Karunai Sabai-Salai Trust.
வள்ளலாரின் கொள்கையில் " ஆசாரங்கள் " உண்டா? சைவ சமய திரு அடையாளமாக இருக்கும் விபூதியை சுத்த சன்மார்க் கத்தை சார்ந்தவர்கள் பூசுவது சரியா?? --APJ.ARUL
தயவு கூர்ந்து புரிந்துக் கொள்ளுங்கள்.
பிறர் குற்றம் விசாரிக்க கூடாது என்பது நம் வள்ளலார் கட்டளை.
அவரவர் அறிந்தளவு நல்லறிவுலேயே நல்ல குணத்துடன் தான் நமக்கு வெளிப்படுத்துகிறார்கள்.
இது வள்ளலார் கொள்கையை வெளிப்படுத்தும் WEB SITE ஆகும்.

எல்லா சமயம், மதம் மார்க்க நெறிகள் நல்ல விசயத்தை தான் போதிக்கின்றன. இவையில் சொல்லப்பட்டுள்ள உண்மையின் அளவிலும், அதன் வழியிலும் வேறு படுகின்றன.
இது வள்ளலார் வெப் சைட். வள்ளலார் என்ன உண்மைகளை சொல்லியுள்ளார்கள். என்பதை உலகத்தார்களுக்கு தெரியப்படுத்தவே மதிப்புக்குரியவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்.வள்ளலார் தவிர மற்ற விசயங்கள் சிறப்பாக தென்பட்டாலும் இங்கே பகிர்ந்துக் கொள்ளும் போது தான் தர்க்கம் எற்படுகிறது.

வள்ளலார் சொல்லியதை அங்ஙனமே சொல்வதும், தவறாக வெளிப்படுத்தினால் தகுந்த ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுவதும், மேலும் சிறப்பாக வெளிப்படுத்துவதும் ஏற்புடையது ஆகும். மற்றபடி எவரையும் குற்றம் சொல்வதும் காண்பதும் கூடாது. முடியாது.

எதைச் சொன்னாலும் ஆதாரத்துடன் வெளியிடுங்கள். பக்கத்தை சுட்டிக் காட்டுங்கள். அதையும் மறுத்தால் வள்ளலாரை மறுப்பது ஆகும். அதற்கும் உரிமை உண்டு. ஆனால் இங்கு இல்லை. அந்த உரிமை அவரவர் இடத்தில் உள்ளது. இது வள்ளலார்க்கென வெப் சைட் என உள்ளது என நினைத்துள்ளேன். அப்படி இல்லை என்று உரியவர்கள் கூறிவிட்டார்கள் என்றால் நான் தவறு. அவ்வளவே.

உண்மை அறிய ஆசைப்படுவோம். உரிமையுள்ளவரை வள்ளலாரின் சத்திய வார்த்தையை இங்கு விதைத்திடுவோம். நன்றி
.
வள்ளலார் சொன்னார்கள் என் மார்க்கம் அறிவு மார்க்கம்.
என் மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை என்கிறார்கள்.

இந்த நேரத்தில் நம் அறிவுக்கு உடன் வர வேண்டியது
வள்ளலாரின் வார்த்தையே அது "" காலம் காணாது"".

இதோ நாம் நல்ல விசாரணையை தொடங்க இன்றையப் பொருள்

இரக்கம், வள்ளலாரின் கொள்கையில் " ஆசார ங்கள் " உண்டா?
சைவ சமய திரு அடையாளமாக இருக்கும் விபூதியை சுத்த சன்மார்க் கத்தை சார்ந்தவர்கள் பூசுவது சரியா??

கூடும் என்றால் ஆதாரம் என்ன? கூடாது என்றால் ஆதாரம் என்ன?
இவை குறித்து உள்ள வள்ளலாரின் சத்திய வார்த்தைகள் என்ன?

(என் பார்வையில் இது குறித்து தென்பட்டவை பக்கம்….. விண்ணப்பம்,
பக்கம்:… உ. ந.ப: பக்கம்:…. பாடல்கள்: …..மற்றும் அகவல் வரிகள்:………. )

மிக முக்கியம், ஆதாரம் வள்ளலாரின் முடிபான சுத்த சன்மார்க்கத்திலிருந்து கொடுக்கப்பட வேண்டும். வள்ளலாரின் முந்தைய சமயப் பற்றிலிருந்து கூடாது.
8 Comments
APJ Arul
இந்த கட்டுரை வள்ளலாரின் முடிபான நெறி குறித்தே மிக நல்லமறையில் விசாரமாக இருக்கும்.
Monday, November 23, 2015 at 17:02 pm by APJ Arul
Damodaran Raman
அன்புடையீர், வணக்கம். இக்காலத்தில் வள்ளலார் கூறாதனவற்றையெல்லாம் வள்ளலார் பெயரில் கூறுகின்றனர். முதலைந்து திரு முறைகளைப் புறக்கணிப்பது ஒரு சரியான எடுத்து காட்டு. பிற சைவர்கள் போலவே வள்ளலாரும் அகவலைத் திருச்சிற்றம்பலம் என்று தொடங்கித் திருச்சிற்றம்பலம் என்றுதான் முடித்துள்ளார். வள்ளலார் கூறும் முத்தி,சித்தி என்னவென்று அறியாதவர்கள் கூடச் சன்மார்க்கம் பேசுகின்றனர். சன்மார்க்கம் என்பதைச் சத் மார்க்கம் என்று கூறிப் பின் மார்க்கம் என்னும் பகுதியை நீக்கிவிட்டுச் சத் என்பதைமட்டும் எடுத்துக் கொண்டு ஒழுக்கம் என்ற ஒன்றைப் புதிதாகச் சேர்த்துக் கொண்டு சத்தொழுக்கம் என்று வள்ளலார் கூறாத ஒன்றைத் தாங்களாகவே கற்பித்துக் கொண்டு அதைப் பற்றியும் ஏதேதோ கூறுகின்றனர். மார்க்கம் வேறு:ஒழுக்கம் வேறு என்பது வெளிப்படை. ஒழுக்கம் ஒருபோதும் மார்க்கம் ஆகாது.சென்னைமார்க்கம் என்பது சென்னை ஒழுக்கமாகுமா? வள்ளலார் தெளிவாகவே சுத்த சன்மார்க்கச் சாத்தியர்கள் கனவிலும் பெண்ணுடன் கொள்ளும் தேக சம்பந்தம் கூடாதென்கிறார். எத்தனை பேர் நைட்டிக பிரம்மச்சாரிகளாய் இருக்கின்றனர்?எத்தனை பேர் இவ்வொழுக்கத்தில் உறுதியாய் இருக்கின்றனர்? இதிலே உறுதியற்றவர்கள விபூதிப் பற்றி ஆராய்வது வீண். விரும்புவோர்கள் பூசிக்கொள்வது ஒருபோதும் தவறாகாது. திருச்சிற்றம்பலம் என்று அகவல் தொடங்குவதை மீண்டும் கவனிக்க.வணக்கம். வாழ்க.
Monday, November 23, 2015 at 22:42 pm by Damodaran Raman
narayani julu
நான் மதிப்பு வைத்துள்ள உயர்திரு தாமோதர்ன் றாமன் அய்யா, எந்த ஓரு ஆதாரமில்லாமல் மறுக்காதிர்கள்.
இந்த விசாரம் செய்ய வைத்த APJARUL லே ஆதார்ம தரவேண்டும். இதற்கு விளக்க வேண்டும்.
Tuesday, November 24, 2015 at 13:28 pm by narayani julu
Durai Sathanan
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்கவே!
திருச்சிற்றம்பலம்

சன்மார்க்கம் என்பதைச் சத்தொழுக்கம் என்று எழுதவில்லை
சன்மார்க்க ஒழுக்கத்தையே சத்தொழுக்கம் என்கின்றோம்
தெளிந்தஎன் எழுத்துக்களே தெரியாது போனால்அந்தோ
ஒளிந்தவன் எழுத்துக்களைத் தெரிவதுதான் எங்ஙனமோ?

கனவினும் பெண்ணாசை கூடாதென்பது புறவிளக்கம்மிதுக்
கண்ணில்லாக் குருடர்க்கும் புலனாகாதோ - அருள்அகவலில்
பெண்ணியல் மனமும் ஆணியல்அறிவெனும் அகவிளக்கமதைத்
தன்னியல் கண்டுகாணாதார் அறியாருண்மை மெய்ப்பொருளை!

பிதற்றிப்பேசும் பேச்சுக்களைப் பேதமைநாடா அடியார்கள்
அதற்றிப்பேசிட மாட்டா்கள்! - ஆகலில், அனுபவமின்றிக்
குதற்றிப்பேசும் குதப்பர்காள் இனிமேலிங் கெம்மைக்
குறித்துப்பேசினும் பேசுங்கள் குறைஒன்றும் இல்லையதனாலே!

இங்கு, the புறவிளக்கம் - the outward meaning is also true. But, the அகவிளக்கம் - the inner meaning is the actual true message of Vallarperuman for us through "மூன்றாசை:- மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை" Try to know this inner truth. Or therwise, there is no need to use the terms,"நினைவினும் மண்ணாசை , கனவினும் பெண்ணாசை, சழுப்தியினும் பொன்னாசை." Hope you got it! May God bless you. Thanks. அருட்பெருஞ்ஜோதி...
Tuesday, November 24, 2015 at 14:38 pm by Durai Sathanan
magudadheeban
சுத்த பிரணவ ஞான உடற் கூறுகளைப் பெற்ற நிலையிலும் கூட,
வள்ளல்பிரான் அவர்கள் மற்றவர் பிணிதீர திரு நீறு அளித்தது உண்மை யில்லை என மறுத்தல் இயலுமா ? கோடுத்த்து பூசிக்உ கொள்ளத்தானே ?
அவருக்கு ஒளி தேகம். விபூதி ஒட்டாது....
அந்த நிலை நமக்கு உறுங்கால் திரு நீறு அவசியமில்லை...
இப்போது அணிவதில் முரண் இல்லை என்பதே எம் கருத்து...

-மகுடதீபன்
Tuesday, November 24, 2015 at 15:38 pm by magudadheeban
Damodaran Raman
ஐயா,வணக்கம்.சுக்கிலம் என்பது மிக முக்கியமான ஒன்று.தெய்வ நிலைய வெளியீடு பக்கம் 359-இல் கரு உற்பத்தியைப் பற்றிக் குறிப்பிடும்போது இரண்டரை வராகன் எடை உருவான சுக்கிலத்தில் ஒரு பங்கு கோச நுனியிலும் ஒருபங்கு நாபி என்னும் வயிற்றுப் பகுதியிலும் மீதமுள்ள அரைப்பங்கு பிரம ரந்திரத்திலும் சேர்கின்றது எனகிறார். அகவல்1453,1454ஆம் வரிகளில் சுக்கிலம் உரத்திடை பந்தித்து ஒரு திரளாயிட என்கிறார். இந்தச் சுக்கிலந்தான் அமுதம் ஆவது. மரணத்தை நீக்குவது. பெண்பால் சுக்கிலத்தைச் செலவழித்தால் தேகம் விரைவில் போய்விடும். நம்மை நஷ்டம் செய்வன நானகு(மேற்படி நூல். பக்கம்:423)உரைப்பகுதியில் உடலுறவு விடயத்தில் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாவிடில் தேகம் அதி சீக்கிரத்தில் போய் விடும் என்றும் பின்பு முத்தி அடைவது கூடாதென்றும் எச்சரித்து உள்ளார். மகுட தீபன் கருத்து ஏற்கத் தக்கதாம்.சரியானதும் ஆகும். இது சன்மார்க்கத்திற்கு உகந்த தல்ல என்போர்கள் கருத்தைக் காணும் மற்றவர்கள் எதற்காக வள்ளலார் திரு நீற்றைப் பற்றிப் பாடினார் என்று கேட்டால் என்ன விடை கூற முடியும்? அப்போது அவருக்கு அற்ப அறிவு இருந்தது என்று விளக்கம் கூறினால் அது வள்ளலாரைத்தான் இழிவு படுத்தும்.திருமுறை வெளியிடும்போது ஆறாம் திருமுறையை வெளியிடக் கூடாது என்று தடுத்தவர் வள்ளலார். அவருக்குத் தெரியாத ஒன்றைத் தாங்கள் கூறுகிறோம் என்பது எந்தவகையில் ஏற்றுக்கொள்வது? ஞானச்சரியை,4-ஆம் பாடலில் எண்டகு சிற்றம்பலத்தே எந்தை என்றும், 19-ஆம் பாடலில் மணிமன்றில் நடம்புரியும் எம்பெருமான் என்றும்,24-ஆம் பாடலில்கூறும் அம்பலப்பற்று என்பது நடராசப்பெருமான் மீது வைக்கும்பற்று ஆவதுடன் நடராசப்பெருமானையுந்தான் குறிக்கும்.சிவன் எண்குணத்தான் ஆவான்.முற்றும் உணர்தலும் பேரறிவு உடைமையும் அளவற்ற ஆற்றலுடைமையும் வரம்பற்ற இன்பத்தையும் உடையவன் சிவ பெருமான்.எண்குணத்திற்கு மேற்பட்ட இறைவன் என்று ஒருவரும் கிடையாது.இருப்பின் அத்தகு இறைவனைப் பற்றித் தாராளமாக விளக்கலாம். துரையவர்கள் எதற்காகச் சன்மார்க்க ஒழுக்கத்தைச் சத்தொழுக்கம் என்று கூற வேண்டும்? இதனை விளக்க வேண்டாமா? நாளை இவர் போலவே ஒருவர் இந்திரிய ஒழுக்கத்தை இந்தொழுக்கம் என்றும் கரண ஒழுக்கத்தைக் கர ஒழுக்கம் என்றும் ஜீவ ஒழுக்கத்தை ஜீயொழுக்கம் என்றும் கூற இடம் தரும்! சன்மார்க்க ஒழுக்கம் என்பதில் உள்ள தெளிவும் எளிமையும் சத்தொழுக்கத்தில் இருக்கிறதா? மேலும் சத்து என்பது சித்து மற்றும் ஆனந்தத்தோடு தொடர்பு உடையது. சத்தொழுக்கம் எனவே சித்தொழுக்கம்,ஆனந்த ஒழுக்கம் எனும் இவை கூட இருக்கும் போலும் என்று மயங்க வைக்காதா? இவர் அக விளக்கம் என்று கூறியுள்ளதற்கு அருட்பா மற்றும் உரைப் பகுதியில் உரிய மேற்கோள் காட்ட வேண்டாமா?பெண்ணியல் மனமும் ஆணியல் அறிவும் என்பது இவர் கூறும் மூவாசை குறித்த அக விளக்கம் ஆகாது.ஆகுமென்றால் எப்படி ஆகுமென்பதைத் தருக்க அறிவுடன் விளக்க வேண்டும். தான் கூறுவதுதான் சரி:மற்றவர்கள் கூறுவது பிதற்றல் என்று கூறுவதைத் தவிர்த்து விட்டு உணமையை விளக்குவதுதான் முறையாகும்.வணக்கம். வாழ்க.
Wednesday, November 25, 2015 at 12:21 pm by Damodaran Raman
APJ Arul
Mr.Magudadheeban மகுடதீபன் அய்யா கண்டிப்பாக வள்ளலார் 12-04-1871க்கு பின்பு விபூதி அணியவுமில்லை யாருக்கும் வழங்கவுமில்லை. இப்படி பொய்யான செய்தியை வரலாற்றில் பதிவு செய்யாதீர்கள். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய பகுதியே ஆசாரம் ஓழித்தலே.
Damodaran Raman அய்யா,swamy Rajendran அய்யா எதற்கு கட்டுரையின் பொருளை மாற்றிக்கொண்டு போகிறீர்கள். பெரியவர்கள் நீங்கள் இருவரும்,,என்னத்தைச் நான் சொல்ல முடியும்?என் கட்டுரையின் பொருளை மாற்றாதா??வள்ளளாரின் ஆவணங்களின் மூலம் விபூதி குறித்து தாருங்கள் என்றால் .........???
Wednesday, November 25, 2015 at 17:21 pm by APJ Arul
narayani julu
எபிஜெஅருள் மேடம் விபுதி குறித்து ஆதார்த்தை நீங்கள் கொடுக்கவில்லை ஏன்?
Wednesday, November 25, 2015 at 17:35 pm by narayani julu