மாற்றம்
வள்ளலாருடைய கருத்துகள் புத்தரை போன்றும், ஜைன மதத்தைப் போன்றும், இந்து மதத்தைப்போன்றும், கிருத்துவத்தை போன்றும் தோன்றினாலும்
அவருடைய எண்ணமெல்லாம் மனித குலத்தை தூய்மை படுத்துவதற்காகத்தான் உள்ளது .
*********************
வள்ளலார் மாற்ற நினைக்கிற யுக மாற்றம் - சன்மார்க்க மாற்றம் வெகு விரைவில் வரப்போகிறது. அம்மாற்றம் கருணை உருக் கொண்டு சாதி , மத கலவரம் இல்லாத துப்பாக்கி சத்தம் இல்லாத எங்கும் அமைதி உலகமாக மாறும். மக்கள் அதனை உணரத்தான் இந்த பொருளாதார சிக்கல் போலும்,
இதையெல்லாம் பார்க்கும் போது வெகு விரைவில் மக்கள் மத கோட்பாடுகளைக் கடந்து அனைவரும் கருணை , அன்புறு பெறுவார்கள் என்று நினைக்க தூண்டுகிறது.
மாற்றம் என்பதை முன் நிறுத்தி பல புரட்சிகளை செய்தவர் வள்ளலார். அவருடைய கருத்துகள், எண்ணங்கள் பல மாற்றங்களை செய்து வருகின்றன. மாற்றம். இந்த ஒற்றை வார்த்தையைத் தன் அரசியல் கோட்பாடாக முன்னிறுத்தி தன் பிரசாரத்தைத் தொடங்கினார் ஒபாமா. சீறிப்பாய்ந்து வந்தன கண்டனங்கள்.
வெள்ளை இனத்தை ஒரு கறுப்பரா ஆளவேண்டும்? தன் நடுப்பெயரை ஹுஸேனாகக் கொண்டு இருக்கும் ஒரு கறுப்பின முஸ்லிமிடமா தேசத்தைக் கொடுக்கப்போகிறீர்கள்?
ஆமாம். அழுத்தமாக அறிவித்தது அமெரிக்கா. இனத்தையும் நிறத்தையும் சுட்டிக்காட்டி ஒபாமாவை ஒதுக்கியவர்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவைத்தனர் அமெரிக்கர்கள்.
ஒபாமாவின் வெற்றியை உலகெங்கிலும் உள்ள கறுப்பின மக்கள் தங்கள் சொந்த வெற்றியாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். தங்களை மீட்க வந்த ரட்சகராக ஒபாமா அமெரிக்கர்களால் பார்க்கப்படுகிறார். மத கருத்துகள் தோல்வியை தழுவுகின்றன.
சாதி மதம் கடந்து வள்ளலார் அனைவராலும் போற்றப்படுகிறார். ஒரு சிலர் வெகுசனம் தழுவினார் என்றும், வாழையடி வாழை என்றால் சைவம் தான் என்றும், பேருபதேசத்தில் சைவம் , வைணவம் இலட்சியம் வேண்டாம் என்றார் என்றும் பல விதமாக திரும்பவும் மதத்தை இழுக்கையில் அவர் அனைத்தும் கடந்து அன்பாக கருணை யாக உள்ளார் என்பதே உண்மை.