26.11.2008 சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் சன்மார்க்க முழக்கம்.
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் 26.11.2008 புதன் கிழமை திருவருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தியடிகள் நினைவு அறக்கட்டளையின் மூலம் 3ஆம் ஆண்டு சொற்பொழிவு நிகழ்ச்சி அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.
இதற்காக சேலம் மூத்த சன்மார்க்க சாது முத்தையா சுவாமி அவர்கள் ரூ.1 லட்சம் நன்கொடையினை அளித்து வருடா வருடம், வள்ளலார் குறித்து சேலம் பல்கலைக் கழகத்தில் சொற்பொழிவு நடைபெற வேண்டும். கல்லூரியில் பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களைத் தெரிந்து, தமது வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் இதனைச் செய்து வருகின்றார்.
அவருக்கு வயது சுமார் 80 இருக்கும். அவரது பணிகள் சிறக்கவும், பல்லாண்டு அவர் வாழ்ந்து, சன்மார்க்க உலகிற்கு இது போன்ற பற்பல அருந்தொண்டுகளை ஆற்றிடவும், அனைத்து சன்மார்க்க அன்பர்களும் வாழ்த்த வேண்டும்.
நிகழ்ச்சி நிரலில் கண்ட விவரங்கள் வருமாறு
(முதற் பக்கம்)
பெரியார் பல்கலைக் கழகம், சேலம். 11
தமிழ்த் துறை
சன்மார்க்கச் சான்றோர்கள், தியாகச் செம்மல் சாது முத்தையா சுவாமிகள், ஈர நெஞ்சினர் மருத்துவர் சி.துரைசாமி ஆகியோரின்
திருவருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தியடிகள் நினைவு அறக்கட்டளை
மூன்றாமாண்டுச் சொற்பொழிவு
நவம்பர் 26, 2008
அழைப்பிதழ்
சேலம் பல்கலைக்கழகம் பேரவைக்கூடம்,
பெரியார் தொலை நிலைக்கல்வி நிறுவனக் கட்டடம்
விழைவு – தங்களின் மேலான வருகை
இவண்.
தமிழ்த் துறைத் தலைவர் – துறையினர்
அறக் கட்டளையினர்.
(இரண்டாம் பக்கம்)
பெரியார் பல்கலைக் கழகம், சேலம்.11
தமிழ்த் துறை
திருவருட்பிரகாச வள்ளலார்
மகாத்மா காந்தியடிகள் நினைவு அறக்கட்டளை.
மூன்றாமாண்டுச் சொற்பொழிவு
26.11.2008 புதன் காலை 10.30 மணி
வரவேற்புரை
திரு பெ. மாதையன்
பேராசிரியர்- தலைவர், தமிழ்த்துறை
தலைமையுரை
திரு. பேராசிரியர் முனைவர் மு.தங்கராசு அவர்கள்,
துணை வேந்தர், பெரியார் பல்கலைக் கழகம்,
வள்ளலார் சொற்பொழிவு
வள்ளலார் ஒரு புரட்சியாளர்
முனைவர் இரா.குமாரவேலன் அவர்கள்,
பேராசிரியர் (ஓய்வு)
பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
காந்தியடிகள் சொற்பொழிவு
அகிம்சையும், காந்திஜியின் சுதந்திரப் போராட்டத் தியாகமும்,
திரு அ.க.ப.கதிர்வேலு அவர்கள்.
நிறுவனர் மற்றும் தலைவர்,
பாரத வெண்புறா அறக்கட்டளை, சேலம்.
நன்றியுரை
மருத்துவர் சி.துரைசாமி, எம்.பி.பி.எஸ்., டி.ஏ.,
திருவருட்பிரகாச வள்ளலார் அறக்கட்டளை,
சேலம்.
சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் இவ் விழாவில் பங்கு கொள்ள வேண்டும் என சேலம் பெரியார் பல்கலைக் கழகமும், திரு சாது முத்தையா சுவாமி அவர்களும், டாக்டர் சி.துரைசாமி அவர்களும் அழைக்கின்றனர்.
http://www.vallalarfiles.com/image/TC,$,2fcvy04alJxCrhx4sZRwQ,$,3d,$,3d/sz-tn650/CoverPage25380000.jpg
http://www.vallalarfiles.com/image/2zInof8Kk,$,2fwvwtte0f1Ogg,$,3d,$,3d/sz-tn650/Page-125400000.jpg
http://www.vallalarfiles.com/image/dfui7cRFdHkRrZ,$,2bRdmAhxg,$,3d,$,3d/sz-tn650/Page-225420000.jpg
Write a comment