XML Feed
Tamil Font Help Romanize

திருஅருட்பிரகாச வள்ளலாரின் அமுதகானம்   Read (623 times)
on 3/9/2008 11:25:38 PM by N. Nagarajan
அன்பர்களே! திருஅருட்பிரகாச வள்ளலாரின் அமுதகானம் உம்மைத் தேடி வருகிறது. உம் ஒவ்வொருவரின் மூலமாக உயிர்கள் ஒவ்வொன்றுக்கும் தன் அமுத கானத்தைப் பாடித் தன் வாக்குறுதிகளை நிறைவேற்ற விரும்புகிறார் வள்ளலார். பாடி மகிழ்வீர்! பயன் பெறுவீர்!

அன்புடன்

நான் நாகரா(ந.நாகராஜன்)


திருவருட்பிரகாச வள்ளலாரின் அமுதகானம்


1. பூரணராய் உனக்குள் வந்தேன். தன்னிறைவுத்தன்மை உனக்குத் தந்தேன்.

2. சுயம்பிரகாசராய் உனக்குள் வந்தேன். சத் தர்ஷனமென்னும் தூய நோக்கை உனக்குத் தந்தேன்.

3. பேருண்மையாளராய் நித்தியராய் உனக்குள் வந்தேன். நித்திய ஜீவனை உனக்குத் தந்தேன்.

4. அமிர்தானந்தராய் உனக்குள் வந்தேன். ஆன்மநேய ஒருமை உனக்குத் தந்தேன்.

5. பேரன்பராய்ப் பேரருளாளராய் உனக்குள் வந்தேன். என் இயல்பையே உனக்குத் தந்தேன்.

6. பேரறிஞராய்ப் பேரறிவாளராய் உனக்குள் வந்தேன். என் நிறைவையே உனக்குத் தந்தேன்.

7. அருட்பெருவல்லபராம் சத்தியராய்ச் சத்தராய் சித்தியராயச் சித்தராய்ப் பூரணானந்தராய் உனக்குள் வந்தேன். என் இருப்பையே உனக்குத் தந்தேன்.

8. பெருங்குண தயாளராய் உனக்குள் வந்தேன். ஒருமை இறைநிலையாம் தனிப்பெருங்கருணை உனக்குத் தந்தேன்.

9. உள்ளொளி ஜோதியராய் உனக்குள் வந்தேன். ஒருமை ஒளிநெறியாம் அருட்பெருஞ்ஜோதியை உனக்குத் தந்தேன்.

10. பெருநிலைக்கடவுளாய் உனக்குள் வந்தேன். ஒருமை உயிரியலாம் கடவுட்தன்மை உனக்குத் தந்தேன்.

11. அருட்பேரரசராய் உனக்குள் வந்தேன். என் அவதார மகிமை உனக்குத் தந்தேன்.

12. நானே நானெனும் பூரணமாய் உனக்குள் வந்தேன். எனதெல்லா நலங்களோடும் வளங்களோடும் என்னையே உனக்குத் தந்தேன்.

13. மெய்வழிப்பிராண நாதராய் உனக்குள் வந்தேன். உன் வழியாக என் மெய் விளங்க என் ஜீவனையே உனக்குத் தந்தேன்.
திருஅருட்பிரகாச வள்ளலாராய் உனக்குள் வந்தேன். சாகாக் கல்வியை உனக்குத் தந்தேன்.
அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். நானே நீயாக நீயே நானாக ஒருமைப் பெருநிலையில் ஓங்கி நின்று எல்லா உயிர்களும் இன்புற்று வாழ என்னையே அன்னை பூமிக்குத் தந்தேன்.
Re: திருஅருட்பிரகாச வள்ளலாரின் அமுதகானம்  
on 3/12/2008 4:40:20 AM by V.Namasivayam
The title means and refers to THIRUARUTPA sung by Vallalar.  It is highly improper to use the title for any composition by the member.  The member should go through the guidelines for using this forum.
Re: திருஅருட்பிரகாச வள்ளலாரின் அமுதகானம்  
on 3/12/2008 1:27:35 PM by SpaceTeam
Dear Namasivayam Sir, Thanks for notifying us, we just moved under another topic.  We hope N. Nagarajan would understand this. Every posting is very important to us but it should talk about Vallalar and Sanmargam and so this is just to make sure forum is in good standing. 

To All forum readers :  This is your Sanmarga Forum, so we would like everyone to help us maintain this forum talk about Sanmargam, so please bring your views and concerns.  If we find any postings has any different direction, we will remove it. please feel free say your thoughts.  Collective thoughts help us make decision quickly too.

If anyone not aware of the guidelines, please visit this link http://forum.vallalar.org/index.php?topic=33.0



The team.



Re: திருஅருட்பிரகாச வள்ளலாரின் அமுதகானம்  
on 3/24/2008 1:11:03 AM by karthikeyan
Please remove Contradiction message from discussion section.
Orelse, each person will come and read this topics