அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருள்ஜோதி
சமரச சுத்த சன்மார்க்க சங்கம்
ஆலத்தூர், காரைக்கால்
வள்ளலார் பிறந்த நாள் விழா @ ஆலத்தூர்.
5.10.2009 வள்ளலார் பிறந்த நாளன்று, எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு வள்ளல் பெருமானிடம் அருள்ஜோதி சமரச சுத்த சன்மார்க்கத்தினரால் கீழ்கண்ட விண்ணப்பம் வைக்கப்பட்டது.
1. ஆணவம், கன்மம், மாயையை நீக்கி அருள் ஒளி பெற துணை புரியுங்கள்.
2. செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் தவறு இருந்தால் பொறுத்தருளுங்கள். பக்குவம் வருவித்தல் மூலம் செய்யும் தவறையும் சுட்டிக்காட்டுங்கள்.
3. ஞான சபை ஒன்று எங்கள் ஊரில் கட்டவும் அதில் தாங்கள் அருள் ஆட்சி புரியவும் வாருங்கள்.
4. எங்கும் சமரசம் ஏற்படவும், எங்கும் கருணை மேலோங்கவும் எங்கள் மாயை திரைகளையெல்லாம் நீக்கி தயவிற்கான ஒருமையை கொண்டுவாருங்கள்.
5. உங்கள் கருணை இல்லாமல் ஒரு அணுவும் அசைந்திடாது, ஆதலால் எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் விலகாமல் எங்களுக்கு ஆன்மநேய ஒருமைப்பாட்டை வலியுறுத்துங்கள்.
6. எங்கள் சிற்சபையிலும், பொற்சபையிலும், திருசிற்றம்பலத்திலும் நடமாடும் உங்களை பார்த்து , சிவானுபவம் பெற்றிட துணை புரியுங்கள்.
7. உங்களை குருவாக ஏற்று சுத்த சன்மார்க்கத்தில் ஈடுபடும் எங்களை எக்காலத்தும் உங்கள் ஞாபகம் நீங்காமல் இருக்கும் வரத்தை கொடுங்கள்.
8. நாங்கள் மீண்டும் பிறவி எடுத்தாலும் அதிலும் நாங்கள் சுத்த சன்மார்க்கத்தில் ஈடுபடும் உத்தமனாக பிறக்க துணை புரியுங்கள்.
9. சுத்த சன்மார்க்கத்தை இடைவிடாது கடைப்பிடிக்க துணை புரியுங்கள். இதுவே நாங்கள் உங்களிடம் கேட்கும் வரம்.
*********
மேலும் சமரச சுத்த சன்மார்க்கத்தில் ஈடுபாடு கொண்ட கீழ்வரும் அன்பர்கள்
1. கருணைமிகு, ரா.கிருஷ்ணமூர்த்தி
2. கருணைமிகு, சித்திவிநாயகம்
3. கருணைமிகு, விக்னேஷ்
4. கருணைமிகு, ரஞ்சித்
5. கருணைமிகு, கோதண்டபாணி
6. கருணைமிகு, ந. சந்திரா
7. மற்றும் Mrs.சுதா, பேபி நீலாம்பிகா
வள்ளலார் பிறந்த நாளில் அவர் பிறந்த ஊர் மற்றும் கருங்குழி, மேட்டுக்குப்பம், வடலூர் பார்க்க வேண்டும் என்று ஆவல் கொண்டனர், எனவே புனித வடலூர் பயணம் ஆரம்பமாயிற்று.
1. மருதூரில்:




1. கருங்குழி
மேட்டுக்குப்பம், சித்தி வளாகம்

அன்னதானக்கூடம் , மேட்டுக்குப்பம்


வடலூர் ஞானசபை

கல்பட்டு ஐயா சன்னதி


வள்ளலார் யுனிவர்சல் மிஷன் தங்கல் மனையில்




வடலூர் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் தங்கல் மனையில் சுமார் 2 மணி நேரம் ஓய்வெடுத்து காரைக்கால் வந்து சேர்ந்தோம்.
**********
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
megavum arumai ithu yan valunalli kedatha oru baikeyam
from,
vignesh.r