Karunai Sabai-Salai Trust.
வாழ்த்துரை By Mr. Durai Sathanan
வாழ்த்துரை to‘உண்மைக் கடவுள்’ சுத்த சன்மார்க்க நூல்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! கொல்லா விரதம் இக்குவலயமெல்லாம் ஓங்குக!
                                                            *********
எல்லாம் வல்ல எல்லாமாகிய அகண்டாழ்ந்த பூரண சத்திய ஞானானந்த இயற்கை உண்மை நிறைவாகிய திருவுருத்தரித்து, எவ்வுயிரும் இன்பம் அடைதற் பொருட்டே, இயற்கை இன்ப நிறைவாகிய ஒருமைத் திருநடத்தை எக்காலத்தும் எவ்விடத்தும் செய்தருள்கின்ற தனித்தலைமைப் பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சக்தியின் திருவருட் சுதந்திரத்தால், நம் தேகத்தையே நித்திய தேகமாக்கிக் கொண்டு, எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எத்துணையும் தடைபடாது அனுபவிக்கின்ற பேரின்ப சித்திப் பெருவாழ்வாம், அந்த ஒப்பற்ற அனகப்பெருவாழ்வெனும் இறவாப் பெருநிலையை நாம் எல்லோரும் இப்பிறவியிலேயே இனிதே பெற்றிட, நம் நற்சுதந்திரத்திற்காக, நான்கு தேகங்களை நலமுடன் நல்கியுள்ளார்; நம் அறிவாரறியும் வண்ணங்களெல்லாமுடைய எல்லாம் வல்ல பேரருட் பெருஞ்ஜோதிப் பெருந்தகைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

எனவே, அவர் தந்த தேகங்களை, நாம் அவருக்கே சர்வசுதந்திரமாக அர்ப்பணிப்பது, அதாவது, நம் புறப்புறத் தேகத்தால் & தொழுது அழுது துதிப்பதுவும், புறத்தேகத்தால் & சிந்தையில் நிறைந்து நினைந்து பிரார்த்திப்பதுவும், அகத்தேகத்தால் & ஊன்றி நெகிழ்ந்து உணர்வதும், அகத்தகத்தேகத்தால், & நீக்கமற இரண்டறக் கலந்து புணர்தலாகிய ஒருமையை அடையப்பாடுபடுவதும், இந்த மகத்தான மானுடப் பிறவியின் மிக முக்கியக் கடமையாக உள்ளது. இவ்வுண்மையை அறிவதும், அறிவிப்பதும் நம்முடைய இயல்பான ஆன்ம உரிமையாகவும் உள்ளது. இங்கு, புறப்புறத்தேகமென்பது & நம் தூல தேகம் (றிலீஹ்sவீநீணீறீ ஙிஷீபீஹ்); புறத்தேகமென்பது & கண், காது, மெய், வாய், மூக்கு எனும் நம் கரணதேகம் (விவீஸீபீ ஙிஷீபீஹ்); அகத்தேகம் என்பது நம் உயிராகிய ஜீவதேகம் (ஷிஜீவீக்ஷீவீt ஙிஷீபீஹ்); மற்றும், அகத்தின் அகமென்பது & நம் ஆன்ம தேகமாகும் (ஷிஷீuறீ ஙிஷீபீஹ்);- இஃது, எல்லாம் வல்ல இறையருளின் இருப்பாகும்.

முக்திவரை சென்று, ‘அதுவே முடிவு’& என்று, தவறாகக் கருத்தில் கொண்டு, அத்தோடு தன் ஆன்மீக நன் முயற்சியை முடித்துக் கொண்டு, இறந்து கொண்டே இருக்கின்றது, இன்றுவரை & நம்மானுடம்!

‘இறப்பு’ & என்பது நம் அஜாக்கிரதையால் ஏற்படுகிறது என்கிறார் வள்ளலார். இக்கூற்றை அறிந்தால், மாண்புமிகும் நம் மானுடத்திற்கு நல்லது. அதை அறிவிப்பதற்காகவே, திருவருளால் வெளிப்பட்டுள்ளது, ‘உண்மைக் கடவுள்’ & என்னும் இந்த மெஞ்ஞான நூல். இந்நூல், சிறிதாக இருப்பினும், நம் உண்மை அறிவை எட்டவைக்கும் சுத்த சன்மார்க்கப் பெருநூலாகும். இதை எழுதியவர், நம் சற்குரு வள்ளற் பெருமானேயன்றி வேறு யாருமில்லை!

அழுத்தமான அஞ்ஞானத் திரைகளின் மருள் மறைப்புகளால் தெருள் விளக்கமில்லாத ஆன்மாக்களும், அருள்விளக்கம் பெறவேண்டுமென, நம் வள்ளற் பெருமான், திருவருட் சமூகத்திடம் சிரம்தாழ்ந்து சமர்ப்பித்துள்ள விண்ணப்பங்களிலும் இப்பேருண்மை தெள்ளத் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. அவற்றையெல்லாம் அணு அணுவாய் ஆய்ந்தறிந்து, நாமும் அப்பெருங்கருணைக் கடவுளின் உண்மையை அறிந்துய்யும் பொருட்டு, ‘உண்மைக் கடவுள்’ என்னும் இந்த சுத்த சன்மார்க்க சத்தியஞான நூலைப் படைத்திருப்பது திருமதி கிறியி.அருள் அம்மா அவர்களின் தனித்த அருட்திறமாகும்.

தமிழ்கூறும் நல்லுலகம் மட்டுமல்ல, இந்நூல் ஆங்கில மொழியாக்கம் பெறும்பொழுது, உண்மைக் கடவுளை உள்ளபடி உள்ளங்கை நெற்கனிபோல் காட்டி நம்மையெல்லாம் உய்வடையச்செய்த சகோதரி திருமதி.கிறியி.அருள் அம்மா அவர்களுக்கு எந்நாட்டவரும், என்றென்றும் நன்றியுடைத்தவர்கள் ஆவார்கள் என்பதை இந்நூலை முழுமையாகப் படித்தபின்பு எல்லோரும் உணரலாம். கிறியி.அருள் அவர்களின் சுத்தசன்மார்க்கநெறி பரப்பு பணிக்கு உற்றதுணையாகயிருந்து ஆதரவுதரும் அவர்தம் கணவரை இந்நேரத்தில் பாராட்ட நான் கடமைப்பட்டுள்ளேன்.

இந்நூலை வாசிப்போர், வாசிக்குமிடத்து சுவாசிப்பது காற்றல்ல திருவருளே. எனவே, ஒப்புயர்வின்றி இயற்கையில்தானே உள்ளவராய் விளங்கும் எல்லாமாகிய இயற்கை நிறைவான பூரணர் மகாகாரணர் எல்லாம் வல்ல அருட்பேறறிவுத் தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய உண்மைக்கடவுள், தன்திருவருட் சுதந்திரத்தை நம்மிடத்தே வைத்தருளி, எல்லாப்பற்றுகளுக்கும், பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணமாக உள்ள சாதி, ஆசிரம, சமய மத, மார்க்கங்களின் எந்தவொரு ஆசார வகையும் நம்முள் அணுவளவும் அணுகவிடாது காத்தருளியும்; மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகளில் எந்தவொன்றும் நம்மை எக்காலத்தும் எவ்விடத்தும் நெருங்கவிடாது செய்வித்தருளியும், எல்லா நல்லொழுக்கங்களின் சித்தியாம் அந்தச் சத்திய ஞான ஜோதியை நம்முள்ளே நிரப்பியருளியும்; நம்தேகத்தையே நித்திய தேகமாக்கிக் எக்காலத்தும் அழியாப் பேரின்பப் பூரண சித்திப் பெருவாழ்வை நம் எல்லோருக்கும் நலமோடு நல்கியும் அருள்வார் அருட்பெரும்ஜோதி ஆண்டவர்.---Durai Sathanan,USA.

general-article2.png

general-article2.png

Durai Sathanan
Dear Karunai Sabai, Thank you for posting it here. Please correct the following necessary typos:

இங்கு, புறப்புறத் தேகமென்பது, கண், காது, மூக்கு, வாய், மெய்யெனும் - நம் தூல தேகம் ( our outermost Physical Body); புறத்தேகமென்பது மனம், புத்தி, சித்தமெனும் - நம் கரணதேகம் (our outer Psycho Body or Mind Body); அகத்தேகம் என்பது, நம் உயிராகிய ஜீவதேகம் (our inner Spirit Body); மற்றும், அகத்தின் அகமென்பது, நம் ஆன்ம தேகமாகும் (Our inmost Soul Body). இந்த, ஆன்ம தேகம்தான், எல்லாம் வல்ல நம் இறையருளின் இருப்பாகும்.

Have a Blessed Day! ArutPerumJyothi...Almighty Grace Light/Field...
Wednesday, November 26, 2014 at 19:10 pm by Durai Sathanan