12/1/2008 10:06:33 AM by தயவுக் குழு அன்பர்.
14.12.2008 ஞாயிறு அன்று திண்டுக்கல் பொன்னகரத்தில்
மாதப் பூச விழா.
பூச நாள் விழா, திண்டுக்கல் நகரின் அருகே நத்தம் செல்லும் சாலையில்
அமைந்துள்ள திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் அருட்பெருஞ்ஜோதி
தயவு ஆலயத்தில் 14.12.2008 (ஞாயிறு) அன்று காலை முதல் நடைபெறும்.
திருஅருட்பா பாடல்கள், தயவுப் பாடல்கள், அன்னதானம் போன்ற நிகழ்வுகள்
அன்றைய தேதியில் அங்கே நடைபெறும்.
மூத்த சன்மார்க்க அன்பர்களின் சொற்பொழிவும் அன்றைய தேதியில்
நடத்தப்படும்.
அன்பர்கள் அனைவரும் மேற்காணும் நாளில் மாதப் பூச விழா நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு சுத்த சன்மார்க்க விளக்கங்களைத் தெரிந்து கொள்ளும்படிக்
கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.