அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
உள்ளொளி-உயிரொளி- ஞானஒளி- ஓர் ஆய்வு-II
இறையின் திருவடி திருசிற்றம்பலத்தில் இருப்பதாக நினைந்து, நினைந்து, உணர்ந்து, உணர்ந்து சதா சர்வ காலமும் அருளியியல் சிந்தனையாக அன்பு, இரக்கம், கருணை, முதலான நற்குணங்களை அணிகலன்களாகவும், வாய்மை, இன்சொல் பேசுதல் முதலானக் குணங்களை உயர்ந்த ஆபரணங்களாகவும் கொண்டு, மனிதனைக் கண நேரத்தில் அறிவிழக்கச் செய்யும் சினத்தை அறவே ஒழித்தால் அங்கே ஞானஒளி ஒளிரத் தொடங்கும். மூன்றாவது கண் என்கிற ஞானக்கண் திறக்கும். இதனை வள்ளல் பெருமானார்:
இருவினைஒப் பாகிமல பரிபாகம் பொருந்தல்
எத்தருணம் அத்தருணத் தியல்ஞான ஒளியாம்
உருவினையுற் றுள்ளகத்தும் பிரணவமே வடிவாய்
உற்றுவெளிப் புறத்தும்எழுந் துணர்த்திஉரைத் தருளும்!..
என்றும்,
சார் உலக வாதனையைத் தவிர்த்தவர் உள்ளகத்தே சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தம சற்குருவை நேர் உறவை எவராலும் கண்டுகொளற்கு அரிதாம்....
என்கிறார். சார் உலக வாதனை மற்றும் இருவினை ஒப்பாகி பரிபாகம் பொருந்தல் என்பது நிராசையின் உச்ச நிலையில் மட்டுமே உணர இயலும். மேலும் சூதும், வாதும் நிறைந்த பொய்யுலகில் தூய்மையான நெறியை உணர முடியாமல் எத்தனை, எத்தனையோப் பிறவிகள் வீணாகக் கழிகின்றன; உண்மை நெறியை உரைப்பாரும் இல்லை, சன்மார்க்கமும் இல்லையே என்று மீண்டும் சன்மார்க்க நெறியை உலகிற்கு உணர்த்துகிறார் எல்லாம் வல்ல வள்ளல் பெருமானார் இதனை நீங்களே பாருங்கள்!..
உண்மையுரைக்கின்றேன் இங்கு உவந்தடைமின் உலகீர் உரை இதனில் சந்தேகித்து உளறி வழியாதீர்!......
புனைந்துரையேன்; பொய் புகலேன்சத்தியம் சொல்கிறேன்......
தெளித்திடும் எத்தருணம் அதோ என்னாதீர் இதுவே
செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் .....
மோச உரை என நினைத்து மயங்காதீர் உலகீர்!...
திருநெறி ஒன்றே அதுதான் சமரச சன்மார்க்கச் சிவநெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடுமின்!....
சுத்தசிவ சன்மார்க்க நெறியில் சார்ந்து விரைந்து ஏறுமினோ; சத்திய வாழ்வளிக்கக் கண்மை தரும் ஒரு பெருஞ்சீர்க் கடவுள் எனப் புகலும் கருணை நிதி வருகின்ற தருணம் இது தானே!
( பாடல்கள் அனைத்தும் திருவருட்பா- ஞானசரியை)
என்று எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய வள்ளல் பெருமானார் உண்மை நெறியாகிய அருள்நெறியை உலகியலீர் எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று உரைக்கின்றார். எல்லாம் செய்வல்லான் என்னுள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்மின் நீவிர்....... நான் உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன் தன் வார்த்தை; நம்புமினோ நமரங்காள்! நல் தருணம் இதுவே!
எனவே உள்ளொளிப் பயணம் மேற்கொள்ளும் சன்மார்க்க அன்பர்கள் யாவரும் மிகவும் சிரத்தையுடன் ஞானகுரு வள்ளல் பெருமானாரைத் தொழுது, அவரை ஞானகுருவாக ஏற்று சுத்த சன்மார்க்க நன்னெறியான அருள்நெறியில் வாழத் தொடங்க வேண்டும்.
சரி, உலகில் எத்தனையோ மார்க்கங்கள் இருக்கும் பொழுது சுத்த சன்மார்க்க நெறியில் ஏன் செல்ல வேண்டும்? என்று நினைக்கிறீர்களா! எந்த ஒரு நெறி எல்லா உயிர்களுக்கும் நன்மைத் தருகிறதோ! எந்த ஒரு நெறி எல்லாம் வல்ல இறையால் மண்ணுலகத்திற்கு தந்தருளப்பட்டதோ! அந்த நெறியே உண்மையான ஞானநெறி. இதனை வள்ளல் பெருமானார் பல இடங்களில் கூறுகிறார். உதாரணத்திற்கு:
புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப் பொருளினை உணர்த்தி யெல்லாம் ஏறுற்ற சுகநிலை யடைந்திடப் புரிதிநீ யென்பிள்ளை யாதலாலே இவ்வேலை புரிகவென் றிட்டனம் மனத்தில் வே றெண்ணற்க வென்ற குருவே!
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்குணர்ந்து எண்டகு சிற்றம்பலத்தை எந்தை அருள் அடைமின்! ……..
திருநெறி ஒன்றே அது தான் சமரச சன்மார்க்கச் சிவநெறியென்று உணர்ந்து உலகீர்! சேர்ந்திடுமின்!..
ஆகவே கால தாமதம் செய்யாமல் ஞானகுருவாகிய வள்ளல் பெருமானார் பாதம் பணிந்து, அவருடையத் திருவருட்பாவை வேதமாக ஏற்று: “சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டறிமின்” செறித்திடு சிற்சபை நடத்தைத் தெரிந்து துதித்திடுமின்; ... என்ற வாக்கிற்கிணங்க, சிற்சபை நடனத்தை அறியத் தொடங்க வேண்டும். சிற்சபை நடனத்தை வெறும் வார்த்தைகளாலும், புலமையாலும், கற்பனைத் திறனாலும், மேடைப் பேச்சுகளாலும் அறிய முடியாது. “ஜீவகாருண்ய வாழ்வில் வாழ்ந்து நிராசையின் உச்சநிலைக்குச் சென்றால் சிற்சபை நடனத்தை அறியலாம்”. அல்லது சன்மார்க்கத் தவமான புருவமத்தி/ லடான ஸ்தானத்தில் முழுமையாகத் தன்னுடைய மனதைச் செலுத்தி, தினமும் பழக ஆரம்பித்தால் ஓரிரு நாட்கள் அல்லது வாரங்களில் , மாதங்களில் சிற்சபை நடனத்தை அறியலாம்.
புன்மார்க்கர்க்(கு) அறிவரிதாம் புண்ணியனை ஞான பூரணமெய்ப்பொருளாகி பொருந்தியமா மருந்தை அன்மார்க்கம் தவிர்ந்தருளி அம்பலத்தே நடஞ்செய் அருட்பெருஞ்ஜோதியை உலகீர் தெருட்கொளச் சார்வீரே.
என்று வள்ளல் பெருமானார் கூறுவதால் நன்மார்க்கமான சன்மார்க்கத்திற்கு உகந்த அன்பு, இரக்கம், கருணை, முதலான நற்குணங்களை அணிகலன்களாகவும், வாய்மை, இன்சொல் பேசுதல் முதலானக் குணங்களை உயர்ந்த ஆபரணங்களாகவும் கொண்டு, சினத்தை முற்றிலுமாக ஒழித்தால் மட்டுமே அங்கே ஞானஒளி ஒளிரத் தொடங்கும். உண்மையானத் தவவாழ்க்கையும் மிளிரும். இல்லையெனில் அவர்களுக்கு ஞானஒளியின் தரிசனம் கிட்டாது.
எனவே சன்மார்க்கத்திற்கு வரும் அன்பர்கள்; சன்மார்க்க வாழ்வில் ஈடுபடும் நம்மவர்கள் அனைவரும் சன்மார்க்கத்திற்குரியப் பண்புகள் அனைத்தையும் உலகியியல் வாழ்வில் முதலில் கொண்டு, சத்திய வாழ்வில் ஈடுபட்டு, பேரின்ப நடனத்தைக் காண முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், அப்பொழுது மட்டுமே பேரின்ப நடனத்தை விரைவில் கண்டுணரலாம்.
தொடரும். அடுத்தக் கட்டுரையில் :
உள்ளிருள் நீங்கிற்றுஎன் உள்ளொளி ஓங்கிற்றுத் தெள்ளமுது உண்டேன்என்று உந்தீபற!....
-என்பதைப் பார்ப்போம்.

சூதறிந்தீர்; வாதறிந்தீர்; தூய்மையறிந்திலிரே!

சத்திய வாழ்வில் ஈடுபடாது தியானம், யோகம், தவம் முதலிய சாதனங்களால் பூரணமெய்ப்பொருளைக் காண இயலாது. ”புன்மார்க்கர்க்(கு) அறிவரிதாம்”, ”பூரணமெய்ப்பொருள் ”என்பது ஈண்டு ஒப்புநோக்குதற்குரியது.
தொடரும். அடுத்தக் கட்டுரையில் :
உள்ளிருள் நீங்கிற்றுஎன் உள்ளொளி ஓங்கிற்றுத் தெள்ளமுது உண்டேன்என்று உந்தீபற!....
-என்பதைப் பார்ப்போம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Write a comment