இன்புற்று வாழ்க,
அன்புடையீர்,
அருட்பெருஞ்ஜொதி வள்ளலார் உபதேசித்தபடி நாம் விசார வசத்தினராய் இருந்து நமது ஆன்ம அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ளல்வேண்டும். அப்படி விசாரம் செய்யும்வகையில் அமைக்கப்படட இணையதளம் தான் இது. இத்தளத்தின் வாயிலாக நமது அறிவுத்திறனை சத்விசாரம் மூலம் மேம்படுத்திக் கொள்ளுவதற்க்கும், பரிமாற்றிக் கொள்ளுவதற்க்கும் ஏதுவாக அமைக்கப்படுள்ளது. இத்தளத்தின் மூலம் திருவருட்பா பாடல்கள் சம்பந்தப் பட்ட கேள்விகள், சன்மார்க்க நெறி பற்றிய கேள்விகள் மற்றும் நமது சந்தேகங்கள் அனைத்தினையும் மற்ற அன்பார்களுக்கு தெரிவித்தும் பரிமாற்றிக் கொண்டும் பயன் பெறுவீர்களாக. அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கருணையினால் இயங்கிக் கொண்டுள்ள இத்தளத்தைப் பயன்படுத்தி வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று இன்புற்று பெருவாழ்வு வாழ்வீர்களாக!.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!.
இப்படிக்கு,
குழுவினர்,
வள்ளலார் உலக சமரச சுத்த சன்மார்க்க சேவா சங்கம்.