சின்னக்காவனம்-வள்ளலார் வணங்கிய நூற்றி எட்டீஸ்வரர் (108 ஈஸ்வரர்) ஆலயம் பற்றிய குறிப்புகள்
Ramanujam
posted 38 months ago
23 Nov 2008 04:27:08 GMT 4:27:08 AM
1510 views
சின்னக்காவனம்-வள்ளலார் வணங்கிய நூற்றி எட்டீஸ்வரர் (108 ஈஸ்வரர்) ஆலயம் பற்றிய குறிப்புகள்
பொன்னேரி தாலுகா சின்னக்காவனத்தில் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் தாயார் அவதரித்தார். அந்த ஊரில் உள்ள நூற்றெட்டீஸ்வரர் ஆலயம் மிகவும் பழமையானது. வரலாற்றுச் சிறப்புடையது. அந்த ஊரினை ஒட்டிச் செல்லும் ஆரண்ய நதியில் 108 நாள் லிங்க பிரதிஷ்டை செய்ததன் பலனாக, இந்த ஆலயத்தில் உள்ள வேதபுரீஸ்வரர் லிங்க வடிவில் எழுந்தருளி உள்ளதாக அங்கு விசாரித்ததில் தெரியவந்தது.
அந்த ஆலயத்தில் - வள்ளல் பெருமான் பற்றிய குறிப்புக்கள் சுவற்றில் எழுதப்பட்டுள்ள வள்ளல் பெருமானின் வரலாறு, அவர், தனது அன்னையாருடன் குழந்தைப் பிராயத்திலேயே இங்கு வந்தது .. போன்ற குறிப்புக்கள் .. இடை இடையே சிமிண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தும், சில இடங்களில் சிமிண்டை
வைத்து பூசியும் உள்ளதால், அந்த ஆலயத்தின் சுவற்றில் உள்ள குறிப்புக்கள் சிதைந்துள்ளன.
http://www.vallalarfiles.com/image/qN4kBB0pYXHBGYOWTURbhQ,$,3d,$,3d/sz-tn650/121120081424660000.jpg
எனினும் அவற்றை வள்ளலார் ஸ்பேஸ் இணைய தளத்தினைக் காணும் அன்பர்கள் தாமும் காண வேண்டும் - வள்ளலார் எழுந்தருளிய அந்த ஆலயத்தினை அனைவரும் காண வேண்டும் என்ற அவா மிகுதியால், இங்கு, அந்த ஆலயம், அங்கு வளர்ந்துள்ள 2,500 வருடங்களுக்கு முற்பட்ட – ஸ்தல விருட்சமான அங்கோல மரம் (ஏரெழுஞ்சல் மரம்), அதன் சிறப்பு, ஆலயத்தின் முகப்புப் பகுதி முதலானவை, இங்கு புகைப்பட வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
இதனைக் கண்டபின் சின்னக் காவனத்திற்கு நேரில் செல்லும் அவா மிகுகிறதா ? சென்னையில் இருந்து 1 கோயம்பேடு பஸ் டெர்மினஸிலிருந்து பஸ் பயணம் மணி நேரம் .. பொன்னேரிக்கு - இல்லையென்றாலும் சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து எலக்ட்ரிக் ட்ரெய்ன் பொன்னேரிக்கு உள்ளது .. அங்கிருந்து 4 கி.மீ தூரத்தில் (டவுன் பஸ் வசதி உள்ளது) இந்த ஆலயம், (மற்றும் சின்னம்மையார் பிறந்த இடம் .. அங்கு அமைந்த அருட்பிரகாச வள்ளலார் அருளாட்சித் திருச் சங்கம் .. ஆகியவற்றை தரிசித்து விட்டு வரவேண்டியது தானே ?
http://www.vallalarfiles.com/image/EBNCTLm7flCaS70ja,$,2f,$,2bnAg,$,3d,$,3d/sz-tn650/121120081424720000.jpg
For More Photos