இறைவனின் அறக்கருணையும் மறக்கருணையும்
Ramanujam
posted 44 months ago
24 May 2008 12:52:24 GMT 12:52:24 PM
1923 views
இறைவனின் அறக் கருணையும் மறக் கருணையும்
==================================================================================
வள்ளல் பெருமான் திருவருட்பாவில் திருவடிப் புகழ்ச்சி இது குறித்துச் சொல்கிறது.
மறக்கருணை யுந்தனி அறக்கருணை
யுந்தந்து வாழ்விக்கும் ஒண்மைப் பதம்.
(சுவாமி சரவணானந்தா அவர்கள் அருளிய உரை)
தனிப் பெருங் கருணையே தன் இயல்பாகக் கொண்டுள்ளவர் அருட் பெருஞ் ஜோதி ஆண்டவர். அந்தத் தனிக் கருணையைத்தான் அக
நின்று அனகமாக விளங்கச் செய்ய வேண்டி, இப் பிரபஞ்ச காரியத்தை மேற்கொண்டுள்ளார்.
அக் கருணையின் விளக்கம் அறியப்பட - இந்த மனிதப் பிறப்பு ஏற்பட்டு பண்பாடடைய வேண்டியிருந்ததாம்.
அச்செயல்தான் அகத்தும் புறத்தும் நிகழும் ஐந்தொழிலாயும், அதில் (1)ஆக்கல், (2) காத்தல், அறக்கருணையாகவும்,
(3) அழித்தல் மறக்கருணையாயும், (4) மறைத்தல் (5) அருளல் - கூட அறக் கருணையின்பாற் பட்டதாகவே உள்ளதாம். முழுப் பக்குவம்
அடையாத வரை ஐந்தொழிலின் இரு கருணைச் செயல்களும் சூழ்ந்து கொண்டேதான் இருக்கும்.
(Content Ref: Thiruvadi Pugazhchi Explanation)