Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam and Vallalar Space Training Centre
ஸ்ரீராமலிங்க சுவாமிகள் மடாலய -73-ம் ஆண்டு விழா அழைப்பிதழ்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஸ்ரீராமலிங்க சுவாமிகள் மடாலய -73-ம் ஆண்டு விழா அழைப்பிதழ்

எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்பலத்தே

எல்லாம் வல்லான் றனையே யேத்து

ஆன்ம நேயமுடையீர்!

எல்லா உயிர்களிடத்தும் கருணை உள்ளம் கொண்டு உலக உயிர்களிடையே ஒருமைப்பாட்டினை நிலை நாட்டிய சத்திய ஞான சித்தர் திருவருட்பிரகாச வள்ளலார் எனும் ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள். அவருடைய கொள்கைகள்: ஏக தெய்வ வழிபாடு, எம்மதமும் சம்மதம், ஆன்ம நேய ஒருமைப்பாடு, அன்னமளித்தல், தீப வழிபாடு முதலியனவாம்.

காரைக்கால் மாரியம்மன் கோவில் வீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீராமலிங்க சுவாமிகள் மடாலயத்தில் நிகழும் விரோதி வருடம் சித்திரை மாதம் 23-ம் நாள் முதல் 27-ம் நாள் வரை (6.5.2009- 10.5.2009) வள்ளலாரின் பெருந்திருநாள் சிறப்பான முறையில் நடைபெறும்.

எனவே சன்மார்க்க அன்பர்கள் மற்றும் அருள் ஆன்ம நேயர்கள் அனைவரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.

இங்ஙனம்

பரம. தாண்டவன் , தலைவர்

மற்றும் விழா குழுவினர்.

ஸ்ரீராமலிங்க சுவாமிகள் மடாலயம்

காரைக்கால்.