DAEIOU - தயவு

●2/244-1, Thandal Muthu Konar Street, ●Narayanapuram (East), , ●Reserve Lines (Post)
●MADURAI.14,●Tamil Nadu, ●India-625 014

தவத்திரு ஊரன் அடிகளார் வாழ்க்கை வரலாறு

Ramanujam
posted 44 months ago
25 May 2008 10:09:33 GMT 10:09:33 AM

2041 views

ஸ்ரீமுக வருடம் வைகாசி 9 பரணியில் (22.5.1933) அன்று திருச்சிராப்பள்ளி சமயபுரம் நரசிங்க மங்கலத்தில் தவத்திரு ஊரன் அடிகள் தோன்றினார். 1955 முதல் பன்னிரண்டு ஆண்டுக் காலம் திருவரங்கம், வேலூர், திருச்சிராப்பள்ளி நகராட்சிகளில் நகர் அமைப்பு ஆய்வாளராகப் பணியற்றினார். தமது இருபத் திரண்டாம் வயதில் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் நிறுவி, தமிழ்ச் சமயங்களைப் பற்றியும், சன்மார்க்க நெறி பற்றியும் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். துறவு மேற்கொண்டார். 23.5.1968 அன்று தமது முப்பத்தைந்தாம் ஆண்டுத் தொடங்கிய அன்று, பின் வடலூரே இவரது வாழ்விடமாக மாறியது. 1970ஆவது ஆண்டு முதலாக வடலூரில் சன்மார்க்க நிலையங்களில் அறங்காவலராக தமது பணியைத் துவக்கி,  25 ஆண்டுகளுக்கும் மேலாக அருந் தொண்டாற்றியவர். அன்னதானத் திட்டத்திற்கு இவர் வகுத்த திட்டம், பெரும் வரவேற்பைப் பெற்று, திருவருட் பிரகாச வள்ளலார் தெய்வ நிலையங்களுக்கு, (Fixed Deposit) மூலம், நல்ல நிதியினைப் பெற்றுத் தந்தது. அவர், சிறிதும், பெரிதுமாக நூல்கள் பலவற்றை எழுதியிருக்கிறார். அவற்றில் சில வருமாறு.

 

சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்

 

வ.எண்.நூலின் பெயர்முதற் பதிப்பு

1.வடலூர் வரலாறு1967

2. இராமலிங்கரும் தமிழும்1967

3.பாடல்பெற்ற திருத்தலத்து இறைவன் இறைவி போற்றித் திருப்பெயர்கள்1969

4.புள்ளிருக்கு  வேளூரில் வள்ளலார்1969

5. இராமலிங்க அடிகளின் சிதம்பர அனுபவங்கள்1969

6.இராமலிங்க அடிகள் வரலாறு (தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்)1971

7.வடலூர் திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையங்களின் வரலாறு1972

 

8.இராமலிங்க அடிகளின் வரலாறு, கொள்கைகள், பாடல்கள்1973

9.இராமலிங்க அடிகள் – ஒரு கையேடு (இராமலிங்க அடிகள் சித்தி நூற்றாண்டு விழா மலர்)1974

10.வள்ளலார் மறைந்தது எப்படி ? (சாகாக்கலை ஆராய்ச்சி)1976

11.வள்ளலார் கண்ட முருகன்1978

12.  வள்ளலார் வாக்கில் ஓங்காரமும் பஞ்சாக்கரமும்1979

13. வள்ளுவரும் வள்ளலாரும்1980

14. வடலூர் ஓர் அறிமுகம்1982


 

பதிப்பித்தவை

1. இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் குறிப்புகள் – ச.மு. கந்தசாமி பிள்ளை1970

2.இரமலிங்க சுவாமிகள் சரிதம் (செய்யுள்) – பண்டிதை அசலாம்பிகை அம்மையார்1970

3. திரு அருட்பா ஆறு திருமுறைகளும் சேர்ந்தது1972

4.திரு அருட்பா (உரைநடைப்பகுதி)1978

5. திரு அருட்பாத் திரட்டு1982

6.வள்ளுவரும் வள்லலாரும் 2006

7.திருமூலரும் வள்ளலாரும்2006

8. சம்பந்தரும் வள்ளலாரும்2006

9. அப்பரும் வல்லாரும்2006

10.சுந்தரரும் வள்ளலாரும்2006

11.தாயுமானவரும் வள்ளலாரும்2006

12.வள்லலாரும் காந்தி அடிகளும்2006


         திருஅருட்பா ஆறு திருமுறைகளையும் நன்கு ஆராய்ந்து கால முறைப்படி பகுத்து செம்மைப்படுத்திய பெருமை இவருக்கே உரியது.  திரு அருட்பா உரைநடைப்பகுதி, திரு அருட்ப திரட்டு ஆகியவற்றைச் செம்பதிப்புகளாகப் பதிப்பித்து வெளியிட்டார். தமிழகத்தின் பல்கலைக் கழகங்களாகிய அண்ணாமலை, சென்னை, அழகப்பா முதலியவைகளின் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் பல ஆற்றியுள்ளார்.

            சைவ சித்தாந்த பெருமன்றத்தில் இவர் வள்ளலார் தொடர்பாக ஆற்றிய உரைத் தொடர் நூல் வடிவம் கண்டுள்ளது. இமயம் முதல் குமரி வரை பலமுறை யாத்திரை செய்துள்ள ஊரன் அடிகள், மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை, தென்னாப்பிரிக்கா, மொரிஷியஸ், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, குவைத், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அன்பர்கள் அழைப்பை ஏற்றுச் சென்று வந்தவர். தமிழகத் துறவியர் பேரவையின் துணைத் தலைவராக விளங்குகின்றார். தமிழகத்தின் அரசியல், வர்த்தகத் தொழில் பிரமுகர்களோரும், ஆன்மீக நிலையங்களின் தலைவர்களோடும் அடிகளார் மிக்க தொடர்புடையவர்.

            அடிகளார், சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், பத்திரிகையாசிரியர், அற நிறுவனக் காவலர் முதலிய பன்முகச் சிறப்புப் படைத்தவர். வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே என்பதை வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.


Please see also some discussion about Thiru Uran Adigal : {DownloadRefr:192}


Tags: