக்கோட்டையிலிருந்து 16 கி.மீ. தூரத்தில் உள்ள சின்ன ஊரணிப்பட்டி கிராமத்தில் இருந்து தாம் வருவதாகத் தெரிவித்தார். அந்த கிராமத்தில் வீடுகளில் வைத்து, சன்மார்க்கம் வளர்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதுமாக – 128 கிளைச் சங்கம் உள்ளன என விசாரித்ததில் தெரிந்தது. இதன் ஒரு முக்கியமான கிளை, ஏ.மாத்தூர் என்ற இடத்தில் உள்ளது. அங்கு, மாணவர்கள் பயிலுவதற்கென பள்ளியும் உள்ளது என விசாரணையில் தெரிய வந்தது. சிறப்பாக சன்மார்க்க பணி புரியும் புதுக்கோட்டை சங்கம், 1983ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு, நல்ல கட்டிடம் கட்டி நகரின் மையப்பகுதியில் இயங்கி வருகிறது. வளரட்டும் இச் சங்கத்தின் சன்மார்க்கத் தொண்டு !
For More Photos: