DAEIOU - தயவு

●2/244-1, Thandal Muthu Konar Street, ●Narayanapuram (East), , ●Reserve Lines (Post)
●MADURAI.14,●Tamil Nadu, ●India-625 014

சின்னக் காவனம் செல்வோமா ? ... ... ...

Ramanujam
posted 41 months ago
21 Nov 2008 06:51:46 GMT 6:51:46 AM

1586 views


பொன்னேரி வட்டம்-சின்னக்காவனம் செல்வோமா..? . . .

 

தமிழ்நாடு மாநிலத்தில் வடக்கே உள்ளது திருவள்ளூர் மாவட்டம். இம் மாவட்டத்தில் அமைந்துள்ள வட்டம் பொன்னேரி ஆகும். இந்த தாலுகா தலைமை இடத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் சின்னக் காவனம் கிரரமத்தில் வள்ளல் பெருமானின் தாயார் திருமதி சின்னம்மையார் அவதரித்தார். அவருக்கு மகவாக அவதரிக்க உற்ற வள்ளல் பெருமான் அந்த கிராமத்தில் தமது 5வது மாதத்திலிருந்து 9வது மாதம் வரை வசித்ததாக தெரிகிறது. இயற்கை எழில் வாய்ந்த ஒரு சிறிய கிராமம் ஆகும் இது.

 

http://www.vallalarfiles.com/image/JHvOdLslm3njEKbLYNZ8Rg,$,3d,$,3d/sz-tn650/121120081424280000.jpg 

 

இங்கு சின்னம்மையார் அவதரித்த இடத்தில், ஒரு சன்மார்க்க சங்கக் கட்டிடம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் கட்டிடம் தவிர ஏனைய இடங்கள் – அதாவது இடம் காலியாக இருந்தும் வேலி ஏதுமின்றியும், பாதுகாப்பின்றியும் இருந்தன. ஒரு சன்மார்க்க அன்பர் அங்கு இருந்து வார வழிபாடு முதலானவற்றை நடத்தி வந்தார் என்ற நிலை அப்போது இருந்தது. அவரது பெயர் திரு ரெகுநாதன் ஆகும்.

 

இந்த சங்கம் தற்போது அருட்பிரகாச வள்ளலார் அருளாட்சித் திருச் சங்கம் என்ற புதிய பெயருடன் பொலிவுற்று விளங்குகின்றது. அதன் அலுவல் சார் குழு உறுப்பினர்களாக கீழ்க்கண்ட நபர்கள் உள்ளனர்.

 

அலுவல் குழுவினர்

 

திரு ஏ.ரெகுநாதன், சின்னக்காவனம்

திரு டி.முனிவேலு, சின்னக்காவனம்.

திரு எஸ்.இளங்கோ, சிங்கப்பூர்

திரு சி.எம்.சுயம்பிரகாசம், சின்னக்காவனம்.

திரு பி.ஜெகநாதன். பாடியநல்லூர்.

திரு எஸ்.சிவக்குமார், மீஞ்சூர்.

திரு என்.பழனி, சின்னக்காவனம்.

 

செயற்குழு உறுப்பினர்கள்

 

திரு எஸ்.சரளா தேவி, சின்னக்காவனம்.

திருமதி இ.மைதிலி, சின்னக்காவனம்.

 

சட்ட ஆலோசகர்

 

திரு என். கருணாநிதி, சென்னை.45.

 

இந்த சங்கத்தில், நித்திய தீபம் இங்கு ஏற்றி வைக்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்றது. வார வழிபாடு சத்விசாரம் முதலியவை மேற்கொள்ளப்பட்டு, சுத்த சன்மார்க்க நெறி இந்த கிராமத்தில் பரவும் எல்லா நடவடிக்கைகளும் தற்;போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

திருமதி சின்னம்மையார் பிறந்த இடத்தில் உள்ள சங்கக் கட்டிடம் தவிர ஏனைய இடங்களை, மேற்காணும் அலுவல் சார் குழு உறுப்பினர்கள் குறிப்பாக, இளைஞர்கள் படை திரண்டு, அச் சங்கக் கட்டிடத்தைச் சுற்றிலும் கம்பி வேலி போட்டு அதன் சொத்துக்களைப் பாதுகாத்துள்ளனர். அவர்களுக்குப் பக்க பலமாக மகளிர் அணியினர் திரண்டுள்ளனர்.

 

முதலில் உள்ளூர் மக்களிடையே இருந்த எதிர்ப்பு, இந்த அலுவல்சார் குழுவினர் மற்றும் மகளிர் அணியின், விரைவான நடவடிக்கையின் மூலம் ஈர்க்கப்பட்டு, அன்பாக மாறி, தற்போது அவர்களுக்கு உதவி ஒத்தாசைகளைப் புரிந்து வருகின்றனர்.

 

அதனால் ஏற்பட்ட முன்னேற்றம்.

 

ஒருபடி மேலே போய் கடந்த 15.11.2008 அன்று மாலை சைவ சித்தாந்தக் கருத்துக் களைக் குறித்த பாடம் மாலை 5.00 மணி அளவில் துவங்கியது.

 

http://www.vallalarfiles.com/image/4VxxZKXnhaSq4UTaz3ItIg,$,3d,$,3d/sz-tn650/121120081424380000.jpg

 

இதனை நடத்துபவர், தத்துவ முரசு, சைவக்கொண்டல் என்ற பட்டம் பெற்ற சூரவாரிக் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த திரு வீர துரைக்கண்ணன் (வயது 90க்கு மேற்பட்டவர்).

 

உள்ளூர் அன்பர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவதற்கு முதற்கட்டமாக, இந்த ஏற்பாடுகளை அந்த சங்க நிர்வாகிகள் செய்து வருவது ஒரு மகிழ்ச்சிக்குரிய நிகழ்வு ஆகும்

 

இனிமேல் வாரா வாரம் ஞாயிற்றுக் கிழமை தோறும் இந்த சின்னக்காவனம் அருட்பிரகாச வள்ளலார் அருளாட்சித் திருச் சங்கத்தில் இதன் தொடர்ச்சியான பாடம் நடத்தப்படும்.

 

அன்பர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்து, பலன் பெற வேண்டுகின்றனர் அந்தச் சங்கத்தினர். இவ் விபரங்களை பாடிய நல்லூர் சன்மார்க்க சங்க பொருளாளர் திரு ஜெகனாதன் தெரிவித்தார்.

 

இந்த ஊரில் உள்ள நூற்றெட்டு ஈஸ்வரர் (108 ஈஸ்வரர்) ஆலயம் மிகவும் தொன்மை வாய்ந்த ஆலயமாகும். முற்காலத்தில் சதுர்வேதபுரம் எனப் பெயர் இருந்துள்ளது. இங்கு சிவகாம வல்லி சகித சதுர்வேத புரீஸ்வரர் அருள் பாலித்து வருகிறார்.

 

 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஏரெழிஞ்சல் மரம் இங்கு உள்ளது. இது மிகவும் சிறப்பான மரம் ஆகும். கீழே விழும் விதைகள் மீண்டும், மரத்திலேயே ஒட்டிக் கொள்ளும் என்ற வகையில், இம் மரம் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். ஆலய வளாகத்தினுள் இந்த மரம் உள்ளது.

 

http://www.vallalarfiles.com/image/EBNCTLm7flCaS70ja,$,2f,$,2bnAg,$,3d,$,3d/sz-tn650/121120081424720000.jpg

 

வள்ளல் பெருமான், இந்த ஆலயத்திற்கு வந்து சென்ற குறிப்பெல்லாம், இந்த ஆலயத்தின் உட்புறச் சுவர்களில் குறிக்கப்பட்டு உள்ளது. ஏரெழிஞ்சல் மரத்தின் சிறப்பும் அங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் வள்ளற் பெருமானாரை ஈன்ற தாயார் திருமதி சின்னம்மை பிறந்த ஊரான சின்னக் காவனத்தை தரிசனம் செய்ய வேண்டும். மனித குலத்திற்கு, இறவாப் பெரு நெறியின் மாண்பினை கற்றுத் தருவதற்காக, வள்ளற் பெருமானை இந்த உலகிற்கு ஈந்த அந்த அன்னைக்கு சன்மார்க்க அன்பர்கள் காட்டும் அன்பு இதுவே ஆகும்.

 

அங்கு செல்லும் வழியில் தாலுகா தலைமை இடமான பொன்னேரியில் டவுன் பஞ்சாயத்து ஆபீஸ் அருகில் சமரச சன்மார்க்க சத்திய சங்கம் ஒன்றும் உள்ளது.  மெயின் ரோட்டின் அருகில் இச் சங்கம் உள்ளது. சின்னக் காவனம் செல்பவர்கள், பொன்னேரி சன்மார்க்க சங்கத்தினையும் கண்டு வர இது  ஒரு வாய்ப்பு ஆகும்.

 

சென்னையில் இருந்து பொன்னேரி செல்லும் வழியில் பாடிய நல்லூரிலும் (16 கி.மீ)) ஒரு சன்மார்க்க சங்கம் உள்ளது. அதனையும் கண்டு களித்து வரலாம். ஆக, ஒரே நேர்க்கோட்டில் 3 சன்மார்க்க சங்கங்கள் உள்ளன.

 

இன்னும் என்ன .. .. புறப்பட வேண்டியதுதானே .. சின்னக் காவனத்துக்கு .. .. .. ..

 

There was 3 days delay in posting this article due to the server problem encountered by BSNL - (the service provider.)

 

But before that, the Vallalar Space .com Team provided space to this Association.  How fast the Team is .. ..

 

Thanks goes to the VallalarSpace Team.

 

 



Tags: