DAEIOU - தயவு

●2/244-1, Thandal Muthu Konar Street, ●Narayanapuram (East), , ●Reserve Lines (Post)
●MADURAI.14,●Tamil Nadu, ●India-625 014

இன்று இவரைப்பற்றி .. .. வேலூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையில் சங்கம் நடத்தும் அண்ணாமலை.

Ramanujam
posted 40 months ago
05 Sep 2008 11:07:00 GMT 11:07:00 AM

1774 views


இன்று .. இவரைப் பற்றி .. வேலூர் மாவட்டம் பொதட்டூர்கோட்டையில் ஒரு சன்மார்க்க சங்கம்

 

      4.9.2008 வியாழக்கிழமை அன்று, வேலூர் மாவட்டம் ஷோளிங்கர் கிராமத்தில், ஷ்ரீடி பாபா நகரில் உள்ள மலையடிவாரத்தில், திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் மற்றும் தருமச்சாலை மேற்படி ஊரைச் சேர்ந்த பி.விஜயன் என்பவரின் சீரிய முயற்சியாலும், உள்ளூர் மற்றும் அண்டையிலுள்ள  கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், சன்மார்க்கிகள் ஆகியோரின் பேராதரவுடன் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

 

     அதிகாலையில் நடைபெற்ற அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணத்தில் பல அன்பர்கள் கலந்து கொண்டனர்.

 

     அவர்களில் ஒருவர், மதுரையிலிருந்து அவ் வைபவத்தில் கலந்து கொள்ளச் சென்ற தயவு அன்பரிடம், வள்ளலார் ஸ்பேஸில் பதிவு செய்வது  குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.

 

            அவரது பெயரை விசாரித்த போது, தன் பெயர் S.C.அண்ணாமலை (51 வயது) என்றார். தகப்பனார் பெயர் S.K. சொக்கலிங்கம் முதலியார். தாம் பெருமுயற்சி மேற்கொண்டு, பொதட்டூர்பேட்டை என்ற ஊரில் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க சங்கத்தினை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

 

         ஒருமுறை, அமெரிக்காவில் வசித்து வரும் திரு செந்தில் மருதையப்பன் என்பவருடன் தாம், தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, மதுரையில் உள்ள தயவு அன்பரை தொடர்பு கொள்ளும்படியும், எந்த ஊரிலும் இயங்கும் சன்மார்க்க சங்கம் குறித்த விவரங்களை எப்படி இணைய தளம்மூலம் வெளி உலகுக்குத் தெரிவிப்பது என்று கேட்டறிந்தார்.

 

         இன்னும் மேற்படி கிராமத்தில் இயங்கி வரும் சன்மார்க்க சங்கத்திற்கு கமிட்டி மெம்பர்கள் நியமிக்கவில்லை என்றும், கமிட்டி மெம்பர்கள் தேர்வு செய்வதற்காக தாம் மெனக்கெட்டுக் கொண்டிருப்பதாகவும், தமது ஊரில் இயங்கிவரும் சங்கம், தக்க காலத்தில், இணைய தளத்தில் இடம்பெறும் அந்தஸ்து பெறும் எனவும் அதற்கிடையே, அமெரிக்காவில் வசிக்கும் திரு செந்தில் மருதையப்பன் அவர்கள் கூறியது போல், உங்கள் மூலம் பல விஷயங்களை நான் தெரிந்துகொண்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.

 

 
Tags: