Dhayamoolam
விண்ணப்பம்

எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!

இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாச்சார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றா வண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை, எங்களுக்குள், எக்காலத்தும், எவ்விடத்தும் எவ்விதத்தும், எவ்வளவும், விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும். எல்லாமாகிய தனிப்பெருந் தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம் ! வந்தனம்!

-வள்ளலார்