25 மொழிகளில் சுத்த சன்மார்க்கம்
Ramanujam
posted 43 months ago
22 Jun 2008 02:31:35 GMT 2:31:35 AM
2318 views
24 மொழிகளில், வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம்.
வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகள் உலகளாவிய அளவிலே வெகு வேகமாகப் பரவி வருகின்றன என்பதை சன்மார்க்க உலகம் அறியும்.
www.vallalar.org. மற்றும் www.vallalarspace.com மூலம், பெருமானின் கொள்கைகள், பரப்பப்பட்டு வருகின்றன.
தற்போது, கிட்டத்தட்ட 24 வேற்று மொழிகளில், இந்த இணைய தளத்தை தெரிந்து கொள்வதற்கான வசதியும்,செய்து
தரப்பட்டுள்ளது.
வெவ்வேறு நாடுகளும், அன்கு வசிக்கும் மக்களும், வள்ளல் பெருமானின் நெறியினை தெள்ளத் தெளிவுற அறிந்து
கொள்வதற்கு இந்த வசதியை www.vallalarspace.com இணைய தளம் உருவாக்கியுள்ளது.
அனைத்து நாடுகளும் ஏற்க உள்ள இந்த மாண்புமிகு நெறி, போரில்லாத ஒரு புதுமையான உலகு தோன்றுவதற்கு, வழி
வகுக்கும் என்பது திண்ணம்.
மனித குலத்தை மாண்படையச் செய்வதற்கும், வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ளது.
www.vallalarspace Team இதற்காக மேற்கொண்ட கடுமமயான உழைப்புக்கு நன்றி.
தயவுக் குழு.