நாகர்கோயில் சன்மார்க்க செயல்பாடுகள்:
1 வள்ளலாரின் சன்மார்க்க தயவு கருத்துகளை பள்ளி,கல்லூரி மாணவர்கள் புரிந்துகொள்ளும் படி பக்குவமாக எடுத்து சொல்லுவது.
2 இல்லற பெண்களும்,ஆண்களும் சன்மார்க்க கருத்துகளை புரிந்து கொள்ள சன்மார்க்க அறிமுக வகுப்புகளும்,பயற்சி வகுப்புகளும் நடத்துவது.
3 மக்களிடையில் ஜீவ தயவு கொள்கைகளை (உயிர்களின் பசி போக்குதல்,புலால் உண்ணாமை,உயிர் கொலை தவிர்த்தல்)போன்றவற்றின் அவசியத்தை மக்களுக்கு புரிய வைப்பது.
4 வள்ளலாரின் சன்மார்க்கம் என்பது தயவு தான் என்பதை மக்களுக்கு கட்டுரைகள் மூலம் தெரிவிப்பது.வள்ளலாரின் ஒத்த தயவு கருத்து அனுபவங்களை வெளிபடுத்திய திண்டுக்கல் தயவு பிரகாசரின் தயவு புத்தக கருத்துகளை முறையாக எல்லோரும் சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு வெளி படுத்துவது.
5 மாணவர்கள் மற்றும் பெண்கள் திருக்குறள்,திருவருட்பா,அகவல்,சுவாமிகளின் தயவு புத்தகங்கள் போன்றவற்றை பொருள் உணர்ந்து அக உணர்வோடு படிக்க ஊக்குவித்தல்.
6 வள்ளலாரின் சன்மார்க்க செயல்பாடுகளை முடிந்த வரை செய்ய எண்ணுதல்.
7 பிற சன்மார்க்க குழுக்களின் செயல்பாடுகளை ஊக்குவித்தல்.