டிசம்பர் மாதம் வள்ளல் பெருமானின் நெறி பரப்பும் மையங்கள் திறப்பு விழா காணுதல்.
வரும் டிசம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி 2 இடங்களில் வள்ளல் பெருமானின் நெறி பரப்பும் மையங்கள் திறப்பு விழா காண உள்ளன. அவையாவன
3.12.2008 மற்றும் 4.12.2008 ஆகிய நாட்களில் வேலூர் மாவட்டம் சோளிங்கரில் வள்ளலார் ஆலயம் திறப்பு விழா
அதனை அடுத்து 6.12.2008, 7.12.2008, 8.12.2008 ஆகிய நாட்களில், திருவண்ணாமலையில் கிரி வலம் வரும் பாதையில் திரு கலை நம்பி, சன்மார்க்க அன்பரின் பெருமுயற்சியால் கொடிமரம் ஸ்தாபித்தல், தருமச்சாலை திறப்பு விழா, தவக் குடில் திறப்பு விழா, அருட்பா பீடம் திறப்பு விழா என பல விழாக்கள் ஒரே இடத்தில் நடைபெற உள்ளன.
விரிவான தகவல்கள் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வரப்பெற்ற பின்னர் வெளியிடப்படும்-
சன்மார்க்க அன்பர்கள் மேற்காணும் விழாக்களில் கலந்து கொள்ள தம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கிடைத்தவரை முதல் தகவல் வெளியிடப்பட்டுள்ளது
பி.விஜயன் (ஒருங்கிணைப்பாளர்) 4.11.2008 அன்று இரவு பேசினார். இசைக் கச்சேரி முக்கிய
சன்மார்க்க இசைப் பாடகர் மூலம் நடைபெற இருக்கிறது. அவருக்கு குறிப்பிட்ட
தேதிகளில் வேறு கச்சேரி இருப்பதால்,இந்த நிகழ்ச்சி சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
எனவே அவரிடமிருந்து மறு தகவல் வரப்பெற்ற பின்னர், விழா நடைபெறும் மறு தேதி
வெளியிடப்படும்.