இன்று வருமோ நாளைக்கே வருமோ அறியேன்
இன்றைக்கு சமரச சுத்த சன்மார்க்க சங்கம் அனைத்து ஊர்களிலும் தொடங்கப் பெற்று ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளின் கருத்துகள் எங்கும் பரவி வருகிறது. சுவாமிகளின் கருத்துகளும் அனைத்து வித மொழிகளிலும், மொழி பெயர்க்கப் பெற்று சாதி, சமய, இன , மொழி வேறுபாடில்லாமல் மண்ணுலகத்தில் அனைவரும் தெரிந்துக் கொள்ளும் காலமாக இது மாறியுள்ளது.
ஸ்ரீ ஞானகுரு ராமலிங்க அடிகளும் அவ்வப் போது தகுந்த மனிதர்களிடம் ( கருணை உள்ளம் கொண்டவர்களிடம் ) தகுந்த காலத்தில் , தகுந்த வேலையை செய்துவித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். (உதாரணங்கள் கூட எந்த ஒரு சலனத்தையும் உருவாக்கக் கூடாது என்பதால் பெயர், நிறுவனங்களை வெளியிட விரும்பவில்லை).
எடுத்துக்காட்டாக , சில கிராமங்களில் கோழி, ஆடு வளர்ப்பதில்லை, சில கிராமங்களில் ரசாயன உரங்களை பயன்படுத்துவதில்லை, சில கிராமங்களில் தொலைக்காட்சி களைப் பார்ப்பதில்லை. எப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்று ஒவ்வொருவரையும் ஆச்சரியப் பட வைக்கிறது.
இதுபோல் பல நிகழ்ச்சிகளை சொல்ல லாம், சரி தலைப்புக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று தானே நினைக்கிறீர்கள் அல்லவா ! இருக்கிறது சம்பந்தம்.
ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளின் எண்ணம் அனைத்து வித மக்களும் உத்தமர்களாக வாழ வேண்டும் அதன் மூலம் சாகாக் கல்வி, சாகா கலை கற்க வேண்டும் என்பதே.
அதற்கு ஒரு பொது அமைப்பு உருவாக்கிட வேண்டும், அனைத்து சங்கங்களும், உறுப்பினர்களும் கலந்துக் கொண்டு இதை செய்து முடிப்பது என்று ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளிடம் அனைவரும் பிரார்த்தனை செய்து;
· அவர் பெயரால் வடலூரில் ஒரு நகர் அமைத்திட வேண்டும்.
· அந்நிறுவனத்திற்கு ஸ்ரீ ராமலிங்க அடிகளை தலைவராகக் கொண்டு அனைவரும் செயல் பட வேண்டும்.
· சுமார் 500 நபர்கள் தங்கும் அளவிற்கு ஒரு கட்டிடம் கட்டப் பட வேண்டும்.
· சுத்த சன்மார்க்க பயிற்சியில் இருப்பவர்களுக்கும், கற்றுக் கொள்பவர்களுக்கும் தனி தனி இடம் ஒதுக்கப் பட்டிருக்க வேண்டும்.
· சாதுக்களிடம் சத்விசாரம் செய்யவும், தேவையான பயிற்சி மேற்க் கொள்ளவும் தகுந்த நேர ஒதுக்கீடு செய்யப் பட வேண்டும்.
· வள்ளலார் காண விரும்பிய ஒரு பல்கலைக்கழகம் போல் இது செயல் பட வேண்டும்.
· வெளியூர், வெளி மாநிலம், வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு தகுந்த தேவையான செய்திகளையும் கருத்துகளையும், போதனைகளையும் வழங்கும் இடமாக இது இருக்க வேண்டும்.
· சமய சன்மார்க்கம் , சுத்த சன்மார்க்கம் என்ற பிரிவினையில்லாது அனைவரும் வள்ளலார் வழியில் நின்று எல்லால் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரை கண்டும், உணர்ந்தும், களித்தும் மகிழ ஒரு அற்புத மான இடமாக இது இருக்க வேண்டும்.
· வள்ளலார் கண்ட சன்மார்க்க சங்கம் ஒவ்வொரு ஊரிலும் எவ்வாரு செயல் பட வேண்டும் என்று வருடம் தோறும் சிறப்பு பயிற்சி அளிக்கப் பட வேண்டும்.
இது இன்று வருமோ நாளைக்கே வருமோ அறியேன்
- சக்தி ராஜா, சென்னை
******************
Thank u for giving chennai Sakthi Raja's Information.vallalar suddha sanmarga sangam ulagathin
anithu veethigalilum seyalpadum.Thank u for all.
With Vallalar Loving,
AruljothiSujatha.