Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
உலகியியல்-அருளியியலில் ஏழு சக்கரங்களின் பங்கு



உலகியியல்-அருளியியலில் ஏழு சக்கரங்களின் பங்கு

தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாக்கல்வியைக் குறித்துச் சொல்லியிருக்கிறது.அதைத் தக்க ஆசிரியர் மூலமாக தெரிந்து கொள்க- வள்ளலார்.

வள்ளலார் நேராக அதை ஏன் தெரிவிக்க வில்லை என்ற கேள்வி எழலாம். வள்ளலார் வள்ளுவரிடம் உள்ள பக்தியை இது காட்டுகிறது. அருளியியல் வாழ்க்கையை ஆரம்பிக்க மிக நுணுக்கமான வழியை வள்ளுவர் தெரிவித்துள்ளார்.

இது உலகியியலுக்கும் பொருந்துபடியான தனித்தன்மையை கொண்டுள்ளது. திருக்குறளுக்கு நிறைய உரைகள் உள்ளன. வள்ளுவர் எதை உணர்த்தினார் என்பது வள்ளுவருக்கும் வள்ளலாருக்கும் மட்டுமே தெரியும் ஆதலால் எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரை தொழுது உண்மையை உணர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

மூலாதாரம்:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

உலகியியல்:

மெய்யறிவாளர்களின் வழியை பின்பற்றாமல் இருந்தால் கற்ற கல்விக்கும் பயனாகாது. வாழ்க்கையும் சிறக்காது.

அருளியியல்:

வாலறிவு என்பது ஆன்ம அறிவாக-இறை அறிவாக விளங்குகிறது. படிப்பு என்பது பிறர் மூலம் கற்பது. ஆன்ம அறிவு என்பது தனிப்பெருங்கருணையால் இறையை உணர்ந்து அதன் மூலம் கற்பது, அல்லது இறையை போற்றுவது. இல்லையெனில் அருள் வாழ்க்கை சிறக்காதாம்.இது ஞானப்பசியாம்.

சுவாதிஷ்டனம்:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

உலகியியல்:

மனத்தில் நிறைந்துள்ள ஆன்றோரின்-வயது முதிர்ந்த பெரியோரின் வாழ்க்கை அனுபவம் அல்லது அடிச்சுவடியை பின்பற்றி செல்பவர்கள் நீண்ட புகழோடு வாழ்வர்.

அருளியியல்:

மலர் போன்ற மனத்தில் -அகமாகிய மலரில் வீற்றிருக்கும் இறைவனை இடைவிடாமல் நினைக்கின்றவர் உலகில் நிலைத்து வாழ்வர்.அக குருவாகிய இறையை தொழுது அவர் நினைப்புடன் தனித்து வாழ்வது.

மணிபூரகம்:

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

உலகியியல்:

விருப்பு வெறுப்பு இல்லாதவர்கள் எவ்வித துன்பத்தையும் வாழ்க்கையில் சந்திக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பக்குவம் அடைந்தவர்கள்.

அருளியியல்:

ஆண்டவர் விருப்பு வெறுப்பு இல்லாதவர். அவரின் தனிப்பெருங்கருணை அனைத்து வித ஜீவ ராசிகளையும் காத்து வருகிறது. எனவே அனைத்து வித ஜீவர்களிடமும் அன்பு பூண்டால் ( பொது நோக்கால்) அவர்களுக்கு எந்த தீங்கும் வராதாம்.

தொடரும்..,


sukumar srinivasan
வேண்டுதல் வேண்டாமை இலானடி
சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல
ஞான விளக்கம்
விருப்பு வெறுப்பு அற்ற இறைவன் அடி சேர்ந்தவர்க்கு எப்போதும் மரணம் ( இடும்பை- மா பெரும் தீங்கு) கிடையாது
அவர்கள்தான் மரணமில்ல பெரும் வாழ்வு வாழ்கின்றனர்
அன்புடன்
சுகுமார்
Saturday, February 28, 2009 at 03:59 am by sukumar srinivasan