அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
உருவ வழிபாடும் ஜோதி வழிபாடும்- ஓர் ஆய்வு
சுத்த சன்மார்க்கத்தில் ஈடுபடுபவர்களுக்கு உருவ வழிபாடு அவசியமா? அல்லது வேண்டாமா? என்றால் அது சுத்த சன்மார்க்க நன்னெறியை முழுமையாக உணர்ந்து அதில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்ட அன்பர்களுக்கு அதாவது இறைவனை அனைத்து உயிர்களிலும் காணும் பக்குவத்தைப் பெற்றவர்களுக்கு “உருவ வழிபாடு” என்பது தேவையில்லை. இவர்கள் பிரம்ம சுகத்தைப் பெற்றவர்கள், பிரம்ம சுகத்தை அனுபவிக்காதவர்கள் சில காலம் உருவ வழிபாடு செய்வது அவசியமாகிறது.
“உருவ வழிபாடு செய்வதன் மூலம் சாதாரண நிலையில் இருக்கும் மானிடர்களுக்கு அறிவு விருத்தியாகும்.” என்பது வள்ளல் பெருமானின் திருவாக்கு. உருவ வழிபாடு மூலம் அறிவு எவ்வாறு விருத்தியாகும் என்பதைப் பார்ப்போம்.
உலகியியல் வாழ்வில் வாழும் சாதாரண மனிதர்கள் கோள்களின் மின்காந்த அலைகள் மூலமும் சஞ்சிதம், பிரார்த்தம் மற்றும் ஆகாமியம் என்கிற கர்ம வினைகளாலும் அவதியுறுவர். அவதியுறும் மக்களின் துயரங்களை நீக்குவதற்கும், கோள்களால் ஏற்படும் பாதிப்புகளை நீக்குவதற்காகவும் நமது பழங்கால சித்தர்கள் ஆலயங்களையும், விக்கிரகங்களையும் உருவாக்கினார்கள்.
உதாரணம்: பழனி ஆண்டவரின் நவபாஷாணச் சிலை, இந்தச் சிலை ஒன்பது மூலிகைக் கலவையால் உருவாக்கப்பட்டது.
ஆனால் இன்றைய அறிவியியல் ஆராய்ச்சியாளர்கள் கோள்களின் மின் காந்த அலைகளுக்கும் மனிதனின் எண்ண அலைகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் நம் நாட்டில் வாழ்ந்த சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும் கோள்களுக்கும் மனிதர்களுக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு என்றே கருதுகின்றனர்.
போகரின் சீடர் புலிப்பாணி என்கிற சித்தர் கோள்களுக்கும் மனித வாழ்வுக்கும் சம்பந்தமுண்டு என்கிற வகையில் புலிப்பாணி ஜோதிடம் என்கிற நூலை இயற்றியிருக்கிறார். வான சாஸ்திரத்திலும், ஜோதிடத்திலும் புலமைப் பெற்ற சித்தர்கள் தங்கள் துல்லியமானக் கணக்குகள் மூலம் கோள்களின் மின் காந்த அலைகளின் ஒட்டத்தைக் கண்டறிந்து அதற்கேற்ற வகையில் பிரத்யேக ஸ்தலங்களை உருவாக்கியிருக்கின்றனர். இதன் மூலம் மனிதனின் எண்ண அலைகள் சத்தியத்தின் பக்கம் திரும்பும் என்றும் அவர்கள் கருதினர்.
வள்ளல் பெருமானும் இத்தகைய விக்கிரகங்களின் வழிப்பாட்டை முற்றிலுமாக மறுக்கவில்லை, (உருவங்கள் வாயிலாக மதச் சண்டைகள், மற்றும் சமயச் சண்டைகள் வரக்கூடாது என்பதற்காகவே அவர் ஜோதி வழிப்பாட்டை அறிவுறுத்தினார்). உருவமாக வணங்குவோர்களுக்கு உருவமாகவும், அருவமாக வணங்குவோர்களுக்கு அருவமாகவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் புரிகிறார்.
வள்ளல் பெருமானார் இதனை:
உருவதின் உருவும் உருவினுள் உருவும் அருளுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
அருவினுள் அருவும் அருவதின் அருவும் அருளியல் அமைத்த அருட்பெருஞ்ஜோதி
உருவதில் அருவும் அருவதில் உருவும் அருளுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி - அகவல் என்று கூறுகிறார்.
எனவே உருவ வழிப்பாட்டை முற்றிலுமாக மறுப்பதை விட ஆன்மீகத்தின் முதல் படியே உருவ வழிப்பாடு என்று கூறலாம். புறத்தில் தொடங்கி, அதனால் அறிவு விருத்தியுற்று பிறகு அகத்தில் இறையைக் காண்பதே வள்ளல் பெருமானார் உரைத்த சுத்த சன்மார்க்க அகவழிபாடு ஆகும்.
இதனை வள்ளல் பெருமானாரின் விரிவுரையின் வாயிலாகக் காண்போம். “விக்கிரகம் என்பது விஷேட இடம் என்று பொருள்படும் என்றும், ஆன்மா இருப்பதற்குக் கிரகம், மனிதர் முதலிய ஜீவ தேகங்கள் என்றும், பிரும்மப் பிரகாசம் இருந்து வெளிப்படுவதற்கு விக்கிரகம் தேவ தேகங்கள் என்றும், அந்தத் தேவ தேகங்களாகிய விக்கிரங்களில் விதிப்படி உபாசிக்கின் பிரம்மப் பிரகாசம் எளிதில் வெளிப்பட்டு அனுக்கிரகிக்கும் என்றும் அவ்வாறு விசேட இடமென்று சொல்லப்படுகின்ற விக்கிரகங்களில் பிரம்மப்பிரகாசம் வெளிப்பட்டு அனுக்கிரகித்தற்கு அடையாளம் சில காலத்திற்கு முன் விக்கிரக ஆராதனை செய்த பக்தர்கள், குஷ்டம், குன்மம் முதலான தீராத வியாதிகளைத் தீர்த்தும், இறந்தவர்களை எழுப்பியும், அசாத்தியமான அநேக மகத்துவங்களை நடத்தியும் இருந்ததே போதுமானது என்றும், இப்போதும் விக்கிரக ஆராதனை செய்கின்ற பக்தர்கள் சில மகத்துவங்களைச் செய்து வருகின்றார்கள் என்றும், நாமெல்லாம் நமது பக்குவத்திற்குத் தகுந்தபடி விக்கிரக ஆராதனை செய்து, அதனால் அருளைப் பெற்று, அதனால் அறிவு விளங்கி, அதனால் பிரம்ம சுகத்தை அனுபவிக்கலாம் என்றும் சுவாமிகள் சொல்லிக்கொண்டே எழுந்தனர்”. ( வள்ளல் பெருமானார் உருவத்தையும் அருவத்தையும் பற்றி உரைத்த உரை) எனவே விக்கிரக வழிபாடு அறிவை விருத்திச் செய்து சத்தியத்தின் சாயலை உணரச் செய்யும் என்பதை உணருவோம். விக்கிரக வழிபாட்டில் நம்பிக்கைக்கொண்டு சத்தியத்தின் வழியில் நடைப்பயிலும் பொழுது சேரும் இறுதிநிலையான ஜோதி வழிபாடும் (அகத்தில் காணும் ஜோதி) வந்துசேரும். இதனை: அறிவுக் கறிவினில் அது அது அதுவாய் எறிவற்றோங்கிய என் தனி இன்பே.... அகவல் -1246 என்ற வரிகள் மூலம் உணரலாம். இவ்வாறு அறிவுநிலைகள் மேலோங்கும் பொழுது சிற்சபை நடனமும் உணர்த்தப்படும்.
சிற்சபை நடத்தைத் தெரிந்து துதித்திடுமின் சித்திஎலாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே. -ஞான சரியை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
***************
A good article and a matured one even
Its nice to see a good shift in thinking and understanding and I wish this spreads to all sanmarga followers
Another reason for bringing : formless to form is its impossible for all ordinary people in jeeva states to comprehend God as Vast Emptiness Space Vetta Veli and hence brought to the stages of idol worship and then to ultimate stages of worship h depending upon the sadhakas
Goes one famous saying as thus : All physical objects and things have come out of nothing , surrounded by nothing and will eventually return to nothing emptiness vast space
We all have made our onward journey and striving ways for our return journey nothing space emptiness
Osho , in one of his books , writes , after teaching Vipassana to a group of students in US , and , on feed back of the program after some time they had commented they were losing mental balance because they had suddenly met VOID in their practice which they could not accept
Totally a good article and good paradigm shift
I dont know how many will appreciate and how many will be fuming ???
BG Venkatesh
Coimbatore