www.vallalarspace.com/durai
சுத்த சன்மார்க்கம் சித்தியியல் சுத்த விஞ்ஞானமே!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

அருட்பெரும்ஜோதியை அறிவியல் என்பது அறியாமை
அருட்பெரும்ஜோதியின் அனுபவம் பெறுதல் அறிவுடமை
அனுபவம்பெற்று அறிவுவிளங்க அருளிய மார்க்கம்இஃது
அனுபவம்தந்து அருளில் செலுத்தும் அறிவியலேயாகும்!


சத்தோ சித்தோ ஆய்வுசெய்வது அறிவியலே

சத்தோ சித்தோ பரிசோதிப்பதும் அறிவியலே
சத்தோ அசத்தோ அறிவதென்பது அறிவியலே
சத்தோ அசத்தோ அனுபவமாவது அறிவியலே!


கண்டதெலாம் அநித்தியமே அறிந்துகொண்டோம் அறிவியலால்

உண்டுகளித்ததெலாம் வீணே உண்மையறிந்தோம் அறிவியலால்
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மேன்னைமிகும் அறிவியலாலே
மெய்ப்பொருளை நன்குணர்ந்தால் சுத்தசன்மார்க்கம் அறிவியலே!


எண்டகு சிற்றம்பலம் எந்தவிதம் என்பதுவும்

இறவாத வரமெனும் நிந்தையிலார் அனுபவமும்
குன்றாத இன்பமுறும் குணங்கொள் நம்மார்க்கம்
நன்றாக அறிந்திடு சித்தியியல் சுத்தவிஞ்ஞானமே!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All Possible, I swear on Divine Abode
Exalt HIM - the Almighty only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss!
Let the Grace-Feet reign Grace-Rule!

நன்றி, வணக்கம், சுபம்.
அன்புடன்,
அன்பன் துரை சாத்தணன்

 

4 Comments
Arivoli Muthukumarasamy
எங்கானம் சிந்தியல் = அறிவியல் என்று நீங்கள் மட்டும் தான் கூறி வருகிறீர்கள்
வள்ளல் பெருமான் திருவருட்பாவில் ஒரு இடத்தில் கூட சிந்தியல் = அறிவியல் என்று கூறவில்லை
Tuesday, January 17, 2017 at 01:20 am by Arivoli Muthukumarasamy
ஸ்வாமி  இராஜேந்திரன்
அன்புள்ள அறிவொளி அய்யா! சன்மார்க்கம் ஒரு கருணை மார்க்கம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தஙகள் எழுத்துக்களில் சற்று கருணையை கலந்தால் படித்து ஆனந்தம் அடையலாம். கருணையே சாதனம். நன்றி
Tuesday, January 17, 2017 at 06:38 am by ஸ்வாமி இராஜேந்திரன்
venkatachalapathi baskar
அறிவியல் என்பது காரண-விளைவுகளுக்கிடையே (Cause-Effect) உள்ள தொடர்பினை கூறுவது ஆகும். அங்கனம் எடுத்துக் கொண்டால் சன்மார்க்கமும் அறிவியல் எனக் கூறலாம். மரணமில்லாப் பெருவாழ்வவாழ்வு (விளைவு-Effect) என்ற நிலையினை அடைய உதவும் காரணங்களை(Causes) எடுத்தியம்புவதால் சன்மார்கத்தையும் அறிவியல் எனலாம். பொதுவாக ஆன்மிகம் என்பது சாதாரண அறிவு நிலைக்கு அப்பறாற்பட்ட நிலையினை விளக்குவதால் இதனை மெய்ஞ்ஞானம் என்று கூறுவதே சிறப்பாக இருக்கும்.

"காரண காரியங் காட்டிடு வெளியெனும்
ஆரணச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி"
- அருட்பெருஞ்ஜோதி அகவல், 53-54.
Tuesday, January 17, 2017 at 07:58 am by venkatachalapathi baskar
Durai Sathanan
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

சிந்தியல் இல்லைங் காணும் சித்தியல்
சித்தியல் என்பது அநுபவப் படிப்பாகும்
“சித்தியென் பதுநிலை சேர்ந்த அநுபவம்
அத்திறல் என்றஎன் அருட்பெருஞ் ஜோதி” - அகவல்

அடுத்தவர் பதிவிற்குகிங்கு இடையூறு செய்யாது
படித்தவர் படிப்பவர் இனியிங்கு படிக்கவருகின்ற
அடுத்தவர் அதிபக்குவர் பக்குவர் எனும்பற்பலக்
கருத்தவர் ஆயத்தந்த என்தனிப்பதிவு காண்கவே!

அந்தத் தனிப்பதிவின் தலைப்பு - "சித்தியல் என்பது அநுபவ விஞ்ஞானம்."

நன்றி, வணக்கம், சுபம். அருட்பெருஞ்ஜோதி...
Tuesday, January 17, 2017 at 10:04 am by Durai Sathanan