Anandha Barathi
சின்மய தீபிகை மூலமும் உரையும் - ஒலி நூல் - Chinmaya Deebigai Songs and Explanations- Audio Book MP3
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

"சின்மய தீபிகை" 
(Chinmaya Deebigai)


நூலாசிரியர் : “விருத்தாசலம் குமாரதேவ சுவாமிகள் ஆதீன” முத்தையா சுவாமிகள்

பதிப்பாசிரியர்: “திருஅருட்பிரகாச வள்ளலார்” இராமலிங்க அடிகளார்
(வள்ளலார் பதிப்பித்த மூல பாடத்திற்கு ஏற்ப உரை எழுதியவர்)

உரையாசிரியர்: காஞ்சீபுரம் இராமநந்த யோகியார்


சின்மய தீபிகை அறிமுகம்:

          வள்ளற் பெருமானார் தனது 34 வது அகவையில் சென்னையில் வாழ்ந்த காலத்தில் 1857 ஆம் ஆண்டு முதன்முதலாக "சின்மய தீபிகை" என்னும் நூலினைப் பதிப்பித்தார்கள். பெருமான் நிறைவாக பதிப்பித்தது இந்த நூலே. பெருமானார் பதிப்பில் இன்னூல் ஆசிரியர் குறித்த குறிப்புகள் ஏதும் காணக்கிடைத்தில, பிற்காலப் பதிப்புகளான இராமனந்த யோகியார் பதிப்பு (1907) மற்றும் குமாரதேவராதினப் பதிப்புகளில் ( நல். முருகேச முதலியார் குறிப்புரை பதிப்பு, 1971 & 1997) இன்னூல் விருத்தாசலம் குமாரதேவ சுவாமிகள் ஆதீனத்தின் கருத்தருள் ஒருவரான சொக்கலிங்க சிவப்பிரகாச சுவாமிகளுக்கு (20 ஆம் பட்டம்) குருவாய் விளங்கிய முத்தையா சுவாமிகள் அருளிச் செய்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


     இம்முத்தையா சுவாமிகள் சிறந்த ஞான குருவாய் விளங்கியதாக ஆதீனத்து குரு தோத்திரங்கள் தெரிவிக்கின்ற. சுவாமிகளின் சமாதி, சென்னை மயிலாப்பூரில் தெற்குமாட வீதியில் அமைந்துள்ள குமாரதேவ சுவாமிகள் மடாலயத்தில் அமைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


           சின்மய தீபிகை ஞானநூல் அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தத்தில் அமைந்துள்ளது. இது 119 அருட்பாடல்களைக் கொண்டுள்ளது, 5 பாடல்கள் பாயிரத்திற்கும், 114 பாடல்கள் நூலுக்கும் உரியன. இப்பாடல்கள் யாவும் உலக மயக்கத்தில் கட்டுண்டவர்களுக்கு அறிவுரை கூறும் பொருட்டு, மனத்திற்கும் அறிவுக்கும் நடக்கும் உரையாடலாக அமைந்துள்ளது.


          சின்மய தீபிகை என்றால் சிவஞானத்தை விளங்க துணை செய்யும் விளக்கு என்று பொருள் படும். இப்பெயருக்கு ஏற்றார் போல இன்னூலின் கண் அமைந்த கருத்துக்களும் அவ்வாறே படிப்பேரைத் தெளிவித்து உலக மயக்கத்தை நீக்கி சிவஞானத்தை அடைய வழிகாட்டுகின்றது.


சன்மார்க்க நெறிக்கு ஒருவரை தகுந்தவராக்க இக்கருத்துக்களை அவர்கள் படித்து, உணர்வது அடைப்படையாக அமையும் என்று கருதி வள்ளல் பெருமான் இன்னூலினை பதிப்பித்தார்கள் போலும். இன்னூலின் கருத்தை ஒட்டியே வள்ளல் பெருமானும் அருட்பா முதல் திருமுறையில் "நெஞ்சறிவுறுத்தல்" பாடி அருளியுள்ளார்கள். இந்த ஞான நூலான சின்மய தீபிகையையும், அருட்பா நெஞ்சறிவுறுத்தல் பகுதியையும் அன்பர்கள் படித்து பயன் பெறுக.


    இக்காலத்தில் தேவை கருதி “சின்மய தீபிகை” காஞ்சீபுரம் இராமநந்த யோகியார் விளக்கத்துடன் எழுத்து வடிவிலும் (PDF) ஒலி வடிவிலும் (Audio Book) இங்கு இணைக்கபட்டுள்ளது,  பெரியோர்கள்  இதை ஏற்றும் மற்றவர்கள் இதைப் படித்தும், கேட்டும் பயன் பெறுவார்களாக, இப்பணியை நம் அறிவில் நின்று உணர்த்தி செய்விக்கும் வள்ளல் பெருமான் திருவடிகளுக்கு அனந்தங் கோடி நன்றிகள்.


                             வள்ளல் பெருமான் பதிப்பித்த சின்மய தீபிகை
                                             

00. வள்ளல் பெருமான் பதிப்பித்த சின்மய தீபிகை அறிமுகம்

சின்மய தீபிகை – பாயிரம்:

01. பாடல் எண் 1 - இன்னூல் இனிதே அமைய இறைவனை வழுத்துவது இவ்வாறு என்றது.
02. இறைவனுக்கு அடுத்த நிலையில் உள்ளோர் மெய் ஞானிகள் ஆதலால் அவர்களைப் போற்றுதல்
03. இந்நூலினை பேரின்பம் வேண்டுபவர்களே விரும்புவார்கள் என்றது.
04. இந்நூல் தோன்றியதன் காரணம் இன்னது என்றது.
05. இந்நூலின் அவை அடக்கம்

சின்மய தீபிகை:

01. அறிவுரைக் கூற நெஞ்சை அழைத்தல்
02. மெய் ஞானம் பெற விரும்பாத நெஞ்சை கண்டித்தல்
03. இந்த உலக வாழ்வின் நிலையாமையை உணர்க என்று நெஞ்சுக்கு அறிவுறுத்தல்
04. நான் என்னும் ஆணவத்தால் நாள் கழிப்பது சரியா என்று நெஞ்சக் கடிதல்
05. மாய வாழ்வை மனமே நீ உணராது இருப்பது ஏன் என கோட்பது
06. தான் அடைய விரும்புவது இது என மனம் கூறுவது
07. மனத்துக்கு அறிவு கூறும் விடை
08. மனத்துக்கு அறிவு நிலையாமையைப் பற்றி கூறுதல்

வாழ்க்கை:

09. வாழ்க்கையின் நிலையாமை இது என்றது
10. உள்ளது போதுமென ஆசை அறுவது ஞானம் தோன்ற உபாயம் என்றது.
11. குருவின் திருவருள் முத்திக்கு உபாயம் என்றது.
12. உன்னிலும் தாழ்ந்தோரைக் கண்டு இரங்கு என்றது.
13. வினையின் படி பொருள் வந்து சேரும் என்றது.

சுற்றம்:

14. சுற்றத்தாரின் இயல்புகள் இவை என்றது.
15. சுற்றம் இவ்வாறு அகலும் என்றது.
16. மரணத்தருவாயில் சுற்றங்கள் முத்திக்கு உதவாது என்றது.
17. சுற்றமெலாம் மாயையின் கற்பனை என்றது.
18. இறைவனை சுற்றமென நினைவாய் என்றது.

புகழ்:

19. சுற்றத்தை இகழ்ந்த அறிவை மனம் கோபித்துப் பேசுதல்
20. புகழை விரும்பாமல் இரு என்றது
21. மெய் புகழே நிலையானது என்றது.
22. உலகப் புகழ்ச்சி முத்திக்கு உதவாது என்றது.
23. உலகத்தார் இகழ்ச்சியும் புகழ்ச்சியுன் முத்திப்பயனை தராது என்றது.

மண்ணாசை:

24. அறிவின் மொழி கேட்டு புகழாசை ஒழிந்த மனது, தனக்கு மண்ணாசை நீங்க வில்லை என்றது.
25. மண்ணாசை நீக்கு என்று அறிவு கூறுவது
26. இறைவனின் அருளைப்பெற்ற சற்குருவின் வழி நிற்காமல் ஏன் மண்ணாசை கொண்டாய் என அறிவு கேட்பது.

பொன்னாசை:

27. பொன்சேர்க்கையால் விளைவது இஃது என்றது.
28. பொன்சேர்ப்பினும் நல்வினை இருந்தால் மட்டுமே அதை அனுபவிக்க இயலும் என்றது.
29. அதிக பொருள் சேர்க்கை துன்பம் என்றது.
30. வினைக்கு ஏற்ப பொருள் போக்கும் வரவும் அமையும் என்றது.

குடும்ப பந்தம்:

31. குடும்பத்தை காப்பாற்றவே நான் பொருளாசை கொண்டேன் என மனம் கூறுவது.
32. மனமே குடுபத்தளையை நீயே பிணைத்துக் கொண்டாய் என்று அறிவு கூறுதல்.
33. எல்லோரையும் காக்க இறைவன் உண்டு என்றது
34. எல்லோரையும் தானே காப்பற்றுகிறோம் என்று என்னும் அறியாமை இது என்றது.
35. எல்லோரையும் இறைவன் அருள் நியதியால் காப்பான் என்னும் நம்பிக்கை இல்லாதது ஏன் என்றது.
36. செல்வம் உள்ளோரை சார்ந்து வாழ நினைந்தேன் என்று மனம் கூறுவது.
37. செல்வந்தரிடத்தில் இருந்து பொருள் பெருதல் அறிது என்றது.

இறைவனின் அருள் நியதி:

38. இறைவனின் அருள் நியதியை உணராதது ஏன் என்றது.
39. இறைவனின் கருணைத் தன்மை இது என்றது.
40. இறைவனின் பெருங்கருணை இது என்றது.
41. இறைவன் உயிர்களுக்கு செய்யும் உபகாரம் இவை என்றது.
42. இறைவன் உயிர்களுக்கு கருவினில் செய்யும் உபகாரம் இவை என்றது.

துறவு:

43. துறவு நிலை உடையோர்க்கு உலகம் உபகரிக்கும் என்றது.
44. துறவு நிலை உடையோரின் நிலை இது என்றது.

உணவு:

45. உணவின் மீது ஆசை கொண்ட மனத்தை கடிந்து அறிவு கூறுவது.

சாதியும் மதமும்:

46. சாதி, மத , சமயப் பற்றை நீக்கு என்றது.
47. சாதி, மத , சமய வேற்றுமைகளை கடிந்து கூறுதல்

ஐம்புல இன்பம்:

48. ஐம்புல இன்பத்தால் துன்பமே வரும் என்றது.
49. ஐம்புல இச்சைகளை அடக்க உபாயம் இவை என்றது.
50. குருவின் திருவடியை தியானிக்க பொறி புலன்கள் அடங்கும் என்றது.

புத்திரன்:

51. பிள்ளை ஆசையை நீக்கு என்றது.
52. குருவின் வாக்கைப்போல் துணை ஏதும் இல்லை என்றது.

தேக இச்சை:

53. மனைவியின் இளமை அழகை புகழ்ந்து மனம் பேசுதல்.
54. புலால் உடம்பின் உண்மையை உணர்வாய் என்றது.
55. புலால் உடம்பின் உண்மையை இவ்வாறு உணர்ந்து அறிவாய் என்றது.
56. புலால் உடம்பு அசுத்தம் என்றது
57. புலால் உடம்பை புகழ்தல் கூடாது என்றது.
58. குருவின் உபதேச முறை படி ஏன் நடவாமல் இருக்கின்றாய்? என்றது.
59. எக்கணமும் என்னை தேக இச்சை விடாது என்னைத்தொடர்கின்றது என்று மனம் வருந்துதல்.
60. தன்னுடலை மதியாது இரு என்றது.
61. தன்னுடனின் உண்மையை அறிந்தால் பிற உடலின் மீது ஆசை வாராது என்றது.
62. தன் தேகம் தோல்பாவை என்று உணர் என்றது.
63. உடல் இச்சை நீக்கும் உபாயம் இது என்றது.
64. குருவின் திருவடியில் நாட்டம் வைப்போர்க்கு தேக இச்சை உண்டாகாது என்றது.

உடம்பின் நிலையாமை:

65. மரணம் வருவதற்குள் இறைவனிடம் சரண் புகு என்றது.
66. தேகம் விழுவதற்கு முன் குருஅருள் பெறு என்றது.
67. இந்த உடலிக்கு சொந்தம் யார் என்றது.
68. உயிர் நீங்கினால் பிணம் என வாழ்க்கை துணையும் அஞ்சி நிற்பர் என்றது.
69. உண்மை நிலையை நீ எப்பருவத்தில் உணர்வாய் என்று மனத்தை வினவியது.
70. முதுமையில் மொய்ஞ்ஞான முயற்சி செய்ய இயலாது என்றது.
71. முதுமையில் ஏற்படும் துன்பங்கள் இவை என்றது.
72. முதுமையில் மெய்ஞான முயற்சி செய்வேன் என்ற மனத்தை அறிவு பரிகசித்தது.
73. இளமையில் குருவின் திருவடியை நினைத்து வழிபடு என்றது.
74. இளமையின் பிற்காலத்தில் மெய்ஞான முயற்சி செய்வேன் என மனம் கூறுதல்
75. உயிரானது இந்த உடம்பில் நீண்டகாலம் நிலைத்திருக்க இயலாது என்றது.
76. இந்த உடல் நிலையானது என்று ஒருவரும் ஒப்புக்கொள்ளார்கள் என்றது.
77. நிலையாமையை உணர்ந்த மகான்களின் செயல் இது என்றது.
78. மகான்கள் சத்குருவின் திருவடியை தியானித்து மோன நிலையில் இருப்பர்கள் என்றது.
79. இந்த உடம்பை நெடு நாள் வைத்திருக்க ஆகாது என்றது.
80. அண்டகளுக்கும் அழிவு உண்டு என்றது.
81. யாக்கை நிலை இல்லாதது என்ற உணர்வு வந்தால் ஆசை அரும் என்றது.

சமயங்களின் நிலை:

82. பரம் பொருள் எந்த சமயத்தை சார்ந்தவர் என மனம் கேட்கின்றது.
83. பரம்பொருள் இருப்பை சமயங்கள் உணரா என்றது.
84. தம் தெய்வம் என்று சமயிகள் கடவுளை உரிமை கொண்டார்கள் என்றது.
85. சமய நெறி நீக்கி குருவின் உபதேச வழியில் செல்வாய் என்றது.

குரு உபதேசம்:

86. கடவுளை வணங்கும் பூசை முறை யாது என மனம் வினவுதல்
87. குருவின் உபதேச மொழியை விட வேறு பூசை இல்லை என்றது.
88. குருவை அடையும் வழி யாது என மனம் கேட்டல்.
89. குருவை அடைய முதலில் சற்சன சேர்க்கை வேண்டும் என்றது.

சற்சனர்கள் இயல்பு:

90. சற்சனர்களின் இயல்புகள் இவை என்றது.
91. சற்சனர்களின் பெருங்குணச் செய்கைகள் இவை என்றது.
92. சற்சனர்கள் பொருளாசை கொள்ளார்கள் என்றது.
93. சற்சனர்கள் இல்லறத்தார் ஆயினும் பற்றற்று இருப்பார்கள் என்றது.
94. சற்சனர்கள் இறைவன் திருவடியை என்றும் மறவார்கள் என்றது.
95. சற்சனர்கள் உலக கட்டுப்பாடுகளைக் கருதார்கள் என்றது.
96. சற்சனர்கள் வேதாந்த சித்தாந்த சமரம் உடையோர்கள் என்றது.
97. சற்சனர்கள் எல்லோரையும் சமத்தில் கருதுவார்கள் என்றது.
98. சற்சனர்கள் எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்பார்கள் என்றது.
99. சற்சனர்கள் இந்த உலகம் பொம்மலாட்டம் என எண்ணுவார்கள் என்றது.

இறை இயல்:

100.உலக வாழ்வு இறைவன் ஆட்டும்பொம்மலாட்டம் என்றது.
101. உலக உயிர்களுக்குள் இருந்து இறைவன் எப்படி அவைகளை ஆட்டுவிக்கின்றான்? என மனம் வினவுதல்.
102. உயிர்களுக்குள் கலந்தகலப்பாயும், வேறாகவும் இறைவன் இருந்து ஆட்டுகின்றான் என்றது.
103. இறைவன் எல்லா உயிர்களுகுள்ளும் இருந்தால் ஏன் உயிர்கள் வேறுபட்டு நடக்கின்றன என மனம் வினவுதல்.
104. சுக துக்கம் ஆன்மாவிற்கு ஒரு நடிப்பு என்றது.
105. இறைவன் எல்லாமாக நின்று விளங்குகின்றார் என்றது.
106. ஆன்மாவிற்கு செயலாற்ற சுதந்தரம் இல்லையா? என மனம் வினவுதல்.
107. எல்லாம் இறைவனின் செயலே என்றது.
108. ஆன்மாக்களின் அறிவு இச்சை செயல்களை தூண்டுபவன் இறைவனே என்றது.
109. இறைவனைத் தவிர நினைக்க வேறு பொருள் இல்லை என்றது.
110. உண்மை உணர்ந்த ஞானிகள் மோன நிலையில் நிற்பர் என்றது.
111. இறைவன் வேறாகவும் இருந்து உலகை நடத்துகின்றான் என்றது.
112. நான் யார்? என மனம் வினவுதல்.
113. மோன நிலையால் பெறப்படுகின்ற ஜோதியே ஆன்மா, அதுவே நீ என்றது.
114. சிற்றின்ப, பேரின்ப செயல் எல்லாம் இறைவனின் செயலே என்றது.

உயர்தவ முத்தையா சுவாமிகள் அருளிய சின்மய தீபிகை மூலமும்,
அதற்கு வள்ளல் பெருமானார் பதிப்பின் படி இராமான‌ந்த யோகியார் அருளிய உரையும் முற்றும்.

உயர்தவ முத்தையா சுவாமிகள் திருவடிகள் போற்றி,

திருஅருட்பிரகாச வள்ளலார் திருவடிகள் போற்றி.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


Chinmaya Deebigai_First page.JPG

Chinmaya Deebigai_First page.JPG

Muththyya Swamigal - Author of Chinmaya deebigai.jpg

Muththyya Swamigal - Author of Chinmaya deebigai.jpg

Audio:

Download:

10 Comments
Manohar Srinivasan
Ayya, I listened to your audios for ozhivil odukkam and they are excellent. I think you are coming up with all songs of Chinmaya Dheepikai next. Your service to Sangmarga community is commendable. Vallal Peruman showers his grace through you.

Thanks
Manohar
Wednesday, January 30, 2019 at 17:20 pm by Manohar Srinivasan
Anandha Barathi
Ayya Manihar, Thanks for the comments, Its because of our Peruman grace.
let him bless us to do more work for sanmarkkam.
Saturday, February 9, 2019 at 04:13 am by Anandha Barathi
Sathiyadeepam Sivaguru
சிறப்பு
Thursday, March 7, 2019 at 09:46 am by Sathiyadeepam Sivaguru
Vallalar Groups
Very Good Effort and important basic messages are present in chinmaya theebigai
Friday, April 5, 2019 at 08:56 am by Vallalar Groups
Anandha Barathi
Thank You Ayya, Its Peruman grace.
Friday, April 5, 2019 at 15:01 pm by Anandha Barathi
Anandha Barathi
Hi All,

We have uploaded new Chinmaya deebigai audio books here, Kindly listen and share with others.

Thanks.
Wednesday, April 10, 2019 at 14:11 pm by Anandha Barathi
Anandha Barathi
வணக்கம்,

உயர்தவ முத்தையா சுவாமிகள் அருளிய சின்மய தீபிகை மூலமும், அதற்கு வள்ளல் பெருமானார் பதிப்பின் படி இராமான‌ந்த யோகியார் அருளிய உரையும் (பாடல்கள் 119) ஒலிநூல்களாக‌ முழுவதும் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, அன்பர்கள் செவிமடுத்தும் மற்றவரிடம் பகிர்ந்தும் பயன்பெறுக.

இப்பணி இனிதே நிறைவடைய அருள்புரிந்த வள்ளல் பெருமானின் தனிப்பெருங்கருணைக்கும் அவரின் திருவடிகளுக்கும் வந்தனம்! வந்தனம்! வந்தனம்!
Friday, April 12, 2019 at 13:58 pm by Anandha Barathi
srinivasan sankaranarayanan
dear sir.
thank you for olviloddukkam .Can I GET the historical details such as birth place,samadhi,other contributions of Vallal Kannudia Pillai to the society.
Regards,
s.srinivasan. Mobile--9443156570
Sunday, April 14, 2019 at 07:53 am by srinivasan sankaranarayanan
srinivasan sankaranarayanan
dear sir.
thank you for olviloddukkam .Can I GET the historical details such as birth place,samadhi,other contributions of Vallal Kannudia Pillai to the society.
Regards,
s.srinivasan. Mobile--9443156570
Sunday, April 14, 2019 at 07:53 am by srinivasan sankaranarayanan
Vallalar Groups
great effort by Anadha Bharathi. every sanmarkka followers should listen all songs. it will be eye opening for all basic concepts those who are living in worldly life.
Sunday, April 14, 2019 at 14:33 pm by Vallalar Groups