12/2/2008 9:31:23 AM by தயவுக் குழு உறுப்பினர்.
மருதூரில், திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான் பிறந்த அறையினைக் காண வாருங்கள்.
திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான் பிறந்தது மருதூர் கிராமத்தில்.
பெருமானார் பிறந்த இடத்தில், கட்டிடங்கள் கட்டப்பட்டு,
வழிபாடுகள் வந்தனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால், அவர்கள் - 1823ஆம் ஆண்டில் வருவிக்க உற்றபோது அந்த இடம்
எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும்;
என்ற சன்மார்க்க அன்பர்களின் விழைவுக்கொப்ப, மேலே கட்டிடம் எழுப்பப்பட்டு
விட்டாலும், நிலவறை போன்ற அமைப்பில், பெருமான் வருவிக்க உற்ற இடம்
இன்றளவும் அப்படியே பராமரிக்கப்பட்டு வருகிறது.
மலேசியாவிலிருந்து சுங்கை பெடானி அருட்பெருஞ்ஜோதி நிலையத்தில்
முக்கிய உறுப்பினர் டாக்டர் திரு விநாயக மூர்த்தி மற்றும் குழுவினர்,
கடந்த 2007 அக்டோபர் மாதம் அங்கு வந்து தரிசித்து, தியானம்