வணக்கம்,
எமக்கு தோன்றிய ஐயப்பாட்டை நிவர்த்தி செய்ய வேண்டுமாய் அனைவரையும் கேட்டு கொள்கிறேன்.
எமது சன்மார்க்க அன்பர் ஒருவர் ஏதோ சில காரணங்களினால் ப்ரமச்சர்யத்தை தெரிந்தே தவறியவர். தற்போது அவர் மிகவும் விரக்தியால் தான் சன்மார்கதில் இருக்கும் தகுதியை இழந்து விட்ட தாகவும் இனி அவர் அதில் இருக்க போவதில்லை என்றும் கூறுகிறார். ஆனால் இனி அதுமாதிரி செய்ய மாட்டேன் என்றும் சங்கற்பம் செய்துள்ள தாகவும் சொன்னார்.
தற்போது என்னால் என்ன சொல்ல வேண்டும் என்றே தெரியவில்லை.
அவர் எடுத்தான் முடிவு சரிதான்? இல்லை அவர் எல்லாம் வல்ல தயவுடை தந்தை அருட்பெருஞ்சோதி ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டு சன்மார்க்க வாழ்வில் அக்தாவது சபைக்கு செல்லல் அங்கு உணவு வழகுதல், அகவல் பாராயணம் செய்தல் முதலியவற்றை செய்யலாம் என்று அவரிடம் சொல்லலாமா? இது எனக்கு தெரிய வில்லை.
இங்கு இந்த கேள்வியை கேட்டதில் எதாவது தவறு இருந்தால் என்னை தயவு கூர்ந்து மன்னிக்கவும்.
செந்தில் அருணாசலம்
|
Re: அறிந்து செய்த பாவங்களுக்கும் பரிகாரம்
on 5/19/2008 9:22:15 AM by Ramanujam
வள்ளல் பெருமான் ஒவ்வொன்றுக்கும் தகுதியான நியாயங்களைத் தமது உபதேசத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
அறிந்து செய்த பாவங்களுக்குப் பரிகாரம்.
அறிந்து பாவங்கள் செய்தபின், தனக்குப் பாவம் செய்ததாக எவ்வகையிலாவது தெரிந்தபின்,"நாம் பாவச் செய்கையை முன்னமே தெரிந்தும், மோகத்தாலும், மறதியாலும், அபிமானத்தாலும், அகங்காரத்தாலும், செல்வச் செருக்காலும், தாட்சண்ய உடன்பாட்டாலும், உணவு பற்றியும், புகழ் பற்றியும், வழக்கம் பற்றியும், செய்து விட்டோமே என்று" பச்சாத்தாபப்பட்டுப் பெரியோர்களை யடுத்து, அவர்களால் நியமனம் செய்யப்படும் பிராயச் சித்தங்களைக் கைக்கொண்டு, அவ்வண்ணம் இச் சரீரத்தைத் தவத்தாலும் விரதத்தாலும் இளைக்கச் செய்வதுமன்றி, யாத்திரையாதிய மேற்கொண்டு, புண்ணிய ஸ்தலங்களிற் சென்று வசித்து இயன்ற அலவில் அன்ன விரயஞ் செய்தால் நீங்கும். மேலும், சத்தியற்றவர்களாயும், வார்த்திகர்களாயு முள்ளவர்கள் மகான்களுக்குத் தொண்டு செய்தால் நீங்கும். மகான்கள் நேரிடாத பட்சத்தில், பச்சாத்தாபத்துடன் பாவ காரியங்களைச் செய்யாமலும், பாவிகளுடைய கூட்டத்தில் பழகாமலும், திருவருளைச் சிந்தித்து, அவர்கள் தரத்திற் கொத்த தெய்வங்களைச் சிந்தித்துக் கொண்டிருந்தால் நீங்கும்.
அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும் எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே எந்தைநினத ருட்புகழை இயம்பியிடல் வேண்டும் செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம் திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும் தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும் தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே. (திருவருட்பா)
குற்றம் புரிதல் எனக்கியல் இயல்பே குணமாக் கொள்ளல் உனக்கியல்பே சிற்றம் பலவா இனிச்சிறியேன் செப்பும் முகமன் யாதுளது தெற்றென் றடியேன் சிந்தைதனைத் தெளிவித் துஅச்சந் துயர்தீர்த்தே இற்றைப் பொழுதே அருட்ஜோதி ஈக தருணம் இதுவாமே. (திருவருட்பா)
அருளுடைய பரம்பொருளே மன்றி லாடும் ஆனந்தப் பெருவாழ்வே அன்பு ளோர்தம் தெருளுடைய உளமுழுதும் கோயில் கொண்ட சிவமேமெய் அறிவுருவாம் தெய்வ மேஇம் மருளுடைய மனப்பேதை நாயி னேன்செய் வன்பிழையைச் சிறிதேனும் மதித்தி யாயில் இருளுடைய பவக்கடல்விட் டேறேன் என்னை ஏற்றுவதற் கெண்ணுகஎன் இன்பத் தேவே. (திருவருட்பா)
|
Re: ப்ரமச்சர்யத்தை தவறியவர் ?
on 5/19/2008 12:03:16 PM by Sargurubathem
ராமானுஜம் அவர்கள் எடுத்து காட்டியது எல்லோருக்குமே மிகவும் பயனுள்ளதகவிருக்கும். இந்த மாதிரி வள்ளல் பெருமான் கூறிய கருத்துகளை சரியான இடத்தில் மேற்கோள் காட்டுவது அருமையிலும் அருமை. ஐயா, உங்கள் பணி தொடரட்டும், நலம் பெற வளம் பெற வாழ்த்துகிறோம்.
மற்றுமொரு திருவருட்பா பாட்டு விளக்குகிறது,
செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில் திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை மெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம் மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான் வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன் மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன் பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே
இதல்லாம் வள்ளல் பெருமான் அறிந்தே, நமக்கு அப்பவே சொல்விட்டார்கள் போலும் "தீமைஎலாம் பொறுத்தருள்வான் - சமரசசன் மார்க்கம் மேவுகஎன் றுரைக்கின்றேன்" என்பதை கவனியுங்கள். இதில் அதை விட முக்கிய மான ஒன்று, செய்தாலும் என்னும் தொடக்க வார்த்தை. துரதிஷ்ட வசமாக, ஆசைவிடத்தே சிக்கி ஒரு விசயத்தை செய்ய நேர்ந்தாலும் பிறகு மெய்தாவ அதாவது உண்மையிலே அக்குற்றம் உணர்ந்து நாம் இறைவனைடி நினைத்தால் தனது கருணை என்னும் பொதுத் திறத்தால் மன்னிப்பான்.
|
Re: ப்ரமச்சர்யத்தை தவறியவர் ?
on 5/20/2008 4:37:16 AM by karthikeyan
Dear Friend,
பேருபதேசம்
இப்போது நீங்கள் - இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களாயிருந்தாலும் - சாலைக்குப் போகக் கொஞ்சதினமிருக்கின்றது.
அதற்குள்ளாக நீங்கள் நீங்களும் நல்லொழுக்கத்திற்கு வருவதோடுகூட, மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது.
so please come to நல்லொழுக்கத்திற்கு soon.
http://www.vallalar.org/WebComponents/FrontPage.aspx?ViewName=tmBlogs&WebSiteId=2&ConId=20
anbudan karthikeyan
|
அனைவருக்கும் எமது நன்றி.
இவை அனைத்தையும் அவர்க்கு மேற்கோளாக கட்டி அவரை பழைய மன நிலைமைக்கு வர வைக்க முயற்சிக்கிறேன்.
எமக்கு தெரிந்தவரை அவர் சில உடல் சம்பத்தபட்ட பிரச்சனை உடையவர். காரணம் அந்த ஓய்வு குறைவாக உள்ள மன அழுத்தம் அதிகம் கொண்ட கணிபொறி (software) பணியில் உள்ளவர். அதனால் தன் மனதை கட்டு படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்று நினைக்கிறேன்.
|
Re: ப்ரமச்சர்யத்தை தவறியவர் ?
on 5/20/2008 12:51:04 PM by Ramanujam
அருட்பெருஞ்ஜோதி தயவு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ================================================================================ தங்களது நண்பரை வள்ளல் பெருமான் சொன்ன கீழ்க்கண்ட ஏதாவது ஒரு வகையில்
வசப்படுத்தி, சுத்த சன்மார்க்க வழிக்கு கொண்டு வாருங்கள். எந்தப் பாவத்திற்கும் பிராயச்
சித்தமுண்டு. மனத்தை நல்வழிக்குக் கொண்டு வருவதற்கு, உள்ளும் புறமும் வள்ளல் இருக்கையில்
வாட்டம் ஏன் ? ================================================================================= "என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படி இருந்தாலும் --
1. அவனுக்கு நல்ல வார்த்தை சொல்வேன் 2. மிரட்டிச் சொல்லுவேன் 3. தெண்டன் விழுந்து சொல்லுவேன் 4. அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன் 5. அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன்.
இப்படி எந்த விதத்திலேயாவது நல்ல வழிக்கு வரச்செய்து விடுவேன். நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும்.
==================================================================================
ஆனால் தவற்றினை மீண்டும் மீண்டும் தெரிந்தே செய்தால், இறைவனது இரண்டு
குணங்களான (1) அறக்கருணை (2) மறக்கருணை இவ்விரண்டில், இரண்டாவதில் சொல்லப்
பட்டதற்கு - அவர் ஆளாக வேண்டியதிருக்கும்.
|
|
|
எமக்கு இன்னும் சிலவற்றை விளங்க அறிவிப்பின் மகிழ்வேன் ராமானுஜம் அவர்களே !!! அவற்றை இங்கே குறிப்பிடிருகிறேன்...
௧. மரகருனை
௨. பெரியோர்களை யடுத்து, அவர்களால் நியமனம் செய்யப்படும் பிராயச் சித்தங்களைக் கைக்கொண்டு, அவ்வண்ணம் இச் சரீரத்தைத் தவத்தாலும் விரதத்தாலும் இளைக்கச் செய்வதுமன்றி, யாத்திரையாதிய மேற்கொண்டு, புண்ணிய ஸ்தலங்களிற் சென்று வசித்து இயன்ற அலவில் அன்ன விரயஞ் செய்தால் நீங்கும்.
௩. அவர்கள் தரத்திற் கொத்த தெய்வங்களைச் சிந்தித்துக் கொண்டிருந்தால் நீங்கும்.
|
Quote: மிக்க நன்றி அன்பரே!
|
Re: இறைவனின் அறக்கருணையும் மறக்கருணையும்
on 5/21/2008 2:08:26 AM by Ramanujam
இறைவனின் அறக் கருணை மறக் கருணை============================================================= வள்ளல் பெருமான் திருவருட்பாவில் திருவடிப் புகழ்ச்சி இது குறித்துச் சொல்கிறது.
மறக்கருணை யுந்தனி அறக்கருணை யுந்தந்து வாழ்விக்கும் ஒண்மைப் பதம்.
தனிப் பெருங் கருணையே தன் இயல்பாகக் கொண்டுள்ளவர் அருட் பெருஞ் ஜோதி ஆண்டவர். அந்தத் தனிக் கருணையைத்தான் அக நின்று அனகமாக விளங்கச் செய்ய வேண்டி, இப் பிரபஞ்ச காரியத்தை மேற்கொண்டுள்ளார்.
அக் கருணையின் விளக்கம் அறியப்பட - இந்த மனிதப் பிறப்பு ஏற்பட்டு, பண்பாடடைய வேண்டியிருந்ததாம்.
அச்செயல்தான் அகத்தும் புறத்தும் நிகழும் ஐந்தொழிலாயும், அதில் (1)ஆக்கல், (2) காத்தல், அறக்கருணையாகவும், (3) அழித்தல் மறக்கருணையாயும், (4) மறைத்தல்,(5) அருளல் - கூட அறக் கருணையின்பாற்பட்டதாகவே உள்ளதாம்.
முழுப் பக்குவம் அடையாத வரை ஐந்தொழிலின் இரு கருணைச் செயல்களும் சூழ்ந்து கொண்டேதான் இருக்கும்.
சுவாமி சரவணானந்தா அவர்களின் உரை விளக்கத்திலிருந்து தரப்பட்டுள்ளது.
|
அன்ன விரயஞ் செய்தல் and தரத்திற் கொத்த தெய்வங்கள ???? இதன் பொருள் எனக்கு சரியாக புலப்பட வில்லை !!!
|
Re: அன்ன விரயம் - தரத்திற்கொத்த தெய்வம் விளக்கம்
on 5/21/2008 7:34:48 AM by Ramanujam
அருட்பெருஞ்ஜோதி தயவு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி =======================================================================
கேள்விகள் அனைத்தையும் ஒருசேரக் கேட்பது நலம் பயக்கும்.
(1)அன்ன விரயம் Poor Feeding
என்பது ஏழைகளுக்கு பசி தீர்த்தலாகிய புண்ணிய காரியமாகும். தம்மால் இயன்ற
வரையில் இதனை செய்து வர வேண்டும். பரோபகாரம் (பர + உபகாரம்)
என்பதுவும் இப் பணியில் அடங்கும்.
[b (2) தரத்திற்கொத்த தெய்வம்[/b]
இடையறாத ஒன்றை நினைவு கூர்தல், தியானத்தின் கருத்து.
நல்லின்ப வாழ்வுக் குரிய, தயவுச் செயல்புரியத் தக்க முறையில்
மெய்ப் பொருள் தியானம் வேண்டும். பிறிது எந்தத் தியானத்தாலும்
பெருநலம் சேராது. முதலில் மனத்தூய்மையும், ஓர்மையும் உண்டாக, தயவுடன்
ஒரு தெய்வ வடிவையோ, ஜோதிச் சுடரையோ பார்த்துப் பழக
வேண்டும். பின், புருவ நடு இருந்து, சிர நடுச் சிற் சோதியைப்
பாவித்து, அத்தோடு ஒன்றுதல் வேண்டும். இதற்குத் தெய்வத்
தோத்திர அருட்பாடல்கள் பயன்படும். தூய ஆலயங்கள்,
தியானபீடமாகக் கொள்ளலாம்.
எல்லாம் வல்ல கடவுளை தீபச் சுடரில் அக அருள் ஜோதியில்
தியானிப்பது உத்தமம்.
பிற வடிவங்களில் பாவிப்பது - மத்திமம்.
பிற வடிவங்களையே தெய்வமாகக் கருதித் தியானிப்பது -
அதமம் ஆம்.
முடிவில், அகத் தியானத்தால், உள்ளொளி மயமாவது
அருளின்ப வாழ்வுக்கு உதவுவதாகும்.
அன்பர்களின் பரிபக்குவ நிலைக்குத் தக, மேற்காணும் தெய்வ
வழிபாடு அமையுமென்ப.
(சுவாமி சரவணானந்தா அவர்களின் உரை விளக்கம்)
|
சுவாமி சரவணானந்தா அவர்களின் உரை விளக்கம் எமக்கும் கிடைக்குமா? கிடைக்கும் என்றால் விபரங்கள் பெற விழைகிறேன்.
|
Re: Availability of the Books of Swami Saravanananda
on 5/22/2008 11:38:10 AM by Ramanujam
Arutperunjothi DAEIOU Arutperunjothi Thaniperungarunai Arutperunjothi =================================================================== The books written by Swami Saravanananda are available in the
following address:
Thiru S.R. Ramalingam, Dhayavu Nool Veliyeettu Arakkattalai, Dhayavu Sathiya Gnana Kottam, No.4/12, Nagasamy Iyer Lane, East Car Street, Dindigul, Pin Code No. - 624 001. Tamil Nadu State.
Contact No. Ph: 0451 - 2429912. Cell (Ramalingam) 99767 50609.
|
The books written by Swami Saravanananda
on 5/25/2008 9:34:50 PM by SpaceTeam
please visit this link to see list of books by Swami Saravanaandha http://www.vallalarspace.com/Saravanaananda/Album/151
|
Re: Books written by Swami Saravanaananda
on 5/26/2008 9:43:29 AM by Ramanujam
Rate of the Books written by Swami Saravanaananda.
Even though many books were written by Dindigul Swami Saravanaananda, only, the following books are available at the following address:
Thiru S.R.Ramalingam, Dhayavu Nool Veliyeettu Arakkattalai, Dhayavu Sathiya Gnana Kottam, No.4/12, Nagasamy Iyer Lane, Dindigul (P.O) - Pin Code No. 624 001. Dindigul Dt.
Ph: 0451 - 2429912.
The rate of each book is mentioned below:
வள்ளல் பெருமானின் படைப்புக்கள் பாக்களாகவும், உரைநடைப்பகுதிகளாகவும் உள்ளன. சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை, வள்ளல் பெருமான் வகுத்த வழியில், உரைநடையில் சுவாமி சரவணானந்தா அவர்களால் எழுதப்பட்டுள்ளன.
வரி புத்தகத்தின் பெயர் விலை (இந்திய நாணயத்தில்) ரூ.
1. அருள் அறிவியல் 40/- 2. அருள் விளக்க மாலை 60/- 3. தியானமும் தியாகமும் 45/- 4. மெய் 45/- 5. நடராஜபதி மாலை 40/- 6. ராமலிங்கர் வாழ்க்கை உண்மை 40/- 7. ஞான சரியை 30/- 8. தயா விளக்க மாலை 30/- 9. Saint Ramalingam (English) 25/- 10. சாகாக்கல்வி 15/- 11. குருவிலக்கணம் 30/- 12. மனிதன் யார் ? 12/- 13. சுத்த சன்மார்க்கப் பதி வருகை 35/-
இவ்வளவு குறைந்த விலையில் கிடைக்கின்றனவே என்று யாரும் ஐயமுற வேண்டாம். அனைத்துப் புத்தகங்களுமே அருட் பெரும் பொக்கிஷங்களாகும்.
|
Re: ப்ரமச்சர்யத்தை தவறியவர் ?
on 5/28/2008 4:23:42 AM by Vaddalore
Dear brother Your concern regarding uncontrollable feeling of sex is really mind touch one. Sexual feeling is vigour between 14 to 35 yeras.Sexual feeling is moderate between 35 to 45 yeras.Sexual feeling will be very less in the age 45 to 60 years.After 60 years no sexual passion but only feeling will be there.Now if you are in the age range 14 to 35 years I wll surely appreciate your struggling for overcoming the passion.If you are in other range no need to worry.It will automatically will be solved. Controlling sexual passion will lead to infactuated love towards opposite sex.This problem also to be overcome.Any way our vallalperuman will guide you to divert your mind from sexual to Arutperunjothi. Love in vallalperuman P.ravi Kumar ravi_latha2003@yahoo.com
|
ஆம்... நான் கேள்வி பட்டதும் அவ்வாறே !
ஆன்மீகத்தில், சன்மார்கத்தில், வள்ளல் பெருமானிடத்தில், அருட்பெருஜோதி ஆண்டவரிடத்தில் வைக்கின்ற அதி தீவிர ஆசையே, இந்த சிற்றின்ப ஆசையை வெல்வதற்கான சிறந்த வழியாகும். இதை விடுத்து சிற்றின்பத்தை மட்டும் அடக்கும் வேலையில மட்டுமே இருந்தால் அது அவர்களை வெற்றி கொள்ள கூடிய காலத்தை எதிர் பார்த்துக்கொண்டே இருக்கும்.
|