DAEIOU - தயவு

●2/244-1, Thandal Muthu Konar Street, ●Narayanapuram (East), , ●Reserve Lines (Post)
●MADURAI.14,●Tamil Nadu, ●India-625 014

மதுரை சன் டி.வி. ஆபீஸ் அருகே வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க - கருணை - சபை - சாலை துவக்க விழா பூமி பூஜை

Ramanujam
posted 40 months ago
14 Sep 2008 00:41:57 GMT 12:41:57 AM

1623 views


திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானின் சமரச சுத்த சன்மார்க்க - கருணை - சபை - சாலை - துவக்க விழாவிற்கான பூமி பூஜை 14.9.2008ல் நடைபெறல்.

 

THIRU ARUTPRAKASA VALLALAR SAMARASA SUDDHA SANMAARKA “GRACE HALL “

BOOMI POOJAI FUNCTION ON 14.9.2008

 

இடம்- மதுரை பூம்புகார் நகர் மாட்டுத்தாவணி பஸ்

 

 ஸ்டாண்டு அருகே உள்ள சன் டி.வி.ஆபீஸ் பின்புறம்.

 

(உயர்நீதி மன்ற பெஞ்ச் சமீபம்.)

 

நாள் 14.9.2008

 

நேரம் காலை 7.00 முதல் 8.00 மணி.

 

 

 

மதுரையில் “ஞானதீபம்” சுத்த சன்மார்க்க மாத இதழ் ஆசிரியர் திரு முரளீதரன் “அருள் ட்ரஸ்ட்” நடத்தி வருகிறார். மேற்படி ட்ரஸ்டில் பல சன்மார்க்க அங்கத்தினர்கள் உள்ளனர்.

 

அந்த ட்ரஸ்ட் உறுப்பினர்களில் ஒருவராகிய திருமதி இராமலக்ஷ்மி என்பவர், திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியில் தீவிர நாட்டம் கொண்டவர்.

 

 

http://www.vallalarfiles.com/image/cwhll3nYIHH,$,2bgT1pv5LMrA,$,3d,$,3d/sz-tn650/140920089417140000.jpg

 

 

அவர், வடலூரில் பெருமானார் அமைத்தது போல கருணை சபை சாலை கட்டுவதற்கு நாட்டம் கொண்டார்.

 

அதற்கென இடம் தேர்வு செய்து, மதுரை பூம்புகார் நகர் அருகே (மாட்டுத் தாவணி பஸ் ஸ்டாண்டு சமீபம்), சன் டி.வி ஆபீஸிற்கு பின்புறத்தில் ஒரு நிலத்தை கிரயத்திற்கு வாங்கினார்.

 

http://www.vallalarfiles.com/image/sjcwAKnuc5HyEgijpyzaLA,$,3d,$,3d/sz-tn650/140920089517160000.jpg

 

 

அந்த இடத்தில், 14.9.2008 (ஞாயிற்றுக் கிழமை) சர்வதாரி ஆண்டு ஆவனித் திங்கள் 29ந் தேதி,  பெளர்ணமி நாள் அன்று காலை 7.00 8.00 மணிக்குள் மேற்படி கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவிற்கு ஏற்பாடு செய்தார்.

 

        குறிப்பிட்ட நாளில், காலை 7.30 மணி அளவில், சன்மார்க்க அன்பர்களும், அண்டை அயலில் உள்ள பொதுமக்களும் அந்த இடத்தில் திரண்டனர்.

 

மதுரை திரு முரளீதரன், மற்றும் ராஜபாளையம் திரு K.S. சகா தேவ ராஜா ஆகியோர், அருட்பெருஞ்ஜோதி தீபத்தை ஏற்றி வைத்தனர்.

 

http://www.vallalarfiles.com/image/zqIbMxs9LQiJOzwvckA4ew,$,3d,$,3d/sz-tn650/140920089517180000.jpg

 

      அருள் ட்ரஸ்ட் உறுப்பினர்கள் மற்றும் மதுரையில் உள்ள சன்மார்க்க அன்பர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர், திருப்பள்ளி எழுச்சி, அகவல் பாராயணம், அட்டகம், திரு அருட்பா பாடல்கள், முதலானவற்றை மனமுருகப் பாடிப் பரவினர்.  

 

        “அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” என்ற மகாமந்திரத்தை, அங்கு குழுமியிருந்த அன்பர்கள் விண்ணதிர அந்த இடத்தில் ஒலித்தனர்.

       

     பின்னர், திரு அருட்பா சிற்சக்தி துதியில் உள்ள “கொடி வணக்கப் பாடலினை” அனைத்து அன்பர்களும் பாடப் பாட, சுத்த சன்மார்க்கக் கொடியினை, அருள் ட்ரஸ்ட் நிறுவனர் திரு முரளீதரன் ஏற்றி வைத்தார்.

 

        மேற்படி கட்டுமானத்திற்கு என நியமனம் செய்த மதுரை “பொன்மணி கன்ஸ்ட்ரஷனின்” எஞ்சினியர் திரு சங்கர் கணேஷ் அவர்களிடம், திருமதி இராமலக்ஷ்மியின் மகள் செல்வி காமினி கல்லினை எடுத்துக் கொடுக்க, குறிப்பிடப்பட்ட இடத்தில், அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் ஒலிக்க, அடிக்கல் நாட்டும் விழா இனிதே நிறைவேறியது.

 

        இந்த இடம், சென்னை உயர்நீதி மன்றக் கிளை அமைந்துள்ள நரசிங்கம்பட்டி (Narasingampatti Revenue village) கிராமத்தில் அமைந்துள்ளது.

 

http://www.vallalarfiles.com/image/A8uTzwso4gzFHFb,$,2bJC84,$,2bQ,$,3d,$,3d/sz-tn650/140920089617200000.jpg

 

 

        இவ் வைபவத்தில் கீழ்க்காணும் சன்மார்க்க அன்பர்களும், மற்றும் பல பொது மக்களும், அருகே உள்ள குடியிருப்பில் வசிப்போரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

1.        திரு முரளீதரன், நிறுவனர், அருள் ட்ரஸ்ட், மற்றும்    

 ஆசிரியர், ஞான தீபம் மாதாந்திர சன்மார்க்க இதழ். மதுரை.

2.     திரு சொக்கலிங்கம், மதுரை

3.     திரு “தயவு” விஜயராமன். திருப்பரங்குன்றம்.

4.     திரு K.S. சகாதேவ ராஜா, ராஜபாளையம்

5.     திரு ராம் குமார், D.R.O. காலனி, மதுரை.

6.     திரு S. குமார ராஜா, மதுரை.

7.      திரு கோவர்தன், அருள் ட்ரஸ்ட் உறுப்பினர், மதுரை

8.     திரு சங்கர் கணேஷ், எஞ்சினியர், மதுரை.

9.     தயவுக் குழு அன்பர், நாராயணபுரம், மதுரை.

10. செல்வி காமினி, மதுரை.

11.     செல்வன் ப்ரவீன், மதுரை.

 

இவ்விழாவிற்கு. மதுரை அருள் ட்ரஸ்ட் உறுப்பினரான, மதுரை நகரைச் சேர்ந்த திரு இளங்கோ வருகை தந்தார்.

 

விழா நிறைவுற்றபின், கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னமளிப்பு நடைபெற்றது.

 

வேலூர் மாவட்டம் சோளிங்கரில் சமீபத்தில் சத்திய ஞான சபை மற்றும் தெய்வ நிலையம் முதலானவை கட்டுவதற்கு மேற்படி ஊரைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர் திரு விஜயன் கடந்த 4.9.2008 வியாழன் அன்று பூமி பூஜை நிகழ்த்தினார்.

 

 அதனை அடுத்து, மதுரை நகரில் மாட்டுத் தாவணி பஸ் ஸ்டான்ட்  அருகில், இந்த கருணை சபை சாலை கட்டுவதற்கு பூமி பூஜை 14.9.2008 அன்று, துவங்குவதைக் கண்ட சன்மார்க்க அன்பர்கள், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் அருள் திறத்தினை வியந்தனர்.

 

மேலும், இது ஞான சித்தர்களின் காலமானதால், இதே போன்று ஊருக்கு ஊர், சன்மார்க்க சங்கங்களும், சாலைகளும் கட்டி, சுத்த சன்மார்க்க நெறி பரவ வேண்டும் என அவர்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டியவாறே சென்றனர்.

 

 

      
Tags: