www.vallalarspace.com/durai
துரியம் மயங்கிய கோமாக் கோமாளியா அல்லது ஜாக்கிரதாச் சுகனா?

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

எல்லாஉயிர்களும்இன்புற்றுவாழ்க!

வள்ளல்மலரடிவாழ்க! வாழ்கவே!

திருச்சிற்றம்பலம்

திரு. தாமோதரன் அவர்கள்:

"துரையவர்கள் உட்பட அனைவருக்கும் வணக்கம்.முதலில் ஐந்தவத்தை என்பது சைவ சித்தாந்தத்தில் வரும் கலைச் சொற்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த ஐந்தவத்தை ஏன் ஏற்படுகிறது?ஆணவம் காரணமாகவே இவ்வத்தைகள் ஏற்படுகின்றன.ஆணவம் என்றாலும் ஞான திரோதகம் என்றாலும் இரண்டும் ஒன்றே.திரோதகம் என்றால் மறைப்பு என்பதே பொருள்.ஆன்மாவை மறைப்பது ஆணவம்.வள்ளலார் ஆன்மாவை மறைப்பது ஏழு திரைகள் என்றார்.ஆணவத்தை வள்ளலார் ஒப்புக்கொண்டே ஏழு திரைகளைப் பற்றிக் கூறியுள்ளார்.அவத்தையைப் பற்றி விளக்கினால் கட்டுரை மிகவும் நீண்டுவிடும்.சுருக்கிச் சொல்வதற்கு மன்னிக்கவும்.துரியாதீத அவத்தையில் மூச்சின் இயக்கம் முற்றிலும் இருக்காது.அப்போது உயிரின் இருப்பிடம் மூலாதாரம்.துரிய அவத்தையின்போதுதான் மூச்சு விடும் தொழில் நடைபெறும்.உயிரின் இருப்பிடம் மணிபூரகம் என்னும் வயிற்றுப் பகுதி.கனவும் காணாத உறக்க நிலையே சுழுத்தி அவத்தை.உயிரின் இருப்பிடம் அநாகதம் என்னும் மார்புப் பகுதி.கனவு அவத்தையின்போது உயிரின் இருப்பிடம் கண்டம்-கழுத்து என்னும் விசுத்தி.நனவு என்னும் சாக்கிர அவத்தையில் உயிரின் இருப்பிடம் ஆக்ஞை என்னும் புருவ நடு.சாக்கிர அவத்தையில் உயிருக்குத் தெளிவான அறிவு இருக்கும்.கனவு நிலையில் மயங்கிய அறிவு இருப்பதால் கனவைக் கூடத் தெளிவாக அறிய முடியாது.சுழுத்தியில் மூடிய அறிவு இருப்பதால் ஓன்றையும் உணர முடியாது.ஆனாலும் உறங்குபவரை எழுப்ப முடியும்.துரிய அவத்தையில் உள்ளவரைத் தண்ணீர் தெளித்தாலும் எழுப்ப முடியாது.காரணம் அவர்களின் அறிவு செயல்படாது. இப்போது மனத்தின் தொழிற் பாட்டைக் கவனிக்கலாம்.தெளிந்த மனம் சாக்கிரத்தில்.நனவு அவத்தை யாவரும் அறிந்ததே.கனவு அவத்தையில் மயங்கிய மனம்.அதனால்தான் இறந்தவர்களுடன் கனவில் பேசினாலும் அவர்கள் இறந்து போனவர்கள் என்பது நம் நினைவுக்கு வருவதில்லை.சுழுத்தியில் மூடிய நிலையில் மனம். இதைத்தான் ஆழ் மனம் என்று பிறர் கூறுவர்.கண்ணை மூடினால் காட்சிகள் தெரியாது.இவ்வாறே மூடிய மனம் ஒன்றையும் உணராது.இருப்பினும் உறங்குபவரைத் தட்டி எழுப்ப முடியும்.துரிய அவத்தையில் மனம் முற்றிலும் செயலிழக்கும்.மனத்தின் தொழிற்பாடு எதுவும் இருக்காது.கோமா நிலை என்பதும் இதுவே.துரியாதீத அவத்தையில் மூச்சோட்டம் கூட இருக்காது.சில பிராணிகளின் குளிர் கால உறக்கம் என்பதும் இதுவே யாகும்.இதன் மூலம் தெளிவாகத் தெரியும் உண்மை என்னவெனில் உயிருக்குத்தான் ஐந்தவத்தைகள் உரியன.இதனை மனத்துடன் தொடர்பு படுத்துவதும் அவத்தையைக் கஷ்டம் என்று கூறுவதும் தவறு என்பது தெளிவாகும்.அவத்தை என்றால் என்ன வென்று அறியாமையால் ஏற்பட்டது இத்தவறு.சிவ ஞான முனிவரின் சிவ ஞான மாபாடியத்தைக் கற்றிருந்தால் இத்தகு தவறுகள் ஏற்படா.சித்தாந்தக் கலைச்சொற்களுக்குத் தங்கள் மனம்போல் பொருள் கூறுவது எந்தவகையிலும் நேர்மையாகாது. வணக்கம். வாழ்க. வணக்கம்.

துரை:

" அய்யா வணக்கம் பல, நாம் எல்லா நிலைகளிலும் ஜாக்கிரதத்தில் இருந்து கொண்டு பேசவேண்டும். அப்பொழுதுதான் உண்மை புலப்படும். இல்லையேல் மயக்கம்தான்! மறதிதான்! 

தாஙகள் மாயக்கலப்பில் கிடக்கும்  சமயமதச் சாலங்களை வைத்துத்துக்கொண்டு பேசுகிறீர்கள்! ஏசுகிறீர்கள்!! ஆனால், அனுபவம் வந்தால், "கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதேகற்றதெலாம் பொய்யே நீர்களித்ததெலாம் வீணே…" -என்கின்ற உண்மையறிந்து, சமரசசன்மார்க்க மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து, மெய்ப்பொருள் நன் குணர்ந்து, துரியத்திற்கும் அப்பாலுள்ள இயற்கை இன்பங்களை யெல்லாம் ஜாக்கிரதத்திலேயே அறிந்து அனுபவிப்பீர்கள்.

"சிவஞான முனிவரின் சிவஞானமாபாடியம் கற்றிருந்தால் இத்தகு தவறுகள் ஏற்படா" - என்கிறீர்கள. முதலில் நாம் நம்மை நன்கு அறிந்து கொண்டு விளக்க வேண்டும். இல்லையேல் நாம் எழுத்துவது வெறும் விவாதமாகவும், அதைப் படிக்கும் புதியவர்களைக்குப் பெறும் குழப்பமாகவும்தான் அமையும். சிவஞன மாபாடியக் கிளிப்பேச்சு நமக்கது வீண்பேச்சு!

மனம் உயிரோடும், உயிர் ஆன்மாவோடு சேர்ந்தேதான் இருக்கும். ஏனெனில் அவற்றிற்குத் தனித்த சுயஆற்றல் இல்லை. "வித்து - உயிர்; வித்தின் சத்து - ஆன்மா; வித்தின் விளைவு - மனம்; உற்றுநோக்கில் உண்மையை உணரலாம்!"

"சிவஞானமுனிவரின் நூல்போல் ஒருகோடி கற்றாலும் ஒருபிரயோசனமும் இல்லை என்பது அருளனுபவம் கிட்டும்போது மட்டுமே எட்டும்.' சிவஞானர் கூற்றுப்படி துரியாதீதம் கோமகோமா என்றால், அதாவது மனத்தின் தொழிற்பாடு எதுவும் இருக்காது என்றால், அப்படி அந்த அதிஆழ் மயக்கத்தில் உள்ளவர்களுக்கு, அதற்கும் அப்பாலுள்ள மற்றத் துரிய-துரியாதீத அனுபவங்களான, அதாவது; பரதுரியம், சுத்ததுரியம், குருதுரியம், சிவதுரியம், சத்திதுரியம்,…,சுத்த சிவதுரியம், மற்றும் இவற்றின் அதீதங்களுக்குரிய அனுபவ இடங்களும், அவ்விடங்களுக்குறிய அனந்தபேத உணர்வுகளும் எப்படிப் புலப்படக்கூடும்? இதைச் சற்று நிதானமாகச் சிந்தித்தால் அறிவீனமாகப் பேசுகின்ற அகங்காரம் மனிதனுக்கு ஒருக்காலும் வராது!

"அலைவில்லலாத (Stable) உணர்சிகளுக்கு முதற்காரணமாய் இருப்பது துரிய நன்னிலை" - என்கிறார், நம் வள்ளற்பெருமான். ஆதாரம் சுப்பிரமணியம் உரைநடைப் பக்கம் (448).

உண்மையறியாது, துரியமனம் கோமா நிலையென்றும், துரியாதீத அவத்தையில் மூச்சோட்டம் கூட இல்லாது, சில பிராணிகளின் குளிர் கால உறக்கம் கொள்ளும் என்றும், வீணாகப்பேசி நம்மையும் பிறரையும் கோமகோமாவில் தள்ளியதுதான் இதுவரை கண்டபலன். ஞானிகளின் அனுபத்தைப் பற்றிப் பேசம்போது, அறிவனுபவம் குன்றிய பிராணிகளின் அனுபவம் பொருந்துமோ?

இப்படித்தான், "பல சமஸ்கிருத விளக்கங்களும், வடவாத நூல்களும், ஏனைய வேதாந்த, சித்தாந்த, கலாந்த, நாதாந்த, போதாந்த, யோகாந்த விளக்கங்களும் வியாபகமின்றி வியாப்பியங்களாகிப் போனதோடு, அச்சாத்திரத் தோத்திரங்களில்லெல்லாம் நன்கு தேர்ந்தவர்களும்கூட ,சுழுத்திப் பெருமயக்கத்தை வெல்லமுடியாமலும், துரிய துரியாதீதச் சாக்கிரத இயற்கைப் பேரி்ன்ப ஆனந்தங்களை மயங்காது மரணிக்காது இருந்துகொண்டு அனுபவிக்க முடியாமலும், நேத்ததிரம் கெட்டுக் கிடக்கின்றார்கள்" என்கின்ற உண்மையை நாம் நன்கு அறிந்து கொள்வோமாக!

ஆகவே அறிவோம், எல்லா நிலைகளிலும் நாம் ஜாக்கிரதத்திலேயேஇருக்கக்கூடும் என்று! இருந்தால் இன்பம்! இல்லையேல் மரணம்தான்! வள்ளலார் நம் மரணத்தை, நமது அஜாக்கிரதை என்கிறார்.

ஆழ்ந்து மயங்கி வீழ்ந்து கிடப்பதும், அதற்கும் அப்பால் கோமாவில் கிடந்து அழுந்துவதும், பின் அதிலிருந்து மீளவே முடியாதவர்கள் மரணிப்பதும்:- இவை போன்றவைகள் போதை வஸ்துக்களாலோ அல்லது விபரீத விபத்துக்களாலோ மூளை மண்டலங்கள் பழுதுபடுவதால் ஏற்படுகிறது. இத்தைகய அவத்தைகளைத் துரியம் என்றும், துரியாதீதம் எனறும், அவைகளை, 'அரளனுபவம் /ஞானவிழிப்பனுபவங்களோடுத் தொடர்பு படுத்திப் பேசுவது அபத்தம். சுத்த ஞானிகள் இதுபோன்ற அவததைகளுக்கு ஆளாகிச் சாக மாட்டார்கள்!

அருட்பாவில் கண்ணுறும் துரியம், துரியாதீதம், மற்றும் அதற்கும் மேலும்முள்ள உயரனுபவ நிலைகளில் ஜாக்கிரதத்தில் அனுபவமாகிற இயற்கை இன்பங்கள் மற்றும் பேரின்பங்கள் /ஆனந்தங்கள் இதோ…

"துரியமுங் கடந்த சுகபூ ரணந்தரும்

அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி

சாக்கிராதீதத்தனிவெளியாய்நிறை

வாக்கியசிற்சபையருட்பெருஞ்ஜோதி

ஆக்குறுமவத்தைகளனைத்தையுங்கடந்துமேல்

ஏக்கறநிறைந்தவென்றனியின்பே

உரைமனங்கடந்தாங்கோங்குபொன்மலையே

துரியமேல்வெளியிற்ஜோதிமாமலையே

துரியவாழ்வுடனேசுகபூரணமெனும்

பெரியவாழ்வளித்தபெருந்தனித்தந்தையே

துரியமுங்கடந்ததோர்பெரியவான்பொருளென

உரைசெய்வேதங்களுன்னுமெய்ச்சத்தே

கதிதருதுரியத்தனிவெளிநடுவே

கலந்தரசாள்கின்றகளிப்பே." --- அகவல்

"துரியபதம்அடைந்தபெருஞ்சுத்தர்களும்முத்தர்களும்துணிந்துசொல்லற்

கரியபதம்எனக்களித்தான்அம்பலத்தில்ஆடுகின்றான்அந்தோஅந்தோ." ---அந்தோபத்து

"துரியத்திற்கப்பாலுந்தோன்றும்பொதுவில்

ஜோதித்திருநடம்நான்காணல்வேண்டும்

அறிவில்அறிவைஅறியும்பொதுவில்

ஆனந்தத்திருநடம்நான்காணல்வேண்டும் --தலைவிதோழிக்குஉரைத்தல்

"துரியபதம்கடந்தபெருஞ்சோதிவருகின்றார்

சுகவடிவந்தரஉயிர்க்குத்துணைவர்வருகின்றார்." ---அனுபவமாலை

"துரியமேல்பரவெளியிலேசுகநடம்புரியும்

பெரியதோர்அருட்சோதியைப்பெறுதலேஎவைக்கும்

அரியபேறுமற்றவைஎலாம்எளியவேஅறிமின்

உரியஇம்மொழிமறைமொழிசத்தியம்உலகீர். " ---- உய்வகைகூறல்

"இடம்பெறும்இந்திரியஇன்பம்கரணஇன்பம்உலக

இன்பம்உயிர்இன்பம்முதல்எய்தும்இன்பமாகித்

தடம்பெறும்ஓர்ஆன்மஇன்பம்தனித்தஅறிவின்பம்

சத்தியப்பேரின்பம்முத்திஇன்பமுமாய்அதன்மேல்

நடம்பெறுமெய்ப்பொருள்இன்பம்நிரதிசயஇன்பம்

ஞானசித்திப்பெரும்போகநாட்டரசின்பமுமாய்த்

திடம்பெறஓங்கியஇயற்கைத்தனிஇன்பமயமாம்

திருச்சிற்றம்பலந்தனிலேதெய்வமொன்றேகண்டீர்.

ஆற்றுவிடயானந்தம்தத்துவானந்தம்

அணியோகானந்தம்மதிப்பருஞானானந்தம்

பேற்றுறும்ஆன்மானந்தம்பரமானந்தஞ்சேர்

பிரமானந்தம்சாந்தப்பேரானந்தத்தோ

டேற்றிடும்ஏகானந்தம்அத்துவிதானந்தம்

இயன்றசச்சிதானந்தம்சுத்தசிவானந்த

ஊற்றமதாம்சமரசானந்தசபைதனிலே

ஓங்குகின்றதனிக்கடவுள்ஒருவருண்டேகண்டீர். ----- பதிவிளக்கம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லாஉயிர்களும்இன்புற்றுவாழ்க!

வள்ளல்மலரடிவாழ்க! வாழ்கவே!

திருச்சிற்றம்பலம்

அன்பன்துரை