Karunai Sabai-Salai Trust.
WHO ARE சீதேவி, பூதேவி, நீளாதேவி & லக்ஷ்மி ? Explained by Our Vallalar.
பிண்டானுபவ இலக்கணம் Given by Vallalar

2) விஷ்ணு / சீதேவி, பூதேவி, நீளாதேவி

....அதில் ஆவியுண்டாகத் தொப்புளிலிருந்து ஒரு நாடி தோன்றி அதன் மத்தியில் முகந்து கொண்டிருக்கிறது. அதன் மூலமாய் அக்கினியி ருக்கின்றது. அது மூலாக்கினி என்று சொல்லப்படும்.

அது தொப்புளிலிருந்து உண்டாவதால் விஷ்ணு தொப்புளிலிருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

அதன் மேல் இரண்டரை அங்குலத்தில் உந்திக்கு நேராக உட்பாகத்தில் சதுரமாய் ஒரு பையுண்டு. புசித்த அன்னத்தை ஐந்து நாழிகையில் பால் போன்ற ஜலமாய் ருத்திர பாகத்திலுள்ள ஆவி பிரித்து அந்தப் பையில் சேர்க்கின்றது.
அதை க்ஷீராப்தி என்று சொல்லுகிறது.
அந்தப் பையிலிருக்கும் பால் போன்ற ஜலத்தின் மேல் ஆலிலை வடிவையுடைய வயிற்றி னுட்பாகம் படிவதனால் அதே வண்ணமாக ஓராடை கட்டியிருக்கும். அதை ஆலிலையென்று சொல்கின்றது. அந்த ஆடையின் மேல் ஒரு நரம்பு வட்டமாய்த் தலை தூக்கியிருக்கின்றது.

அதைச் சேஷனென்று சொல்லுகின்றது.
அந்தக் குண்டலி வட்ட சேஷனென்னும் நாடி மத்தியில் செம்பினது களிம்பு போன்ற பச்சை மேனியா யொரு சத்தியுண்டு. அதை விஷ்ணுவென்றும், அச்சத்தியில் முன் பின் நடுவென்னும் இடத்தில் அதன் காரணச் சத்து பொன் வண்ணமாயும் அரித்திராவண்ணமாயும் குங்கும வண்ணமாயும் மூன்று உள்ளன.

அவற்றைச் சீதேவி, பூதேவி, நீளாதேவி யெனச் சொல்லுகின்றது. மத்தியில் ஒரு சத்தியிருப்பதால் விஷ்ணு மார்பில் லக்ஷ்மியை வைத்தாரென்பது.

SEETHEVI.jpg

SEETHEVI.jpg

Badhey Venkatesh
good reproduction - copy and paste work from urainadai - Arutpa prose - like this , you can copy and paste the entire prose work in bits and pieces in vspace - good good - keep it up - good service - good sanmarga service
Thursday, August 21, 2014 at 07:08 am by Badhey Venkatesh