அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
வள்ளலாருக்குப் பின் மற்ற அருளாளர்கள் ஏன் சாகாவரம் பெற முடிவதில்லை? ஓர் ஆய்வு.
வள்ளல் பெருமானைப் போல் மற்ற அருளாளர்கள் ஏன் சாகாவரம் பெற முடிவதில்லை என்று எல்லாம் வல்ல ஸ்ரீ அருட்பெருஞ்சோதி ஆண்டவரிடம் விண்ணப்பிக்கும் போது சில கருத்துகள் வெளிவந்தது.
|
வள்ளலார் |
மற்ற அருளாளர்கள் |
|
அகப்பற்றைத் தவிர்த்து புறப்பற்று மேல் விருப்பம் கொண்டவர். |
புறப்பற்றைத் தவிர்த்து அகப்பற்று மேல் விருப்பம் கொள்வது |
|
அருளியியல் வாழ்க்கைக்காக உலகியியலைச் சாதனமாக கொண்டார் |
உலகியியல் வாழ்க்கைக்காக அருளியியலைச் சாதனமாக கொள்வது |
|
சமயங்கள், மதங்கள், மார்க்கங்களின் ஆசார விகற்பங்களைத் தவிர்த்து ஆன்ம நேய ஒருமைப்பாட்டுடன் இறையை உணர்ந்தார் |
ஆசார சங்கற்பங்களை முதலிடத்தில் வைத்து இறையைத் தேடுவது. |
|
எவ்வித இச்சையும் இல்லாத உத்தம மனித வாழ்வு |
எல்லாவித இச்சையுடன் கூடிய மனித வாழ்வு |
|
அகங்காரம் இல்லாத அருளியியல் வாழ்வு |
அகங்காரத்துடன் கூடிய மனித வாழ்வு |
|
தனக்கென்று வாழாது பிற உயிர்களுக்காக வாழ்ந்தார் |
தனக்காகவே வாழ்ந்தனர்
|
|
புகழையும், பணத்தையும், பொருளையும் விரும்பாதவர் |
அனைத்தையும் விரும்புகிறார்கள். |
|
எல்லா உயிர்களிடத்தும் இறையைக் கண்ட ஞான சித்தர். |
தங்களிடம் மட்டுமே இறையைத் தேடுவார்கள் |
|
பிற உயிர்களின் நலத்திற்காக மட்டுமே சாகாவரத்தை பெற்றவர். |
மீண்டும் பிறக்காமல் இருப்பதற்காக முக்தியை தேடுபவர்கள் |
|
சக மனிதர்களிடம் தன்னை குருவாக காண்பித்துக்கொள்ள விரும்பாதவர். அவரைத்தேடி வருபவர்களுக்கு அருளியியல் வாழ்க்கையின் ரகசியத்தை வெளிப்படையாக போதித்தவர். |
விளம்பரம் மூலம் தங்களை குருவாக காண்பித்து, அஞ்ஞானத்தைப் போதித்து, அருளியியல் வாழ்க்கையில் பணம் சம்பாதித்து, உண்மை ரகசியத்தை மறைப்பவர்கள். |
இப்படி பல வேறுபாடுகள் உள்ளது. அதனால் தான் பிற அருளாளர்களால் சாகாவரத்தைப் பெற முடிவதில்லை.
இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது இச்சிறியேனுடைய தவக்குறைவான வாழ்க்கையில் இதனை உணர்த்துவதற்காகவே இப்பிறவியைக் கொடுத்துள்ளார் போலும். சுத்த சன்மார்க்கத்திற்கு இப்பிறவி மட்டும் போதாது மீண்டும் ஒரு பிறவி எடுத்தே ஞான வாழ்க்கையை விடய இச்சைகள் இல்லாமல் உத்தம மனிதனாக வாழ்ந்து சுத்த சன்மார்க்க -ஞான வாழ்க்கையை உணர்ந்து அனுபவிக்க இயலும் போலும்.
*******************
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஐயா எனது 55 ஆண்டு சன்மார்க்க வாழ்விலும் அருட்பாவை நான் படித்து உணர்ந்து கொண்டது. நம் பெருமானார்க்கு பின்னர் ஏன் யாரும் அவர் அடைந்த நிலையை அடையவில்லை என்று நான் கண்டுகொண்ட முடிவு. பக்தி, ஒழுக்கம், தயவு, தவம் ஆகிய நான்கிலும் வள்ளலார் தனக்கு நிகர் இல்லாது விளங்கினார். தற்போது உள்ள நம்மில் அநேகர் தவம் செய்வதில்லை. செய்கின்ற சிலரும் யார் யாரோ சொன்ன சாதனைகளை நம்பி ஏமாந்து வாழ்கின்றனர். வள்ளலார் செய்த தவத்தை சரியாக அறியவில்லை. தவத்தை அழிக்கும் சினத்தை ஒழித்து என்று வள்ளலார் பாடியுள்ளார்.சினத்தை அடியோடு ஒழித்த சாதுக்களை நான் இதுவரை காணவில்லை.திரு அருட்பாவை நன்கு பயின்றவர்கள் ஒன்று கூடி அமைதியாக ஓர் ஆய்வு செய்யவேண்டும். அதுவும் வேறு எந்த மார்கத்தையும் சாராத வள்ளலாரை மட்டுமே ஏற்றுக்கொண்ட சன்மார்கிகள் ஒன்று கூடினால் நிச்சயமாக வள்ளலார் எந்த சாதனையை செய்தார் என்று உணர வாய்ப்பு உண்டு. சினத்தை ஒழித்த சாதுக்கள் ஒன்று சேருங்கள். நாம் மரணமிலாப் பெரு வாழ்வு அடைவோம்.
வருகிற ஆகஸ்டு மாதத்தில் இத்தகைய சந்திப்பு நிகழ எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய வள்ளல் பெருமானை பிரார்த்தனை செய்கிறேன்.
மேலும் இது போல் ஒரு சந்திப்பு கடந்த வருடம் கோயம்புத்தூரில் நடந்தது. அது போல் இந்த வருடமும் ஒரு சந்திப்பு வடலூர், கோயம்புத்தூர், மதுரை அல்லது சென்னை ஆகிய ஏதாவது ஓரு ஊரில் நடக்கும்.
திருவருளால் இத்தகைய சந்திப்பு ஏற்படும். இதற்கான முடிவை மிக விரைவில் நீங்கள் எதிர்ப்பார்க்கலாம்.
நன்றி