XML Feed
Tamil Font Help Romanize

தொழிலால் சன்மார்கத்திற்கு தடை   Read (382 times)
on 5/27/2008 5:28:13 AM by Senthil Arunachalam
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


கால பேதத்தாலும் உஷ்ண ஆபாசத்தாலும் தடை நேர்ந்தால், ஒளஷதி வகைகளாலும், பெளதிக மூலங்களாலும் சரபேத, அஸ்தபரிச தந்திரத்தாலும், மூலாங்கப் பிரணவத் தியான சங்கற்பத்தாலும், தடை தவிர்த்துக் கொள்ளல்.
-- இக்து வல்லளார் மொழி.

எமது சன்மார்க்க அன்பர் ஒருவர் இந்த தடைகளை நீக்க வழி அறியாது இருக்கின்றார். அவரின் தொழில் முறைகளே இதற்கு காரணம்.

அவரது தொழிலில்
"பத்து மணி நேரத்திற்கு மேலாக கணிபொறியை காண வேண்டும்.
தொடர்ந்த சித்த விருத்தி இருந்து கொண்டே இருக்க வேண்டும்
குளிர் வசதி அறையில் இருக்க வேண்டும்
ஒரே இடத்தில் அமர்ந்த வண்ணம் வேலை செய்ய வேண்டும்
விரைவில் வேலை முடிக்க வேண்டும் என்ற மன அழுத்ததொடு வேலை இருக்கும்.

இதனால் அவர் உடல் நிலை பாதிக்க பட்டு உள்ளது. அவரால் சன்மார்கத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. தொடர்ந்த தலை வலி, அஜூரன கோளாறு, மூலம் முதலியவற்றால் தொடர்ந்து பிரச்னையில் உள்ளார். மருத்துவங்கள் சரியாக எடு பட வில்லை. தொழிலை விடவும் வழி இல்லை. "
இவ்வாறு அவர் கூறுகிறார்.

இவரின் பூர்வ கர்மாக்கள் தான் இதற்கு காரணமா? இவர்க்கு சரியா ஆறுதலாக என்ன சொல்லலாம்.
Re: தொழிலால் சன்மார்கத்திற்கு தடை  
on 5/27/2008 6:03:10 AM by Senthil Arunachalam
1864ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் நாளன்று இறுக்கம் ரத்தின முதலியாருக்கு வள்ளலார் வரைந்த திருமுகம் அவருடைய மருத்துவத் துறைத் தேர்ச்சியை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

தங்களுக்கு இருமலால் தேகம் அபக்குவமாக இருக்கிறதாக தபாலில் எனக்குத் தெரிவித்தார் அவர் தெரிவித்தது தொடங்கி என் நினைப்பெல்லாம் தங்களிடமாகவே இருக்கிறது.

கடினமான அவுஷதங்களைக் கொள்ள வேண்டாம். முசுமுசுக்கை சமூலங்கொண்டு வந்து பசும்பாலில் ஊறவைத்து உலர்த்தி இடித்துச் சூரணமாக வைத்துக் கொண்டு நித்தியம் காலையில் தேயிலைத் தண்ணீர் காய்ச்சி சாப்பிடுவது போல சலத்தில் போட்டு சுண்ட வைத்து பசும்பால், சர்க்கரை, மிளகுப்பொடி கலந்து கொஞ்சம் கொஞ்சம்மாகச் சாப்பிட்டு வர வேண்டும். உத்தியோகம் தடையாயிருந்தால் அதை விடுத்து தேகத்தைப் பக்குவப்படுத்திக்கொள்ளுங்கள். தேகம் பக்குவமான பிறகு சிவானுகிரகத்தால் உத்யோகம் சம்பாதித்துக் கொள்ளலாம்.

மேலும் ஒரு சில செய்திகளை எழுதியபின்பு தாங்கள் சிவாயநமவென்று சிந்தித்திருப்பார்க்கு அபாயம் ஒருநாளுமில்லை என்பதை சத்தியமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிக்கிறார்.

அன்பர் தேகசுகமின்றி அல்லல் படுகிறார் என்பதை அறிந்துமே, அவருடைய நோயகற்றும் மருத்துவத்தை உடனே எழுதியனுப்பினார். தேக ஆரோக்கியத்தைப் பேணுவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று அனைவருக்கும் உபதேசம் செய்வார். பிறவிப் பிணிக்கு மருந்தை அளிப்பவராக உடற்பிணிக்கு மருந்து தருபவராக தேர்ந்த மருத்துவராகவும் திகழ்ந்த வள்ளலார் வாழ்வு நிகழ்ச்சிகள் ஏராளம் ஏராளம்.


===== எம்முடைய கேள்விகளுக்கு யாமே கண்ட பதிலாம்