Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam and Vallalar Space Training Centre
சீர்காழி வள்ளலார் மன்றத்தின் செயல்பாடுகள்- ஓர் பார்வை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

சீர்காழி வள்ளலார் மன்றத்தின் செயல்பாடுகள்


எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய சிதம்பரம் ராமலிங்க சுவாமிகளின் திருவருளால் இன்று சீர்காழி வள்ளலார் மன்றத்தின் செயல்பாடுகளை வள்ளலார் இணையதளம் (www.vallalarspace.com) மூலம் உலகிற்கு வெளிப்படுத்துகிறோம்.

சீர்காழி வள்ளலார் மன்றம் கடந்த 4.2.1974-ம் வருடம் திரு.R. சம்பந்தம் ஐயா அவர்களால் தொடங்கப்பட்டு, பிறகு அறக்கட்டளையாகக் கடந்த 4.4.1990-ம் வருடம் பதிவுச் செய்யப்பட்டிருக்கிறது. இந்த இடம் திருவாவடுதுறை ஆதினம் மூலம் வள்ளலார் மன்றத்திற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நிர்வாகம்:

நிரந்தரத் தலைவர்: எல்லாம் வல்ல வள்ளல் பெருமானார்

தலைமை: திரு.R.சம்பந்தம் – தொலைப்பேசி: 04364-271604
துணைத் தலைவர்: திரு.V. நமச்சிவாயம்: 04144-238125
செயலாளர்: திரு. S.வெங்கடகிருஷ்ணன் - 9865612721
துணைச் செயலாளர்: திரு. R.சேகர் – 9994685744
பொருளாளர்: திரு.M. விவேகானந்தன் – 9994632990

திட்டம் மற்றும் செயல்பாடுகள்:( Projects)
ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
  1. திரு. கலியாண ரங்கன் - 94435 25580
  2. திரு. தீனதயாளன் – 9488377686
  3. திரு. சசீகோபாலன் – 9865252663
  4. திரு. வேல்அருள் – 8608606916
  5. மற்றும் மன்ற உறுப்பினர் திரு. A. சீனிவாசன் - 9443277750
வள்ளலார் மன்றப் பணிகளைச் செய்து வரும் மற்ற அன்பர்கள்:

உணவு அளித்தல்:

  1. திரு. ராஜ்குமார், சீர்காழி ( ஆசிரியர் ஓய்வு)
  2. திரு. முருகன் , சீர்காழி( ஆசிரியர் ஓய்வு)
  3. திரு. வடிவேல், சீர்காழி ( மின்சார ஆணையம் ஓய்வு)
பணியாளர்கள்:

  1. திரு. முருகன், சீர்காழி
  2. திரு. கிட்டு, சீர்காழி

சீருடைத் துணி (கொள்முதல்):

  1. திரு ஆக்ஸன், சீர்காழி
சீருடைத் தையல் கலைஞர்கள்:

  1. திரு. சண்முகம், சீர்காழி
  2. திரு. முனுசாமி, பச்சைப்பெருமாள் நல்லூர்
  3. திரு.ராமன், நாங்கூர்.
மன்றத்தின் செயல்பாடுகள்:

தினமும் அகவல் பாராயணம் ஒலி நாடாக்கள் மூலம் காலையும் மாலையும் ஒலிப்பரப்பாகிறது.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை மணி - 9 க்கு மன்ற உறுப்பினர்களால் அகவல் பாராயணம் செய்யப்படுகிறது.

அன்னதானப் பணிகள்:

  1. ஒரு வேளை உணவு சுமார் 36 நபர்களுக்கு தினமும் வழங்கப்படுகிறது.
  2. தினமும் 30 பள்ளி மாணவர்களுக்கு( விடுமுறை நாட்களிலும் ) உணவு வழங்கப்படுகிறது.
( திருவாவடுதுறை ஆதினம் மூலம் இந்த அன்னதானப் பணிகள் நடந்து வருகிறது.)
  1. வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை சுமார் 13 பள்ளி மாணவர்கள் (1000- மாணவர்களுக்கு )பேரிச்சை அல்லது வாழைப்பழம் வழங்கப்படுகிறது.
  2. மாத பூச தினத்தில் மாலை மணி 6-க்கு அகவல் பாராயணம் செய்து மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு ரொட்டி (பிரட்) மற்றும் பழங்கள் வழங்கப்படுகிறது.
வருடச் செயல்பாடுகள்:

  1. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் ஒரு நாள் அருட்பா சிந்தனைக் கூட்டம் நடைப்பெறும்.
  2. தைப்பூச தினத்தில் 1000 பள்ளி மாணவர்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்குதல்.
  3. டிசம்பர் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அகண்ட அகவல் பாராய்ணம்.
  4. ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கு செல்லும் தொடக்க வாரத்தில் 1000 ஏழைப் பள்ளி மாணர்வர்களுக்கு இலவச சீருடை மற்றும் காலணிகள் வழங்கப்படுகிறது.
திட்டப்பணிகள்: 2011-2012

  1. 1110 ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை சம்பந்தமாக:
இப்பணியில் செயலாற்றும் மன்றங்கள்:
வள்ளலார் மன்றம் சார்பாக :560
அருள்ஜோதி அறக்கட்டளை :200
மலேசிய அன்பர்கள் சார்பாக :350
( சிதம்பரம் வள்ளலார் மன்றம் மூலம்)
மொத்தம் : 1110

புதிய முயற்சிகள் ( New Projects )

  1. முதியோர்களுக்கு ஊன்று கோல்கள் வழங்குதல்
  2. மூலிகைப் பொடி, தைலம் வழங்குதல்
( உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு)

நிரந்தப் பணி:

  1. இந்த வருடம் மருத்துவமனையில் புறநோயாளிகள் தங்குவதற்காக 3 நிழற்கூடங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.
  2. ஏழை மாணவர்களுக்கு எழுதுப்பொருள், கையேடு வழங்குதல்.
  3. ஏழைகளுக்கு வேட்டி, துண்டு மற்றும் புடவை வழங்குதல்
எனவே விருப்பமுள்ள சமூக அக்கறைக் கொண்டவர்கள், சமுதாயப்பணிச் செய்வதற்கு ஆர்வமுள்ளவர்கள் இந்தச் சங்கத்தைத் தொடர்புக்கொண்டு உதவுங்கள்.

தொடர்புக்கொள்ள வேண்டிய முகவரி:

திரு. சம்பந்தம் அவர்கள்
எண்: 48, தேர் வடக்கு வீதி
( ஸ்டேட் பாங்க் அருகில்)
சீர்காழி
609110

வங்கி விவரம்:

IOB Bank, Sirkazhi, Tamil Nadu.
Vallalar Mantram - A/C No: 008301000025932

************************************************************************