www.vallalarspace.com/durai
'சுத்த சன்மார்க்கம்' சுத்த அறிவியல் மார்க்கமே. அறிந்திடுவோம்!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

'சுத்தசன்மார்க்கம்' - சீவகாருண்யத் தனிமார்க்கம்/மதம்." - என்பதற்கும், அஃது சுத்த அறிவியல் மார்க்கமே என்பதற்கும் இதோ 'அருட்பா' - ஆதாரங்கள்

அன்பறிவுடையீர்,

" உலக மதங்கள் அனைத்தையும் அந்நியமாக்காது அருள்நிலையில் அவற்றையெலாம் அநந்நியமாய்த் தன்னகத்தே இணைத்து, அவற்றைத் தான் மேலேறும் படிகளாக்கி, அவையெலாம் கடந்து நின்று, நம் மதமெனும் மூடகுணத்தின் தொடர்புகளாகிய, "ஆணவம், கன்மம், மாயை, மாமாயை, திரோதமை" - முதலிய மலங்கள் முற்றாக நீங்கியவிடத்து, நமது நிலைசேர்ந்த அனுபவமாகிய நிர்மலத் தயாநிலையில் அருளனுபமாகி, 'கொல்லாமை - புலால் உண்ணாமை' - போன்ற மெய்யொழுக்கங்களைத் தன்னிடத்தே உடையதாக்கி, உயிர்குலம் அனைத்தும் மகிழ்ந்து விளங்க விளங்கும் அருளொளி நெறியாகிய சீவகாருண்யத் தனிமார்க்கம் (தனிமதம்) நம் சுத்தசன்மார்க்கம்" - என்பதற்கு இதோ 'அருட்பா' - ஆதாரம்;

"எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள்
அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி" - அருட்பெருஞ்ஜோதி அகவல்


" எம்மத நிலையும் நின்னருள் நிலையில்
இலங்குதல் அறிந்தனன் எல்லாம்
சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால்
தனித்துவே றெண்ணிய துண்டோ
செம்மலுன் பாதம் அறியநான் அறியேன்
சிறிதும்இங் கினித்துயர் ஆற்றேன்
இம்மதிக் கடியேன் குறித்தவா றுள்ள
தியற்றுவ துன்கடன் எந்தாய்." - ஆறாம் திருமுறை - பிரிவாற்றாமை


அடுத்து, "இயற்பியல், வேதியல், உயிரியல்" -எனும் வகைப்பாட்டில் 'சித்தியல்' - என்ற அறிவியல்தான் 'சுத்தசன்மார்கம்' - என்பதற்கு, இதோ 'அருட்பா' - ஆதாரம்;

"பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான்
சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால்
நித்திய மாகியே நிகழும் என்பது
சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே." - ஆறாம் திருமுறை - தனித் திருஅலங்கல்

அதனால்தான், சீவகாருண்யமாகிய சீவசவையையும், அண்டபிண்ட சத்துவிசாரமாகிய அறிவியலையும் வள்ளற்பெருமான் நம்மவர்களுக்கு அருளால் அருளி, காலமுள்ள போதே அருளனுபத்தைப் பெற்றுக்கொள்ளச் சொல்கிறார். அனுபவம் ஆவதெலாம் அறிவியலேயென்று அறிந்து கொள்க.

Science is nothing but the systematic study of discovering the nature truth through proven experiences at all times, at all places, and by all. Vallarperuman clearly says that all of us can truly experience the Sithi(Proven Experience) of both Immortality and All Pervading Godliness. This is the Ultimate Proven Experience through Sutha Sanmargam. And thus, 'Sutha Sanmargam' is a Pure Grace Path of Science only! There you go, dears!! And, we can also call 'Sutha sanmargam' as "The Pure Compassionate Scientific Path for the attainment of Ultimate Sithi of our Physical Immortality, Deathless All-Pervading Godliness, and thereby, our Limitless Divine-Bliss forever. Limitless Grace-Energy...

ஆக,

இரத்தினச் சுருக்கமாகச் சொல்லுமிடத்து,

'சுத்த சன்மார்க்கம்' - என்பது இவ்வுலகின்கண்
சுத்த சீவசேவையைச் சுயநலமின்றிச் செய்து
சுத்த அறிவியலால் இயற்கை உண்மையெனும்
சத்தை அறிந்துநம் தத்துவங்களைச் செயித்து
முத்தி முதலான முத்தேகசித்தியெனும் நமது
நித்திய தேகம்கிடைக்கப் பெறற்கு மிகஏதுவான
சாத்திய மார்க்கமாம் இஃது புதுநெறிமட்டுமன்று
சத்திய மாய்அறிந்திடுக உலகப் பொதுநெறியே!

ஆகவே,

மற்றவர் பதிவை மதியாதிடினும் அனுபவம்
பெற்றவர் பதிவை மிதியாதீர் நல்லனுபம்நீர்
உற்றவர் ஆயின் மற்றவரிங்கு கண்ணுற்றிட
சாற்றுக அதைத் தனிப்பதிவாய் எனதன்பே!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All Possible, I swear on Divine Abode
Exalt HIM - the Almighty only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss!
Let the Grace-Feet reign Grace-Rule!

நன்றி, வணக்கம், சுபம்.
அன்புடன்,
அன்பன் துரை சாத்தணன்
7 Comments
Arivoli Muthukumarasamy
// அடுத்து, "இயற்பியல், வேதியல், உயிரியல்" -எனும் வகைப்பாட்டில் 'சித்தியல்' - என்ற அறிவியல்தான் 'சுத்தசன்மார்கம்' - என்பதற்கு, இதோ 'அருட்பா' - ஆதாரம்;

"பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான்
சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால்
நித்திய மாகியே நிகழும் என்பது
சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே." - ஆறாம் திருமுறை - தனித் திருஅலங்கல்//


எங்கானம், அநுபவம் அறிவியல் ஆகுமோ?

http://www.vallalarspace.com/Durai/c/V000023092B - சித்தி = அறிவு(knowledge), சித்தியல் = அறிவியல்
http://www.vallalarspace.com/Durai/c/V000020175B - அருட்பெருஞ் சித்திஎன் அமுதே = Oh! My Nectar - the Limitless Grace Wonder, சித்தி = Wonder

எங்கானம், ஆறாம் திருமுறை அருட்பெருஞ்ஜோதி அட்டகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பில் போது சித்தி=wonder என்றும் (http://www.vallalarspace.com/Durai/c/V000020175B)
சித்தி=அறிவு knowledge என்றும் ((http://www.vallalarspace.com/Durai/c/V000023092B)
முன்னுக்குப்பின் முரணாக கூறி தாங்களும் குழம்பி, சன்மார்க்க சங்கத்தவர்களை குழப்பி வருவது தகுமோ ?


எங்கானம், விங்ஞானம் என்பது ஜீவ அறிவாகிய மனித அறிவுக்கு உட்பட்டது
மெய்ஞானம் ஆன்ம அறிவுக்கு உரியது.
அறிவியல் அல்லது விஞ்ஞானம் சடப் பொருள்களின் அல்லது அசித்து பொருள்களின் தொடர்பை விளக்கும் அஞ்ஞான வெளியின் உண்மை (சத்).

சன்மார்க்க அருளியல் இறைவன் உயிர் என்ற இரு சித்துப் பொருள்களின் தொடர்பை விளக்கும் பெருவெளியின் உண்மை(சத்).

எங்கானம், இருவேறு உண்மைகள் ஒன்று ஆகுமோ?

சன்மார்க்கம் அறிவியற் பூர்வமானது (Scientific - சயின்டிபிக்)

ஆனால் சன்மார்க்கமே அறிவியல் ஆகா!
வள்ளல் பெருமான் சன்மார்க்கத்தையோ அல்லது அருட்பெரும்ஜோதியையோ விஞ்ஞானம் அல்லது அறிவியல் என்று ஒரு இடத்திலும் திருவருட்பாவில் கூறவே இல்லை.
எங்கானம், திருவருட்பாவிலிருந்து ஒரே ஒரு ஆதாரம் காட்ட முடியுமா சன்மார்க்கம் சுத்த அறிவியல் என்று ?!
எங்கானம் சன்மார்க்கம் அல்லது அருட்பெரும்ஜோதி பற்றி வள்ளல் பெருமானை விட தங்களுக்கு அதிக புரிதல் உண்டோ?
Tuesday, January 17, 2017 at 01:12 am by Arivoli Muthukumarasamy
Arivoli Muthukumarasamy
எங்கானம் சிந்தியல் = அறிவியல் என்று நீங்கள் மட்டும் தான் கூறி வருகிறீர்கள்
வள்ளல் பெருமான் திருவருட்பாவில் ஒரு இடத்தில் கூட சிந்தியல் = அறிவியல் என்று கூறவில்லை
Tuesday, January 17, 2017 at 01:19 am by Arivoli Muthukumarasamy
Durai Sathanan
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

'படி மேலே' - என்பது வேறு
'மேல் படி' என்பது வேறாகும்
ஒரு சொல் பலபொருள் அறிக
அஃது இடத்திற் கேற்ப மாறும்

‘சித்தி’ எனும் வார்த்தை, "அறிவு, அநுபவமும், அற்புதம், அற்புதத்திறன், கைகூடுதல், வெற்றி, இன்பம், வீடுபேறு, தபோபலம், எட்டி மரம்,..." - இப்படிப் பல பொருளில் வரும். சித்தி என்றால் சின்னம்மாவையும் குறிக்கும். அதற்காக அருட்பாவில், "சின்னம்மா" - என்று, மொழிபெயர்க்கக் கூடாது. இடம் பொருள் பார்ப்பது தமிழின் மாண்பு!

Experiments in Science are designed for experiences only. அநுபவம் ஆகாத ஒன்று அறிவியல் உண்மை ஆகாது. அறிவியல் உண்மை என்பதும், இயற்கையுண்மை என்பதும், மெய்ஞானம் என்பதும் ஒன்றே. மெய் = உண்மை, ஞானம் = அறிவு அறிகவே!

சொல்லுக்குச் சொல்கொண்டு சூதாடும் ஏடு
சொல்கொண்டு தேடாதே சொல்நின்று தேடு
நூல்கொண்டு தேடுவார் வாய்ப்பந்தல் சாலர்
கால்கண்டு நாடுவர் விடையேறும் ஞானர்!

நன்றி, வணக்கம், சுபம்.
Tuesday, January 17, 2017 at 23:01 pm by Durai Sathanan
Arivoli Muthukumarasamy
//'சுத்தசன்மார்க்கம்' - சீவகாருண்யத் தனிமார்க்கம்/மதம்." - என்பதற்கும், அஃது சுத்த அறிவியல் மார்க்கமே என்பதற்கும் இதோ 'அருட்பா' - ஆதாரங்கள்//
//அருளொளி நெறியாகிய சீவகாருண்யத் தனிமார்க்கம் (தனிமதம்) நம் சுத்தசன்மார்க்கம்" - என்பதற்கு இதோ 'அருட்பா' - ஆதாரம்;

1. "எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள்
அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி" - அருட்பெருஞ்ஜோதி அகவல்//

எங்கானம் சுத்தசன்மார்க்கம் தனிமதம் ஆகுமோ? ஆகும் என்றால்

இப்பாடல் வரிகளின் மெய்ப் பொருள் என்ன?

31. சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி!

58. சாதியு மதமுஞ் சமயமுங் காணா
ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி!!

106. சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி!!!
Thursday, January 19, 2017 at 20:28 pm by Arivoli Muthukumarasamy
Durai Sathanan
தங்கள் கேள்விகளுக்குரிய பதிலை, "சுத்த சன்மார்க்கம் என்பது 'சுத்த மதமாகிய' அருள் மார்க்கமாகும்!" - என்ற, எங்கள் தனிப்பதிவில் காணுங்கள் ஐயா. அவற்றில் ஏதேனும் ஐயப்பாடுகள் இருப்பின் உங்கள் கேள்விகளை அங்கே தொடருங்கள். நன்றி, வணக்கம், சுபம். அருட்பெருஞ்ஜோதி...
Friday, January 20, 2017 at 20:05 pm by Durai Sathanan
Arivoli Muthukumarasamy
//'சுத்த சன்மார்க்கம்' சுத்த அறிவியல் மார்க்கமே. அறிந்திடுவோம்!//

எங்கானம் அறிவு எல்லாம் அறிவியல் ஆகுமோ?

பொதுவாக மனிதன் - தன்னிடம் இருக்கின்ற ஐந்து புலன்களின் வழியாகத் தான் அறிவைப் பெறுகின்றான். வளர்த்துக் கொள்கின்றான். ஆனால் புலன் உணர்வுகளைக் கொண்டு "அறிவியல்" அறிவைத் தான் வளர்த்துக் கொள்ள இயலுமே தவிர புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட "அறிவைப்" பெற்றுக் கொண்டிட இயலாது.
புலன்கள் வழியே நாம் பெறுகின்ற அந்த "அறிவியல் அறிவு" கூட எந்த அளவுக்கு உண்மையானவை? நம்பத் தகுந்தவை தெரியுமா? - இதோ கேள்வி-பதில்:
"மனிதா! நீ எப்படி அறிவைப் பெறுகிறாய்?"
"என் கண்களால் நான் பார்க்கிறேன். அதனால் அறிந்து கொள்கிறேன்."
"உன் கண்களால் பார்த்து அறிந்து கொள்ளும் விஷயத்தில் உனக்கு சந்தேகமே கிடையாதே?"
" என் கண்களால் நானே பார்ப்பதை நான் ஏன் சந்தேகிக்க வேண்டும்?"
"அப்படியானால் 'கானல் நீருக்கு' நீ என்ன விளக்கம் சொல்கிறாய்? கண்ணுக்கு எதிரே இல்லாத நீரை உன் கண்கள் எப்படிக் காட்டியது?"
நண்பனே! உண்மையில் நாம் நமது கண்களால் ஒன்றைப் பார்த்து அறிந்து கொள்வது எப்படி தெரியுமா? நம் கண்களின் எதிரே உள்ள ஒரு பொருளின் பிம்பம் நமது விழித் திரையில் (retina) தலை கீழாக விழுகிறது. அந்த பிம்பம் குறித்து மூளைக்குத் தகவல் அனுப்பப் படுகிறது. மூளை ஒன்றைப் புரிந்து கொள்கிறது. மூளை புரிந்து கொண்டது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். கண்களால் நாம் பெறும் அறிவின் நம்பகத் தன்மை இவ்வளவு தான்! மற்ற புலன்கள் வழி நாம் பெறுகின்ற தகவல்களின் நிலையும் அதே தான்! அதனால் தான் சொன்னார்களோ - "கண்ணால் பார்ப்பதுவும் பொய் - காதால் கேட்பதுவும் பொய்" - என்று!
விஞ்ஞானிகள் ஆய்வு செய்கிறார்களே ஆய்வுக் கூடங்களில். அந்த ஆய்வின் முடிவுகள் எல்லாம் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவை தானா? அவற்றில் சந்தேகங்களுக்கு இடமே இல்லை என்றால் - அதுவும் கேள்விக்குறி தான்! பின் ஏன் நேற்று சொன்ன ஒரு அறிவியல் கறுத்தை இன்று மாற்றிக் கொள்கிறார்கள்?
ஒளி நேர்கோட்டில் பரவுகிறது என்ற கருத்து இன்று எங்கே போயிற்று?
அணுவைப் பிளக்க முடியாது என்று அன்று டால்ட்டன் சொன்ன கோட்பாடு இன்று என்ன ஆனது?
அப்படியிருக்கும் போது இன்று சொல்லப்படுகின்ற அறிவியல் கோட்பாடுகளின் நாளைய கதி என்ன? அவை எதிர்காலத்தில் மாற்றப் படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? மாற்றங்களுக்கு ஆளாகும் அத்துனை அறிவியல் கோட்பாடுகளையும் வெறும் ஊகங்கள் என்றல்லாமல் வேறு எப்படி அழைப்பது?
விஞ்ஞானக் கோட்பாடுகளின் நம்பகத் தன்மை குறித்து பாப்பர் என்ற விஞ்ஞானி என்ன கூறுகிறார் தெடியுமா?
"Theories are often bold conjectures!" - அதாவது அறிவியல் கோட்பாடுகள் பெரும்பாலும் துணிச்சலான கற்பனைகளே! அறிவியல் கோட்பாடுகளின் நம்பகத் தன்மை குறித்துக் கவலைப் படாமல் - இயன்ற அளவுக்கு அதிகம் அதிகமான கோட்பாடுகளை அறிவியல் உலகுக்கு வழங்கிட வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார் டாவிஸ் என்ற விஞ்ஞானி.
"The world of science should be like a classical free enterprise market place, with theories as commodities. When there is a demand for theories (of any sort) it is to the consumer's advantage to allow the largest possible supply...." "விஞ்ஞான உலகம் என்பது சுதந்திரமான ஒரு வியாபரச் சந்தையைப் போல! இந்த சந்தையில் விற்கப் படும் பொருள்: விஞ்ஞானக் கோட்பாடுகள் தாம். ஒரு குறிப்பிட்ட வகைக் கோட்பாடுகளுக்கு "கிராக்கி" ஏற்படும்போது, சந்தைக்கு - எந்த அளவுக்கு இயலுமோ - அந்த அளவுக்கு வகை வகையான கோட்பாடுகளை அனுமதிப்பது - அவைகளைப் பயன் படுத்துபவர்களுக்கு வசதி தானே! நாம் கேட்பது என்னவென்றால் - அறிவியல் கோட்பாடுகளெல்லாம் "வியாபாரப் பொருட்களா"? கிராக்கி இருக்கிறது என்றால் பொய்யான கோட்பாடுகளையும் "விற்பனைக்குக் கொண்டு வந்து விடுவீர்களா?
ஆம்! இது தான் இன்றைய அறிவியல் உலகம்! இங்கே உண்மையும் பொய்யும் கலந்தே விற்பனை செய்யப் படுகின்றன! விழித்துக் கொள்ள வேண்டியது - நம்மைப் போன்ற "வாடிக்கையாளர்கள்" தான்!
இது இப்படி இருக்க - என்னைப் படைத்தது யார்? நான் படைக்கப் பட்டதன் நோக்கம் என்ன? நமது துவக்கமும் முடிவும் என்ன? - என்பன போன்ற வாழ்வியல் கேள்விகளுக்கான விடைகளை இயற்பியல் ஆய்வுக் கூடத்திலோ வேதியியல் ஆய்வுக் கூடத்திலோ ஆய்வு செய்து கண்டு பிடித்து விட இயலுமா?
எனவே தான் சொல்கிறோம். அறிவு இரண்டு வகைப் படும்.
ஒன்று - புலன்களின் மூலமாகப் பெறப் படும் அறிவு.
இரண்டு - புலன்களுக்கு அப்பாற்பட்டவை பற்றிய அறிவு,
நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட அறிவு என்பது புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட அறிவைச் சார்ந்தது.
என்வே - வாழ்க்கை சம்பந்தமான தெளிவான அறிவை -
ஆளுக்கொரு கருத்தினை மனம் போன போக்கில் சொல்லிக் கொண்டிருக்கும் தத்துவ ஞானிகளின் சிந்தனைகள் மூலமாகவோ
ஐம்புலன்களை மட்டுமே நம்பி செயல் படுகின்ற அறிவியலாளர்கள் மூலமாகவோ
பெற்றுக் கொண்டு விட முடியாது!
அப்படியானால் - வாழ்க்கை சம்பந்தப்பட்ட அறிவை, அதாவ்து புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட அறிவை நாம் பெறுவது எங்கனம்?
இறைவனை நம்ப மறுக்கின்ற நாத்திகர்களுக்கு வாழ்க்கை என்பதே ஒரு விபத்துத் தான். ஆனால் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை ஏற்பவர்களுக்கு - புலன் உணர்வுகளுக்கு உட்பட்ட மற்றும் உட்படாத எல்லா அறிவுக்கும் ஆற்றலுக்கும் சொந்தக்காரன் அந்த இறைவனே என்பதைப் புரிந்து கொள்வதில் எந்த வித சிரமமும் இருக்கப் போவதில்லை. ஆம்! எல்லா அறிவுக்கும் சொந்தக் காரனான அந்த ஆண்டவனிடத்தில் இருந்து தான் நாம் வாழ்க்கைக்கான மிகச் சரியான் அறிவைப் பெற்றும் கொள்ள முடியம்?

வள்ளல் பெருமான் சன்மார்க்கத்தையோ அல்லது அருட்பெரும்ஜோதியையோ விஞ்ஞானம் அல்லது அறிவியல் என்று ஒரு இடத்திலும் திருவருட்பாவில் கூறவே இல்லை. மேலும் வள்ளல் பெருமான் ஜீவ அறிவான விஞ்ஞானம் அல்லது அறிவியல் கொண்டு ஆன்ம அறிவான சன்மார்க்கத்தையோ அல்லது அருட்பெரும்ஜோதியையோ விளக்கவில்லை.

எங்கானம் சன்மார்க்கம் அல்லது அருட்பெரும்ஜோதி பற்றி வள்ளல் பெருமானை விட தங்களுக்கு அதிக புரிதல் உண்டோ?
Thursday, January 26, 2017 at 04:02 am by Arivoli Muthukumarasamy
Durai Sathanan
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

கமெண்ட் என்பது சுருக்கமாக இல்லாதுநீண்ட
சிமெண்ட் சுவர்போல பலர் பதிவிற்குஇங்கே
டிராபிக் தடையாதல் கூடாது என்பதற்காகவே
வெரிபிக் விடையாக எம்தனிபதிவு காண்கவே!

அப்பதிவின் தலைப்பு, “'அருள் மார்க்கம்' - மறுப்பிற்குத் தனிஅஞ்சல்”
நன்றி, வணக்கம், சுபம்.
Friday, January 27, 2017 at 23:10 pm by Durai Sathanan