<<
Upcoming Events
Space Directory
Web Albums
Documents Download
Audio
Radio
Search in ThiruArutpa
Print
Post your comment

Dhayavu Illam Opening

Ramanujam
posted 43 months ago
02 Jun 2008 14:37:18 GMT 2:37:18 PM

1700 views


அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம்

 

          திண்டுக்கல் நகரில் உள்ள மலையடிவார சன்மார்க்க சங்கத்தின் செயலாளரும், பன்னாட்டு சன்மார்க்க சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளருமான சன்மார்க்க அன்பரும், திண்டுக்கல் மாநகரத்தின் தொழில் அதிபருமான தயவுத் திரு மேடா நித்தியானந்தம் அவர்கள் குடும்பத்தினரின் புது மனை புகு விழா, திண்டுக்கல் நகர் கரூர் ரோட்டில் உள்ள பெஸ்கி கல்லூரி எதிரில் அமைந்துள்ள AK MG நகர் 3வது தெருவில் 1.6.2008 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது.

 

            அதற்கு முந்தைய நாளான 31.5.2008 (சனிக்கிழமை) அன்று மாலை 6.00 மணியளவில், திரு அருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் அப் புது வீட்டில் நடைபெற்றது. அவ் விழாவிற்கு, திண்டுக்கல் மாவட்டத்தின் சன்மார்க்க அன்பர்கள் மதுரை மாவட்டத்தின் சன்மார்க்க அன்பர்கள் மற்றும் சென்னையில் இயங்கி வரும் பன்னாட்டு சன்மார்க்க சங்கத்தின் தலைவரான திரு கே.எஸ்.சுப்பு ராமன் மற்றும் அச் சங்கத்தின் பொதுச் செயலாளர் – தஞ்சாவூர் (Dr) பி.கே. சிவராமன் அவர்களும் கலந்து கொண்டனர். ஒட்டன் சத்திரம் சன்மார்க்க சங்கத் தலைவர் திரு சென்னி சண்முகம் அவர்களும் பழனி சன்மார்க்க அன்பர் டாக்டர் வித்யா சாகரும் கலந்து கொண்டார்.

 

            மதுரை அன்பர் திரு அருட்பா ரங்கநாதன் அவர்கள், அருட்பெருஞ்ஜோதி அகவலை பாராயணம் செய்தார். அவரைத் தொடர்ந்து, அங்கு குழுமியிருந்த சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் அகவல் பாராயணம் செய்தனர்.

 


            திண்டுக்கல்லில் வாழ்ந்த சன்மார்க்க ஞானி தயாநிதி சரவணானந்த சுவாமி அவர்கள், 1.3.2003 மகா சிவராத்திரி அன்று, திண்டுக்கல் நகரில் உள்ள  பொன்னகரம் என்ற பகுதியில், அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம் என்ற ஒரு இல்லத்தினை,  சன்மார்க்க அன்பர்களின் உபயோகத்திற்காக துவக்கினார். அவ் இல்லம், பொள்ளாச்சி. சன்மார்க்க சீலர் டாக்டர் என்.மகாலிங்கம் அவர்களால் அன்றைய தேதியில், திறந்து வைக்கப்பட்டது. திரு மேடா நித்தியானந்தம் அவர்கள், திண்டுக்கல் தயாநிதி சுவாமி அவர்களிடம் பேரன்பு கொண்டவர். தமது தினசரி வாழ்வில், சுவாமி அவர்களை சந்தித்த பின்புதான் தமது பணிகளைத் துவங்கும் வழக்கத்தைக் கொண்டவர்.

 

         திண்டுக்கல் தயாநிதி சுவாமி அவர்கள் 1.3.2003 அன்று துவங்கிய தயவு ஆலயத்தின்  அனக வெளிப்பாடு திண்டுக்கல் சன்மார்க்க அன்பர் திரு மேடா நித்தியானந்தம் அவர்களின் குடும்பத்தினரின் “அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லமாக” 5 ஆண்டுகளுக்குப் பின் உதயமாகியுள்ளது.

 

           தற்பொழுதெல்லாம், வள்ளல் பெருமானின் அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லங்கள், திண்டுக்கல் நகர் முழுவதையும் அலங்கரிக்க ஆரம்பித்து விட்டன. எங்கு திரும்பினாலும் சுத்த சன்மார்க்க அன்பர்களும்,  வள்ளல் பெருமானின் சன்மார்க்க மணம் கமழும் தெய்வீக அருளுரைகள், தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களின் தயவு நெறி பரப்பும் கூட்டங்கள், இந் நகரில் மாதத்தில் பெரும்பாலான நாட்களில் நடைபெறுவது, இந் நகருக்கே ஒரு பெருமையாகும். அதன்மூலம் எல்லோர் உள்ளங்களிலும், சுத்த சன்மார்க்கப் பதியின் வருகை பதிவு செய்யப்பட்டு விட்டதையே இவ்வித நிகழ்ச்சிகள் உணர்த்துவதாக அமைந்துள்ளன.

 

            இவ் விழாவில் பன்னாட்டு சன்மார்க்க சங்கத்தின் சார்பில், வள்ளலாரின் அறிவியல் தியானம் (VALLALAR’S SCIENTIFIC MEDITATION) என்ற புத்தகத்தினை பேராசிரியர் டாக்டர் பி.கி சிவராமன் அவர்கள் வெளியிட்டார். கலந்து கொண்ட அனைத்து அன்பர்களுக்கும் இப் புத்தகம் வினியோகிக்கப் பட்டது. வள்ளல் பெருமானின் நெறியில் நிற்பதற்கு, இந் நூல் மிகவும் உதவிகரமாக உள்ளதாக கலந்து கொண்ட அன்பர்கள் தெரிவித்தனர். அத்துடன், தயாநிதி சரவணானந்த சுவாமிகள் அவர்கள் இயற்றிய சுத்த சன்மார்க்கப் பதி வருகை என்ற நூலும் அனைவருக்கும் வழங்கப்பட்டன  நன்றி கூறலுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

       

        விழாவின் இறுதியில் அனைவருக்கும் அன்ன தான நிகழ்ச்சி நடைபெற்றது.

 

         அன்பர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல்.














Book No.1


Vallalar's Scientific Meditation 


Book No.2


சுத்த சன்மார்க்கப் பதி வருகை. 



 

 

 

கலந்து கொண்ட சன்மார்க்க அன்பர்கள்

 

திரு N.V.G.B. ராஜாராம், திண்டுக்கல்.

திரு S.S. கிருஷ்ணமூர்த்தி, தலைவர், மலையடி வாரம் சன்மார்க்க சங்கம் மற்றும் நாகல் நகர் - அருட்பெருஞ்ஜோதி தயவு ஆலய நிறுவனர், திண்டுக்கல்.

திரு எம்.ராமலிங்கம் (Elec), திண்டுக்கல்.

திரு சமயபுரத்தான், பழனி.

திரு வன்னிக்காளை குடும்பத்தினர் (காந்தீய வழி பெண்கள் அனாதை ஆஸ்ரமம், விருப்பாட்சி அருகில்)

தயவு நூல் அறக்கட்டளை ராமலிங்கம், திண்டுக்கல்

அவரது தம்பி சுப்பிரமணி, திண்டுக்கல்.

திரு சுதர்சன், கொடைக்கானல்

திரு சாயி கணேஷ் குடும்பத்தினர், சென்னை.

திரு விஸ்வநாதன், சுவாமிகளின் அணுக்கத் தொண்டர், திண்டுக்கல்

திரு சுபம் சிவராம், திண்டுக்கல்

திரு மோகன்ராம், திண்டுக்கல்

திரு வே.அருணகிரி, திண்டுக்கல்.

திரு கார்த்திக், (Appd Guide – Directorate of Tourism, Govt.of Tamil Nadu)

திரு ஷண்முகவேல், திண்டுக்கல்

திரு தங்கமுத்து, திண்டுக்கல்

திரு தேவராஜ், திண்டுக்கல்

திரு விஸ்வநாதன், திண்டுக்கல்.

தேவதானப்பட்டி கிராம (சாது சிவராமனார்) வழித் தொண்டர்கள்

திரு ராஜேந்திரன் குடும்பத்தினர். திண்டுக்கல்.

திரு செளந்தரராஜன், வள்ளலார் எண்ணெய் வியாபாரம். திண்டுக்கல்.

திண்டுக்கல் மலையடிவார சன்மார்க்க சங்க அன்பர்கள்.

திண்டுக்கல் பன்னாட்டு சன்மார்க்க சங்கத்தின் அன்பர்கள்.

நாகல் நகர் சன்மார்க்க அன்பர்கள்

திரு வாஞ்சி நாதன், திண்டுக்கல்

பொன்னகரம் சன்மார்க்க அன்பர்கள்.

மற்றும் பலர்.

    

           
Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment

Login
Login to post your comments
Daeiou Team தயவுக் குழு.
☎: 91-97898 72120
2/244-1, Thandal Muthu Konar Street,
Narayanapuram (East),
Reserve Lines (Post)
MADURAI.14, Tamil Nadu, India-625 014
Home
Documents
Audios
Photo Albums
Events & Meetings

All the contents including articles, documents, audio and video on this DAEIOU - தயவு website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace